1அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:யோபு 2:11 யோபு 8:1 யோபு 25:1 யோபு 42:7-9 2நீங்கள் எந்தமட்டும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.யோபு 8:2 யோபு 11:2 யோபு 13:5 யோபு 13:6 யோபு 16:2 யோபு 16:3 3நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குத் தீழ்ப்பானவர்களாயிருப்பானேன்?யோபு 12:7 யோபு 12:8 யோபு 17:4 யோபு 17:10 சங் 73:22 பிரச 3:18 ரோம 12:10 4கோபத்தினால் உம்மைத்தானே பீறுகிற உமதுநிமித்தம் பூமி பாழாய்ப்போகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பேருமோ?யோபு 5:2 யோபு 13:14 யோபு 16:9 யோனா 4:9 மாற் 9:18 லூக் 9:39 5துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும்.யோபு 20:5 நீதி 4:19 நீதி 13:9 நீதி 20:20 நீதி 24:20 6அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோகும்.யோபு 21:17 சங் 18:28 வெளிப் 18:23 7அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவன் ஆலோசனை அவனை விழப்பண்ணும்.யோபு 20:22 யோபு 36:16 சங் 18:36 நீதி 4:12 8அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலிலே நடக்கிறான்.யோபு 22:10 எஸ்தர் 3:9 எஸ்தர் 6:13 எஸ்தர் 7:5 எஸ்தர் 7:10 சங் 9:15 சங் 35:8 நீதி 5:22 நீதி 29:6 எசே 32:3 1தீமோ 3:7 1தீமோ 6:9 2தீமோ 2:26 9கண்ணி அவன் குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.ஏசா 8:14 ஏசா 8:15 10அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.சங் 11:6 எசே 12:13 ரோம 11:9 11சுற்றிலுமிருந்துண்டாகும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களைத் திசைதெரியாமல் அலையப்பண்ணும்.யோபு 6:4 யோபு 15:21 யோபு 20:25 சங் 73:19 எரே 6:25 எரே 20:3 எரே 20:4 எரே 46:5 எரே 49:29 2கொரி 5:11 வெளிப் 6:15 வெளிப் 6:16 12அவன் பெலனைப் பட்டினி தின்றுபோடும்; அவன் பக்கத்தில் கேடு ஆயத்தப்பட்டு நிற்கும்.யோபு 15:23 யோபு 15:24 1சாமு 2:5 1சாமு 2:36 சங் 34:10 சங் 109:10 13அது அவன் அங்கத்தின் பலத்தைப் பட்சிக்கும்; பயங்கரமான மரணமே அவன் அவயவங்களைப் பட்சிக்கும்.யோபு 17:16 யோனா 2:6 14அவன் நம்பிக்கை அவன் கூடாரத்திலிருந்து வேரோடே பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கர ராஜாவினிடத்தில் துரத்தும்.யோபு 8:14 யோபு 11:20 சங் 112:10 நீதி 10:28 மத் 7:26 மத் 7:27 15அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், பயங்கரம் அவன் கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவன் வாசஸ்தலத்தின்மேல் தெளிக்கப்படும்.யோபு 18:12 யோபு 18:13 சகரி 5:4 16கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும்.யோபு 29:19 ஏசா 5:24 ஓசி 9:16 ஆமோ 2:9 மல்கி 4:1 17அவனை நினைக்கும் நினைப்புப் பூமியிலிருந்தழியும், வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும்.யோபு 13:12 சங் 34:16 சங் 83:4 சங் 109:13 நீதி 2:22 நீதி 10:7 18அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.யோபு 3:20 யோபு 10:22 யோபு 11:14 ஏசா 8:21 ஏசா 8:22 யூதா 1:13 19அவன் ஜனத்துக்குள்ளே அவனுக்குப் புத்திரனும் இல்லை பெளத்திரனும் இல்லை; அவன் வீட்டில் மீதியாயிருக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை.யோபு 1:19 யோபு 8:4 யோபு 42:13-16 சங் 109:13 ஏசா 14:21 ஏசா 14:22 எரே 22:30 20அவன் காலத்தோர் அவன் நாளுக்காகத் திடுக்கிட்டதுபோல, பின்னடியாரும் பிரமிப்பார்கள்.உபா 29:23 உபா 29:24 1இரா 9:8 எரே 18:16 21அக்கிரமக்காரன் குடியிருந்த ஸ்தானங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய ஸ்தலம் இதுவே என்பார்கள் என்றான்.யோபு 21:14 யாத் 5:2 நியா 2:10 1சாமு 2:12 1நாளா 28:9 சங் 79:6 எரே 9:3 எரே 10:25 ரோம 1:28 1தெச 4:5 2தெச 1:8 தீத் 1:16