| 1 | அதற்கு யோபு பிரதியுத்தரமாக: |
| 2 | இப்படிப்பட்ட அநேகங் காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; நீங்கள் எல்லாரும் அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர். | யோபு 6:6 யோபு 6:25 யோபு 11:2 யோபு 11:3 யோபு 13:5 யோபு 19:2 யோபு 19:3 யோபு 26:2 யோபு 26:3 யாக் 1:19 |
| 3 | காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? இப்படி நீ உத்தரவுசொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன? | யோபு 6:26 யோபு 8:2 யோபு 15:2 |
| 4 | உங்களைப்போல நானும் பேசக்கூடும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிரே என் தலையைத் துலுக்கவுங்கூடும். | யோபு 6:2-5 யோபு 6:14-5 மத் 7:12 ரோம 12:15 1கொரி 12:26 |
| 5 | ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்குத் திடன்சொல்லுவேன், என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும். | யோபு 4:3 யோபு 4:4 யோபு 6:14 யோபு 29:25 சங் 27:14 நீதி 27:9 நீதி 27:17 ஏசா 35:3 ஏசா 35:4 கலா 6:1 |
| 6 | நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது; நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்? | யோபு 10:1 சங் 77:1-9 சங் 88:15-18 |
| 7 | இப்போது அவர் என்னை இளைத்துப்போகச் செய்தார்; என் கூட்டத்தையெல்லாம் பாழாக்கினீர். | யோபு 3:17 யோபு 7:3 யோபு 7:16 யோபு 10:1 சங் 6:6 சங் 6:7 நீதி 3:11 நீதி 3:12 ஏசா 50:4 மீகா 6:13 |
| 8 | நீர் என்னைச் சுருங்கிப்போகப்பண்ணினது அதற்குச் சாட்சி; என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று, என் முகத்துக்கு முன்பாக உத்தரவு சொல்லும். | யோபு 10:17 ரூத் 1:21 எபே 5:27 |
| 9 | என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைப் பீறுகிறது, என் பேரில் பற்கடிக்கிறான்; என் சத்துரு கொடிய கண்ணினால் என்னைப் பார்க்கிறான். | யோபு 10:16 யோபு 10:17 யோபு 18:4 சங் 50:22 புலம் 3:10 ஓசி 5:14 |
| 10 | எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்தார்கள்; நிந்தையாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; எனக்கு விரோதமாக ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள். | சங் 22:13 சங் 22:16 சங் 22:17 சங் 35:21 லூக் 23:35 லூக் 23:36 |
| 11 | தேவன் என்னை அநியாயக்காரன் வசமாக ஒப்புவித்து, துன்மார்க்கரின் கையில் என்னை அகப்படப்பண்ணினார். | 1சாமு 24:18 சங் 31:8 ரோம 11:32 |
| 12 | நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன்; அவர் என்னை நெருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார். | யோபு 1:2 யோபு 1:3 யோபு 3:26 யோபு 29:3 யோபு 29:18 யோபு 29:19 |
| 13 | அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் ஈரலைத் தப்பவிடாமல் பிளந்தார்; என் பிச்சைத் தரையில் ஊற்றிவிட்டார். | யோபு 6:4 ஆதி 49:23 சங் 7:12 சங் 7:13 |
| 14 | நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரப்பண்ணினார்; பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார். | புலம் 3:3-5 |
| 15 | நான் இரட்டுச்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன். | 1இரா 21:27 ஏசா 22:12 |
| 16 | அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண்ணிமைகளின்மேல் உண்டாயிருக்கிறது. | சங் 6:6 சங் 6:7 சங் 31:9 சங் 32:3 சங் 69:3 சங் 102:3-5 சங் 102:9-5 ஏசா 52:14 புலம் 1:16 |
| 17 | என் கைகளிலே கொடுமையில்லாதிருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும், அப்படியாயிற்று. | யோபு 11:14 யோபு 15:20 யோபு 15:34 யோபு 21:27 யோபு 21:28 யோபு 22:5-9 யோபு 27:6 யோபு 27:7 யோபு 29:12-17 யோபு 31:1-40 சங் 7:3-5 சங் 44:17-21 |
| 18 | பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே; என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக. | எரே 22:29 |
| 19 | இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது எனக்குச் சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார். | 1சாமு 12:5 ரோம 1:9 ரோம 9:1 2கொரி 1:23 2கொரி 11:31 1தெச 2:10 |
| 20 | என் சிநேகிதர் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது. | யோபு 16:4 யோபு 12:4 யோபு 12:5 யோபு 17:2 |
| 21 | ஒரு மனுபுத்திரன் தன் சிநேகிதனுக்காக வழக்காடுகிறதுபோல, தேவனோடே மனுஷனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் உண்டானால் நலமாயிருக்கும். | யோபு 9:34 யோபு 9:35 யோபு 13:3 யோபு 13:22 யோபு 23:3-7 யோபு 31:35 யோபு 40:1-5 பிரச 6:10 ஏசா 45:9 ரோம 9:20 |
| 22 | குறுகின வருஷங்களுக்கு முடிவு வருகிறது; நான் திரும்பிவராதவழியே போவேன். | யோபு 14:5 யோபு 14:14 |