| 1 | என் ஆத்துமா ஜீவனை அரோசிக்கிறது, நான் என் துயரத்துக்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன். | யோபு 3:20-23 யோபு 6:8 யோபு 6:9 யோபு 5:15 யோபு 5:16 யோபு 5:20 யோபு 9:21 யோபு 14:13 எண் 11:15 1இரா 19:4 யோனா 4:3 யோனா 4:8 |
| 2 | நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும்; நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன். | சங் 6:1-4 சங் 25:7 சங் 38:1-8 சங் 109:21 சங் 143:2 ரோம 8:1 |
| 3 | நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் கிரியையை வெறுத்து, துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாய்ப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ? | யோபு 34:5-7 யோபு 34:18-7 யோபு 34:19-7 யோபு 36:7-9 யோபு 36:17-9 யோபு 36:18-9 யோபு 40:2 யோபு 40:8 புலம் 3:2-18 |
| 4 | மாம்சக்கண்கள் உமக்கு உண்டோ? மனுஷன் பார்க்கிறபிரகாரமாய்ப் பார்க்கிறீரோ? | யோபு 9:32 1சாமு 16:7 லூக் 16:15 வெளிப் 1:14 |
| 5 | நீர் என் அக்கிரமத்தைக் கிண்டிக்கிளப்பி, என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு, | சங் 90:2-4 சங் 102:12 சங் 102:24-27 எபிரெ 1:12 2பேது 3:8 |
| 6 | உம்முடைய நாட்கள் ஒரு மனுஷனுடைய நாட்களைப்போலவும், உம்முடைய வருஷங்கள் ஒரு புருஷனுடைய ஜீவகாலத்தைப்போலவும் இருக்கிறதோ? | யோபு 10:14-17 சங் 10:15 சங் 44:21 எரே 2:34 செப் 1:12 யோவா 2:24 யோவா 2:25 1கொரி 4:5 |
| 7 | நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; உம்முடைய கைக்கு என்னைத் தப்புவிக்கிறவன் இல்லை. | யோபு 23:10 யோபு 31:6 யோபு 31:14 யோபு 31:35 யோபு 42:7 சங் 1:6 சங் 7:3 சங் 7:8 சங் 7:9 சங் 17:3 சங் 26:1-5 சங் 139:1 சங் 139:2 சங் 139:21-24 யோவா 21:17 2கொரி 1:12 1தெச 2:10 |
| 8 | உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், என்னை நிர்மூலமாக்குகிறீர். | சங் 119:73 ஏசா 43:7 |
| 9 | களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும். | யோபு 7:7 சங் 25:6 சங் 25:7 சங் 25:18 சங் 89:47 சங் 106:4 |
| 10 | நீர் என்னைப் பால்போல் வார்த்து, தயிர்போல் உறையப்பண்ணினீர் அல்லவோ? | சங் 139:14-16 |
| 11 | தோலையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர். | 2கொரி 5:2 2கொரி 5:3 |
| 12 | எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது. | ஆதி 19:19 மத் 6:25 அப் 17:25 அப் 17:28 |
| 13 | இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும், இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன். | யோபு 23:9 பிரச 8:6 பிரச 8:7 ஏசா 45:15 ரோம 11:33 |
| 14 | நான் பாவஞ்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடீர். | யோபு 13:26 யோபு 13:27 யோபு 14:16 சங் 130:3 சங் 139:1 |
| 15 | நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ! நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்கமாட்டேன்; அவமானத்தால் நிரப்பப்பட்டேன்; நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது. | யோபு 10:7 யோபு 9:29 யோபு 27:7 சங் 9:17 ஏசா 3:11 ஏசா 6:5 மல்கி 3:18 ரோம 2:8 ரோம 2:9 |
| 16 | சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, எனக்கு விரோதமாய் உமது அதிசய வல்லமையை விளங்கப்பண்ணுகிறீர். | ஏசா 38:13 புலம் 3:10 ஓசி 13:7 ஓசி 13:8 ஆமோ 3:8 |
| 17 | நீர் உம்முடைய சாட்சிகளை எனக்கு விரோதமாய் இரட்டிக்கப்பண்ணுகிறீர்; என்மேல் உம்முடைய கோபத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்; போராட்டத்தின்மேல் போராட்டம் அதிகரிக்கிறது. | யோபு 16:8 ரூத் 1:21 |
| 18 | நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன? ஒரு கண்ணும் என்னைக் காணாதபடி, நான் அப்பொழுதே ஜீவித்துப்போனால் நலமாமே. | யோபு 3:10 யோபு 3:11 எரே 15:10 எரே 20:14-18 மத் 26:24 |
| 19 | நான் ஒருக்காலும் இல்லாதது போலிருந்து, கர்ப்பத்திலிருந்து பிரேதக்குழிக்குக் கொண்டுபோகப்பட்டிருப்பேன். | சங் 58:8 |
| 20 | என் நாட்கள் கொஞ்சமல்லவோ? | யோபு 7:6 யோபு 7:7 யோபு 7:16 யோபு 8:9 யோபு 9:25 யோபு 9:26 யோபு 14:1 சங் 39:5 சங் 103:15 சங் 103:16 |
| 21 | காரிருளும் மரணாந்தகாரமுமான இருண்ட தேசமும், இருள்சூழ்ந்த ஒழுங்கில்லாத மரணாந்தகாரமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்துக்கு, நான் போகுமுன்னே, | யோபு 7:8-10 யோபு 14:10-14 2சாமு 12:23 2சாமு 14:14 ஏசா 38:11 |
| 22 | நான் சற்று இளைப்பாறும்படி நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும் என்றான். | யோபு 3:5 யோபு 34:22 யோபு 38:17 சங் 23:4 சங் 44:19 சங் 88:12 எரே 2:6 எரே 13:16 லூக் 16:26 |