| 1 | அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் பிரதியுத்தரமாக: | யோபு 2:11 யோபு 20:1 |
| 2 | ஏராளமான வார்த்தைகளுக்கு உத்தரவு சொல்லவேண்டாமோ? வாய்ச்சாலகன் நீதிமானாய் விளங்குவானோ? | யோபு 16:3 யோபு 18:2 சங் 140:11 நீதி 10:19 அப் 17:18 யாக் 1:19 |
| 3 | உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனுஷர் மவுனமாயிருப்பார்களோ? நீர் பரியாசம்பண்ணும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ? | யோபு 13:4 யோபு 15:2 யோபு 15:3 யோபு 24:25 |
| 4 | என் சொல் சுத்தம் என்றும், நான் தேவரீருடைய பார்வைக்குத் துப்புரவானவன் என்றும் நீர் சொல்லுகிறீர். | யோபு 6:10 யோபு 10:7 1பேது 3:15 |
| 5 | ஆனாலும் தேவன் பேசி, உமக்கு விரோதமாய்த் தம்முடைய உதடுகளைத் திறந்து, | யோபு 23:3-7 யோபு 31:35 யோபு 33:6-18 யோபு 38:1 யோபு 38:2 யோபு 40:1-5 யோபு 40:8-5 யோபு 42:7 |
| 6 | உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; உள்ளபடி பார்த்தால், அது இரட்டிப்புள்ளதாயிருக்கிறது; ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும். | யோபு 15:8 யோபு 15:11 யோபு 28:28 உபா 29:29 சங் 25:14 தானி 2:28 தானி 2:47 மத் 13:35 ரோம 16:25 ரோம 16:26 1கொரி 2:9-11 எபே 3:5 |
| 7 | தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ? | யோபு 5:9 யோபு 26:14 யோபு 37:23 சங் 77:19 சங் 145:3 பிரச 3:11 ஏசா 40:28 மத் 11:27 ரோம 11:33 1கொரி 2:10 1கொரி 2:16 எபே 3:8 |
| 8 | அது வானபரியந்தம் உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக்கூடியது என்ன? | யோபு 22:12 யோபு 35:5 2நாளா 6:18 சங் 103:11 சங் 148:13 நீதி 25:2 நீதி 25:3 ஏசா 55:9 |
| 9 | அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும், சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது. | யோபு 28:24 யோபு 28:25 சங் 65:5-8 சங் 139:9 சங் 139:10 |
| 10 | அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும், அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும், அவரைத் தடைபண்ணுகிறவன் யார்? | யோபு 5:18 யோபு 9:4 யோபு 9:12 யோபு 9:13 யோபு 12:14 யோபு 34:29 ஏசா 41:27 தானி 4:35 |
| 11 | மனுஷருடைய மாயத்தை அவர் அறிவார்; அக்கிரமத்தை அவர் கண்டும், அதைக் கவனியாதிருப்பாரோ? | சங் 94:11 எரே 17:9 எரே 17:10 யோவா 2:24 யோவா 2:25 எபிரெ 4:13 வெளிப் 2:23 |
| 12 | புத்தியில்லாத மனுஷன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான். | சங் 62:9 சங் 62:10 சங் 73:22 சங் 92:6 பிரச 3:18 ரோம 1:22 யாக் 2:20 |
| 13 | நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும். | யோபு 5:8 யோபு 8:5 யோபு 8:6 யோபு 22:21 யோபு 22:22 1சாமு 7:3 2நாளா 12:14 2நாளா 19:3 சங் 78:8 லூக் 12:47 |
| 14 | உம்முடைய கையிலே அக்கிரமம் இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும். | யோபு 4:7 யோபு 22:5 ஏசா 1:15 |
| 15 | அப்பொழுது உம்முடைய முகத்தை மாசில்லாமல் ஏறெடுத்து, பயப்படாமல் திடன்கொண்டிருப்பீர். | யோபு 10:15 யோபு 22:26 ஆதி 4:5 ஆதி 4:6 சங் 119:6 சங் 119:7 2கொரி 1:12 1தீமோ 2:8 1யோவா 2:28 1யோவா 3:19-22 |
| 16 | அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர். | ஆதி 41:51 நீதி 31:7 பிரச 5:20 ஏசா 54:4 ஏசா 65:16 யோவா 16:21 வெளிப் 7:14-17 |
| 17 | அப்பொழுது உம்முடைய ஆயுசுகாலம் பட்டப்பகலைப்பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும்; இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர். | யோபு 42:11-17 சங் 37:6 சங் 92:14 சங் 112:4 நீதி 4:18 ஏசா 58:8-10 மீகா 7:8 மீகா 7:9 சகரி 14:6 சகரி 14:7 மல்கி 4:2 லூக் 2:26-32 |
| 18 | நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் திடனாயிருப்பீர்; தோண்டி ஆராய்ந்து சுகமாய்ப் படுத்துக்கொள்வீர். | யோபு 6:11 யோபு 7:6 யோபு 22:27-29 சங் 43:5 நீதி 14:32 ரோம 5:3-5 கொலோ 1:27 |
| 19 | பயப்படுத்துவாரில்லாமல் நித்திரை செய்வீர்; அநேகர் உமது முகத்தை நோக்கி விண்ணப்பம் பண்ணுவார்கள். | யோபு 42:8 யோபு 42:9 ஆதி 26:26-31 சங் 45:12 நீதி 19:6 ஏசா 60:14 வெளிப் 3:9 |
| 20 | துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டொழிந்து, அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம்போல் அழிந்துபோகும் என்றான். | யோபு 31:16 லேவி 26:16 உபா 28:65 சங் 69:3 புலம் 4:17 |