| 1 | பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன. | எரே 5:22 |
| 2 | நான் கண்ட மிருகம் சிறுத்தையைப் போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. | எரே 5:6 எரே 13:23 தானி 7:6 தானி 7:7 ஓசி 13:7 ஆபகூ 1:8 |
| 3 | அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி, | வெளிப் 13:1 வெளிப் 13:2 வெளிப் 13:14 வெளிப் 17:10 |
| 4 | அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள். | வெளிப் 13:2 வெளிப் 9:20 சங் 106:37 சங் 106:38 1கொரி 10:20-22 2கொரி 4:4 |
| 5 | பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டுமாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது. | தானி 7:8 தானி 7:11 தானி 7:25 தானி 11:36 |
| 6 | அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது. | யோபு 3:1 மத் 12:34 மத் 15:19 ரோம 3:13 |
| 7 | மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது. | வெளிப் 11:7 வெளிப் 12:17 தானி 7:21 தானி 7:25 தானி 8:24 தானி 8:25 தானி 11:36-39 தானி 12:1 |
| 8 | உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். | வெளிப் 13:3 வெளிப் 13:4 வெளிப் 13:14 வெளிப் 13:15 |
| 9 | காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன். | வெளிப் 2:7 வெளிப் 2:11 வெளிப் 2:17 வெளிப் 2:29 |
| 10 | சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும். | யாத் 21:23-25 ஏசா 14:2 ஏசா 33:1 மத் 7:2 |
| 11 | பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது. | வெளிப் 13:1 வெளிப் 11:7 வெளிப் 17:8 |
| 12 | அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படிசெய்தது. | வெளிப் 13:3 வெளிப் 13:14-17 வெளிப் 17:10 வெளிப் 17:11 2தெச 2:4 |
| 13 | அன்றியும், அது மனுஷருக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து, | வெளிப் 16:14 வெளிப் 19:20 யாத் 7:11 யாத் 7:12 யாத் 7:22 யாத் 8:7 யாத் 8:18 யாத் 8:19 யாத் 9:11 உபா 13:1-3 மத் 24:24 மாற் 13:22 அப் 8:9-11 2தெச 2:9 2தெச 2:10 |
| 14 | மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று. | வெளிப் 12:9 வெளிப் 18:23 வெளிப் 19:20 வெளிப் 20:3 வெளிப் 20:10 2இரா 22:20 யோபு 12:16 ஏசா 44:20 எசே 14:9 2தெச 2:9-12 |
| 15 | மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது. | ஆதி 2:7 சங் 135:17 எரே 10:14 எரே 51:17 ஆபகூ 2:19 யாக் 2:26 |
| 16 | அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், | வெளிப் 11:18 வெளிப் 19:5 வெளிப் 19:18 வெளிப் 20:12 2நாளா 15:13 சங் 115:13 அப் 26:22 |
| 17 | அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங்கூடாதபடிக்கும் செய்தது. | வெளிப் 13:16 |
| 18 | இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக் கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. | வெளிப் 1:3 வெளிப் 17:9 சங் 107:43 தானி 12:10 ஓசி 14:9 மாற் 13:14 |