இணை வசன வேதாகமம்

Click to Subscribe

1பேதுரு 5

                   
புத்தகங்களைக் காட்டு
1உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவென்றால்:அப் 11:30 அப் 14:23 அப் 15:4 அப் 15:6 அப் 15:22 அப் 15:23 அப் 20:17 அப் 20:28 அப் 21:18 1தீமோ 5:1 1தீமோ 5:19 தீத் 1:5
2உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,உன்ன 1:8 ஏசா 40:11 எசே 34:2 எசே 34:3 எசே 34:23 மீகா 5:4 மீகா 7:14 யோவா 21:15-17 அப் 20:28
3சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள்.எசே 34:4 மத் 20:25 மத் 20:26 மத் 23:8-10 மாற் 10:42-45 லூக் 22:24-27 1கொரி 3:5 1கொரி 3:9 2கொரி 1:24 2கொரி 4:5 3யோவா 1:9 3யோவா 1:10
4அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.1பேது 5:2 1பேது 2:25 சங் 23:1 ஏசா 40:11 எசே 34:23 எசே 37:24 சகரி 13:7 யோவா 10:11 எபிரெ 13:20
5அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.லேவி 19:32 எபிரெ 13:17
6ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.யாத் 10:3 லேவி 26:41 1இரா 21:29 2இரா 22:19 2நாளா 12:6 2நாளா 12:7 2நாளா 12:12 2நாளா 30:11 2நாளா 32:26 2நாளா 33:12 2நாளா 33:19 2நாளா 33:23 2நாளா 36:12 நீதி 29:23 ஏசா 2:11 ஏசா 57:15 எரே 13:18 எரே 44:10 தானி 5:22 மீகா 6:8 லூக் 14:11 லூக் 18:14 யாக் 4:10 யாக் 5:10
7அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.1சாமு 1:10-18 1சாமு 30:6 சங் 27:13 சங் 27:14 சங் 37:5 சங் 55:22 சங் 56:3 சங் 56:4 மத் 6:25 மத் 6:34 லூக் 12:11 லூக் 12:12 லூக் 12:22 பிலிப் 4:6 எபிரெ 13:5 எபிரெ 13:6
8தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.1பேது 1:13 1பேது 4:7 மத் 24:48-50 லூக் 12:45 லூக் 12:46 லூக் 21:34 லூக் 21:36 ரோம 13:11-13 1தெச 5:6-8 1தீமோ 2:9 1தீமோ 2:15 1தீமோ 3:2 1தீமோ 3:11 தீத் 1:8 தீத் 2:2 தீத் 2:4 தீத் 2:6 தீத் 2:12
9விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.லூக் 4:3-12 எபே 4:27 எபே 6:11-13 யாக் 4:7
10கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;யாத் 34:6 யாத் 34:7 சங் 86:5 சங் 86:15 மீகா 7:18 மீகா 7:19 ரோம 5:20 ரோம 5:21 ரோம 15:5 ரோம 15:13 2கொரி 13:11 எபிரெ 13:20
11அவருக்கு மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.1பேது 4:11 வெளிப் 1:6 வெளிப் 5:13
12உங்களுக்குப் புத்திசொல்லும்படிக்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதானென்று சாட்சியிடும்படிக்கும், நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதி, எனக்குத் தோன்றுகிறபடி உண்மையுள்ள சகோதரனாகிய சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன்.2கொரி 1:19 1தெச 1:1 2தெச 1:1
13உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.சங் 87:4 வெளிப் 17:5 வெளிப் 18:2
14ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடே வாழ்த்துதல் செய்யுங்கள். கிறிஸ்து இயேவுக்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானமுண்டாவதாக. ஆமென்.ரோம 16:16 1கொரி 16:20 2கொரி 13:12 1தெச 5:26
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.