| 1 | அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, | ஆதி 3:16 எஸ்தர் 1:16-20 ரோம 7:2 1கொரி 11:3 1கொரி 14:34 எபே 5:22-24 எபே 5:33-24 கொலோ 3:18 1தீமோ 2:11 1தீமோ 2:12 தீத் 2:3-6 |
| 2 | போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். | 1பேது 3:16 1பேது 1:15 1பேது 2:12 பிலிப் 1:27 பிலிப் 3:20 1தீமோ 4:12 2பேது 3:11 |
| 3 | மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், | 1தீமோ 2:9 1தீமோ 2:10 தீத் 2:3-15 ரோம 12:2 |
| 4 | அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. | சங் 45:13 சங் 51:6 மத் 23:26 லூக் 11:40 ரோம 2:29 ரோம 6:6 ரோம 7:22 2கொரி 4:16 எபே 4:22-24 கொலோ 3:3 கொலோ 3:9 கொலோ 3:10 |
| 5 | இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். | நீதி 31:10 நீதி 31:30 லூக் 8:2 லூக் 8:3 அப் 1:14 அப் 9:36 1தீமோ 2:10 1தீமோ 5:10 தீத் 2:3 தீத் 2:4 |
| 6 | அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள். | ஆதி 18:12 |
| 7 | அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள். | ஆதி 2:23 ஆதி 2:24 நீதி 5:15-19 மல்கி 2:14-16 மத் 19:3-9 1கொரி 7:3 கொலோ 3:19 எபே 5:25-28 எபே 5:33-28 |
| 8 | மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதரசிநேகமுள்ளவர்களும், மனவுருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து, | அப் 2:1 அப் 4:32 ரோம 12:16 ரோம 15:5 1கொரி 1:10 பிலிப் 3:16 |
| 9 | தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள். | 1பேது 2:20-23 நீதி 17:13 நீதி 20:22 மத் 5:39 மத் 5:44 லூக் 6:27-29 ரோம 12:14 ரோம 12:17 ரோம 12:19-21 1கொரி 4:12 1கொரி 4:13 எபே 4:32 1தெச 5:15 |
| 10 | ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, | சங் 34:12-16 |
| 11 | பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி, அதைப்பின்தொடரக்கடவன். | யோபு 1:1 யோபு 2:3 யோபு 28:28 சங் 34:14 சங் 37:27 நீதி 3:7 நீதி 16:6 நீதி 16:17 ஏசா 1:16 ஏசா 1:17 மத் 6:13 யோவா 17:15 |
| 12 | கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது. | உபா 11:12 2நாளா 16:9 சங் 11:4 நீதி 15:3 சகரி 4:10 |
| 13 | நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்? | நீதி 16:7 ரோம 8:28 ரோம 13:3 |
| 14 | நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து; | 1பேது 2:19 1பேது 2:20 1பேது 4:13-16 எரே 15:15 மத் 5:10-12 மத் 10:18-22 மத் 10:39-22 மத் 16:25 மத் 19:29 மாற் 8:35 மாற் 10:29 லூக் 6:22 லூக் 6:23 அப் 9:16 2கொரி 12:10 பிலிப் 1:29 யாக் 1:12 |
| 15 | கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். | எண் 20:12 எண் 27:14 ஏசா 5:16 ஏசா 29:23 |
| 16 | கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடைவர்களாயிருங்கள். | 1பேது 3:21 1பேது 2:19 அப் 24:16 ரோம 9:1 2கொரி 1:12 2கொரி 4:2 1தீமோ 1:5 1தீமோ 1:19 2தீமோ 1:3 எபிரெ 9:14 எபிரெ 13:18 |
| 17 | தீமைசெய்து பாடனுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மை செய்து பாடனுபவிப்பதே மேன்மையாயிருக்கும். | 1பேது 4:19 மத் 26:39 மத் 26:42 அப் 21:14 |
| 18 | ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். | 1பேது 2:21-24 1பேது 4:1 ஏசா 53:4-6 ரோம 5:6-8 ரோம 8:3 2கொரி 5:21 கலா 1:4 கலா 3:13 தீத் 2:14 எபிரெ 9:26 எபிரெ 9:28 |
| 19 | அந்த ஆவியிலே அவர் போய்க்காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். | 1பேது 1:11 1பேது 1:12 1பேது 4:6 நெகே 9:30 வெளிப் 19:10 |
| 20 | அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். | ஆதி 6:3 ஆதி 6:5 ஆதி 6:13 |
| 21 | அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது; | ரோம 5:14 1கொரி 4:6 எபிரெ 9:24 எபிரெ 11:19 |
| 22 | அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. | மாற் 16:19 அப் 1:11 அப் 2:34-36 அப் 3:21 எபிரெ 6:20 எபிரெ 8:1 எபிரெ 9:24 |