இணை வசன வேதாகமம்

Click to Subscribe

யாக்கோபு 3

                   
புத்தகங்களைக் காட்டு
1என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.மல்கி 2:12 மத் 9:11 மத் 10:24 மத் 23:8-10 மத் 23:14-10 யோவா 3:10 அப் 13:1 ரோம 2:20 ரோம 2:21 1கொரி 12:28 எபே 4:11 1தீமோ 2:7 2தீமோ 1:11 1பேது 5:3
2நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.1இரா 8:46 2நாளா 6:36 நீதி 20:9 பிரச 7:20 ஏசா 64:6 ரோம 3:10 ரோம 7:21 கலா 3:22 கலா 5:17 1யோவா 1:8-10
3பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம்.யாக் 1:26 2இரா 19:28 சங் 32:9 சங் 39:1 ஏசா 37:29
4கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும்.சங் 107:25-27 யோனா 1:4 மத் 8:24 அப் 27:14-38
5அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!யாத் 5:2 யாத் 15:9 2இரா 19:22-24 யோபு 21:14 யோபு 21:15 யோபு 22:17 சங் 10:3 சங் 12:2-4 சங் 17:10 சங் 52:1 சங் 52:2 சங் 73:8 சங் 73:9 நீதி 12:18 நீதி 15:2 நீதி 18:21 எரே 9:3-8 எரே 18:18 எசே 28:2 எசே 29:3 தானி 3:15 தானி 4:30 2பேது 2:18 யூதா 1:16 வெளிப் 13:5 வெளிப் 13:6
6நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!நியா 12:4-6 2சாமு 19:43 2சாமு 20:1 2நாளா 10:13-16 2நாளா 13:17 சங் 64:3 சங் 140:3 நீதி 15:1 நீதி 16:27 நீதி 26:20 நீதி 26:21 ஏசா 30:27
7சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், நீர்வாழும் ஜெந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம் மனுஷசுபாவத்தால் அடக்கப்படும், அடக்கப்பட்டதுமுண்டு.மாற் 5:4
8நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.யாக் 3:6 சங் 55:21 சங் 57:4 சங் 59:7 சங் 64:3 சங் 64:4
9அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.சங் 16:9 சங் 30:12 சங் 35:28 சங் 51:14 சங் 57:8 சங் 62:4 சங் 71:24 சங் 108:1 அப் 2:26
10துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.சங் 50:16-20 எரே 7:4-10 மீகா 3:11 ரோம 12:14 1பேது 3:9
11ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?யாக் 3:11
12என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது.ஏசா 5:2-4 எரே 2:21 மத் 7:16-20 மத் 12:33 லூக் 6:43 லூக் 6:44 ரோம 11:16-18
13உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.யாக் 3:1 சங் 107:43 பிரச 8:1 பிரச 8:5 எரே 9:12 எரே 9:23 மத் 7:24 1கொரி 6:5 கலா 6:4
14உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.யாக் 3:16 யாக் 4:1-5 ஆதி 30:1 ஆதி 30:2 ஆதி 37:11 யோபு 5:2 நீதி 14:30 நீதி 27:4 ஏசா 11:13 ஆபகூ 1:3 மத் 27:18 அப் 5:17 அப் 7:9 அப் 13:45 ரோம 1:29 ரோம 13:13 1கொரி 3:3 1கொரி 13:4 2கொரி 12:20 கலா 5:15 கலா 5:21 கலா 5:26 பிலிப் 1:15 பிலிப் 2:3 1தீமோ 6:4 தீத் 3:3 1பேது 2:1 1பேது 2:2
15இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லெளகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.யாக் 3:17 யாக் 1:5 யாக் 1:17 யோவா 3:17 1கொரி 3:3 பிலிப் 3:19
16வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.யாக் 3:14 1கொரி 3:3 கலா 5:20
17பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.யாக் 3:15 யாக் 1:5 யாக் 1:17 ஆதி 41:38 ஆதி 41:39 யாத் 36:2 1இரா 3:9 1இரா 3:12 1இரா 3:28 1நாளா 22:12 யோபு 28:12 யோபு 28:23 யோபு 28:28 நீதி 2:6 ஏசா 11:2 ஏசா 11:3 தானி 1:17 லூக் 21:15 1கொரி 2:6 1கொரி 2:7 1கொரி 12:8
18நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.யாக் 1:20 நீதி 11:18 நீதி 11:28 நீதி 11:30 ஏசா 32:16 ஏசா 32:17 ஓசி 10:12 மத் 5:9 யோவா 4:36 பிலிப் 1:11 எபிரெ 12:11
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.