| 1 | அன்றியும், சகோதரரே, நீங்கள் இன்னின்னபிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம். | 1தெச 2:11 ரோம 12:1 2கொரி 6:1 2கொரி 10:1 எபே 4:1 பிலேமோ 1:9 பிலேமோ 1:10 எபிரெ 13:22 |
| 2 | கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே. | எசே 3:17 மத் 28:20 1கொரி 9:21 2தெச 3:6 2தெச 3:10 |
| 3 | நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, | 1தெச 5:18 சங் 40:8 சங் 143:10 மத் 7:21 மத் 12:50 மாற் 3:35 யோவா 4:34 யோவா 7:17 ரோம 12:2 எபே 5:17 எபே 6:6 கொலோ 1:9 கொலோ 4:12 எபிரெ 10:36 எபிரெ 13:21 1பேது 4:2 1யோவா 2:17 |
| 4 | தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல், | ரோம 6:19 ரோம 12:1 1கொரி 6:15 1கொரி 6:18-20 |
| 5 | உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப்பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: | ரோம 1:24 ரோம 1:26 கொலோ 3:5 |
| 6 | இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார். | யாத் 20:15 யாத் 20:17 லேவி 19:11 லேவி 19:13 உபா 24:7 உபா 25:13-16 நீதி 11:1 நீதி 16:11 நீதி 20:14 நீதி 20:23 நீதி 28:24 ஏசா 5:7 ஏசா 59:4-7 எரே 9:4 எசே 22:13 எசே 45:9-14 ஆமோ 8:5 ஆமோ 8:6 செப் 3:5 மல்கி 3:5 மாற் 10:19 1கொரி 6:7-9 எபே 4:28 யாக் 5:4 |
| 7 | தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். | லேவி 11:44 லேவி 19:2 ரோம 1:7 ரோம 8:29 ரோம 8:30 1கொரி 1:2 எபே 1:4 எபே 2:10 எபே 4:1 2தெச 2:13 2தெச 2:14 2தீமோ 1:9 எபிரெ 12:14 1பேது 1:14-16 1பேது 2:9-12 1பேது 2:21-12 1பேது 2:22-12 |
| 8 | ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான். | 1சாமு 8:7 1சாமு 10:19 யோவா 12:48 |
| 9 | சகோதர சிநேகத்தைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே. | லேவி 19:8 சங் 133:1 யோவா 13:34 யோவா 13:35 யோவா 15:12-17 அப் 4:32 ரோம 12:10 எபே 5:1 எபே 5:2 எபிரெ 13:1 1பேது 3:8 2பேது 1:7 1யோவா 2:10 1யோவா 3:11 1யோவா 3:14-19 1யோவா 3:23-19 1யோவா 4:7-16 |
| 10 | அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்குமுள்ள சகோதரரெல்லாருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரரே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்; | 1தெச 1:7 2கொரி 8:1 2கொரி 8:2 2கொரி 8:8-10 எபே 1:15 கொலோ 1:4 2தெச 1:3 பிலேமோ 1:5-7 |
| 11 | புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு, | நீதி 17:1 பிரச 4:6 புலம் 3:26 2தெச 3:12 1தீமோ 2:2 1பேது 3:4 |
| 12 | நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப்பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம். | 1தெச 5:22 ரோம 12:17 ரோம 13:13 2கொரி 8:20 2கொரி 8:21 பிலிப் 4:8 தீத் 2:8-10 1பேது 2:12 1பேது 3:16 1பேது 3:17 |
| 13 | அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. | ரோம 1:13 1கொரி 10:1 1கொரி 12:1 2கொரி 1:8 2பேது 3:8 |
| 14 | இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். | ஏசா 26:19 ரோம 8:11 1கொரி 15:12-23 2கொரி 4:13 2கொரி 4:14 வெளிப் 1:18 |
| 15 | கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. | 1இரா 13:1 1இரா 13:9 1இரா 13:17 1இரா 13:18 1இரா 13:22 1இரா 20:35 1இரா 22:14 |
| 16 | ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். | ஏசா 25:8 ஏசா 25:9 மத் 16:27 மத் 24:30 மத் 24:31 மத் 25:31 மத் 26:64 அப் 1:11 2தெச 1:7 2பேது 3:10 வெளிப் 1:7 |
| 17 | பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். | 1தெச 4:15 1கொரி 15:52 |
| 18 | ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள். | 1தெச 5:11 1தெச 5:14 ஏசா 40:1 ஏசா 40:2 லூக் 21:28 எபிரெ 12:12 |