இணை வசன வேதாகமம்

Click to Subscribe

1தெசலோனிக்கேயர் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆகையால், நாங்கள் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், அத்தேனே பட்டணத்தில் தனித்துவிடப்படுகிறது நன்மையென்று நினைத்து,1தெச 3:5 1தெச 2:17 எரே 20:9 எரே 44:22 2கொரி 2:13 2கொரி 11:29 2கொரி 11:30
2இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்.அப் 16:1 அப் 17:14 அப் 17:15 அப் 18:5
3இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.சங் 112:6 அப் 2:25 அப் 20:24 அப் 21:13 ரோம 5:3 1கொரி 15:58 எபே 3:13 பிலிப் 1:28 கொலோ 1:23 2தெச 1:4 2தீமோ 1:8 1பேது 4:12-14 வெளிப் 2:10 வெளிப் 2:13
4நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே வந்து நேரிட்டதென்றும் அறிந்திருக்கிறீர்கள்.யோவா 16:1-3 அப் 20:24
5ஆகையால், நான் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், எங்கள் வேலை வீணாய்ப்போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை அனுப்பினேன்.1தெச 3:2 1தெச 3:6 அப் 15:36 2கொரி 7:5-7
6இப்பொழுது தீமோத்தேயு உங்களிடத்திலிருந்து எங்களிடத்தில் வந்து, உங்கள் விசுவாசத்தையும் அன்பையும்குறித்தும், நீங்கள் எப்பொழுதும் எங்களைப் பட்சமாய் நினைத்துக்கொண்டு, நாங்கள் உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறதுபோல நீங்களும் எங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறீர்களென்பதைக் குறித்தும், எங்களுக்கு நற்செய்தி சொன்னதினாலே,அப் 18:1 அப் 18:5
7சகோதரரே, எங்களுக்கு நேரிட்ட எல்லா இக்கட்டிலும் உபத்திரவத்திலும் உங்கள் விசுவாசத்தினாலே உங்களைக் குறித்து ஆறுதலடைந்தோம்.1தெச 3:8 1தெச 3:9 2கொரி 1:4 2கொரி 7:6 2கொரி 7:7 2கொரி 7:13 2யோவா 1:4
8நீங்கள் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் நாங்கள் பிழைத்திருப்போம்.1சாமு 25:6 சங் 30:5 பிலிப் 1:21
9மேலும், நம்முடைய தேவனுக்கு முன்பாக நாங்கள் உங்களைக்குறித்து அடைந்திருக்கிற மிகுந்த சந்தோஷத்திற்காக, நாங்கள் தேவனுக்கு எவ்விதமாய் ஸ்தோத்திரம் செலுத்துவோம்?1தெச 1:2 1தெச 1:3 2சாமு 7:18-20 நெகே 9:5 சங் 71:14 சங் 71:15 2கொரி 2:14 2கொரி 9:15
10உங்கள் முகத்தைக் கண்டு, உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்பொருட்டு, இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறோமே.லூக் 2:37 அப் 26:7 2தீமோ 1:3 வெளிப் 4:8 வெளிப் 7:15
11நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக.1தெச 3:13 ஏசா 63:16 எரே 31:9 மல்கி 1:6 மத் 6:4 மத் 6:6 மத் 6:8 மத் 6:9 மத் 6:14 மத் 6:18 மத் 6:26 மத் 6:32 லூக் 12:30 லூக் 12:32 யோவா 20:17 2கொரி 6:18 கொலோ 1:2 1யோவா 3:1
12நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து,1தெச 4:10 சங் 115:4 லூக் 17:5 2கொரி 9:10 யாக் 1:17 2பேது 3:18
13இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக.1தெச 5:23 ரோம 14:4 ரோம 16:25 1கொரி 1:8 பிலிப் 1:10 2தெச 2:16 2தெச 2:17 1பேது 5:10 1யோவா 3:20 1யோவா 3:21
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.