| 1 | எஜமான்களே, உங்களுக்கும் பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று அறிந்து, வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்யுங்கள். | லேவி 19:13 லேவி 25:39-43 உபா 15:12-15 உபா 24:14 உபா 24:15 நெகே 5:5-13 யோபு 24:11 யோபு 24:12 யோபு 31:13-15 ஏசா 58:3 ஏசா 58:5-9 எரே 34:9-17 மல்கி 3:5 யாக் 2:13 யாக் 5:4 |
| 2 | இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள். | கொலோ 4:12 கொலோ 1:9 1சாமு 12:23 யோபு 15:4 யோபு 27:8-10 சங் 55:16 சங் 55:17 சங் 109:4 லூக் 18:1 ரோம 12:12 எபே 6:18 பிலிப் 4:6 1தெச 5:17 1தெச 5:18 |
| 3 | கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேச வேண்டியபிரகாரமாய்ப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு, | ரோம 15:30-32 எபே 6:19 பிலிப் 1:19 1தெச 5:25 பிலேமோ 1:22 எபிரெ 13:18 எபிரெ 13:19 |
| 4 | திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள். | மத் 10:26 மத் 10:27 அப் 4:29 2கொரி 3:12 2கொரி 4:1-4 |
| 5 | புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். | கொலோ 3:16 சங் 90:12 மத் 10:16 ரோம 16:19 1கொரி 14:19-25 எபே 5:15-17 யாக் 1:5 யாக் 3:13 யாக் 3:17 |
| 6 | அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக. | கொலோ 3:16 உபா 6:6 உபா 6:7 உபா 11:19 1நாளா 16:24 சங் 37:30 சங் 37:31 சங் 40:9 சங் 40:10 சங் 45:2 சங் 66:16 சங் 71:15-18 சங் 71:23-18 சங் 71:24-18 சங் 78:3 சங் 78:4 சங் 105:2 சங் 119:13 சங் 119:46 நீதி 10:21 நீதி 15:4 நீதி 15:7 நீதி 16:21-24 நீதி 22:17 நீதி 22:18 நீதி 25:11 நீதி 25:12 பிரச 10:12 மல்கி 3:16-18 மத் 12:34 மத் 12:35 லூக் 4:22 எபே 4:29 |
| 7 | பிரியமான சகோதரனும், உண்மையுள்ள ஊழியக்காரனும், கர்த்தருக்குள் எனக்கு உடன்வேலையாளுமாயிருக்கிற தீகிக்கு என்பன் என் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான். | எபே 6:21-23 |
| 8 | உங்கள் செய்திகளை அறியவும், உங்கள் இருதயங்களைத் தேற்றவும், | 1கொரி 4:17 2கொரி 12:18 எபே 6:22 பிலிப் 2:28 1தெச 3:5 |
| 9 | அவனையும், உங்களிலொருவனாயிருக்கிற உண்மையும் பிரியமுமுள்ள சகோதரனாகிய ஒநேசிமு என்பவனையும், உங்களிடத்தில் அனுப்பியிருக்கிறேன்; அவர்கள் இவ்விடத்துச் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள். | கொலோ 4:7 பிலேமோ 1:10-19 |
| 10 | என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள். | அப் 19:29 அப் 20:4 அப் 27:2 பிலேமோ 1:24 |
| 11 | யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான். விருத்தசேதனமுள்ளவர்களில் இவர்கள்மாத்திரம் தேவனுடைய ராஜ்யத்தின் பொருட்டு என் உடன்வேலையாட்களாயிருந்து, எனக்கு ஆறுதல் செய்துவந்தார்கள். | அப் 10:45 அப் 11:2 ரோம 4:12 கலா 2:7 கலா 2:8 எபே 2:11 தீத் 1:10 |
| 12 | எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான். | கொலோ 1:7 பிலேமோ 1:23 |
| 13 | இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன். | ரோம 10:2 2கொரி 8:3 |
| 14 | பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். | 2தீமோ 4:11 பிலேமோ 1:24 |
| 15 | லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரரையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள். | ரோம 16:5 1கொரி 16:9 பிலேமோ 1:2 |
| 16 | இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயாசபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள். | 1தெச 5:27 |
| 17 | அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள். | பிலேமோ 1:2 |
| 18 | பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென். | 1கொரி 16:21 2தெச 3:17 |