| 1 | பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. | அப் 15:27 அப் 15:32 அப் 15:34 அப் 15:40 அப் 16:19 அப் 16:25 அப் 16:29 அப் 17:4 அப் 17:15 அப் 18:5 |
| 2 | தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து, | ரோம 1:8 ரோம 1:9 ரோம 6:17 1கொரி 1:4 எபே 1:15 எபே 1:16 பிலிப் 1:3 பிலிப் 1:4 கொலோ 1:3 பிலேமோ 1:4 |
| 3 | நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து, | 1தெச 3:6 2தீமோ 1:3-5 |
| 4 | எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். | 1தெச 1:3 ரோம 8:28-30 ரோம 11:5-7 எபே 1:4 பிலிப் 1:6 பிலிப் 1:7 1பேது 1:2 2பேது 1:10 |
| 5 | எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே. | ஏசா 55:11 ரோம 2:16 2கொரி 4:3 கலா 1:8-12 கலா 2:2 2தெச 2:14 2தீமோ 2:8 |
| 6 | நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி, | 1தெச 2:14 1கொரி 4:16 1கொரி 11:1 2கொரி 8:5 பிலிப் 3:17 2தெச 3:9 |
| 7 | இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள். | 1தெச 4:10 1தீமோ 4:12 தீத் 2:7 1பேது 5:3 |
| 8 | எப்படியெனில், உங்களிடத்திலிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் தொனித்ததுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாயிராதபடிக்கு, தேவனைப்பற்றின உங்கள் விசுவாசம் எங்கும் பிரசித்தமாயிற்று. | ஏசா 2:3 ஏசா 52:7 ஏசா 66:19 ரோம 10:14-18 1கொரி 14:36 2தெச 3:1 வெளிப் 14:6 வெளிப் 22:17 |
| 9 | ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், | 1தெச 1:5 1தெச 1:6 1தெச 2:1 1தெச 2:13 |
| 10 | அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே. | 1தெச 4:16 1தெச 4:17 ஆதி 49:18 யோபு 19:25-27 ஏசா 25:8 ஏசா 25:9 லூக் 2:25 அப் 1:11 அப் 3:21 ரோம 2:7 ரோம 8:23-25 1கொரி 1:7 பிலிப் 3:20 1தெச 1:7 1தெச 2:7 2தீமோ 4:1 தீத் 2:13 எபிரெ 9:28 2பேது 3:12 2பேது 3:14 வெளிப் 1:7 |