| 1 | ஓரேபிலே இஸ்ரவேல் புத்திரரோடே பண்ணிக்கொண்ட உடன்படிக்கையை அல்லாமல், மோவாபின் தேசத்திலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணக் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் இவைகளே. | உபா 29:12 உபா 29:21 உபா 29:25 லேவி 26:44 லேவி 26:45 2இரா 23:3 எரே 11:2 எரே 11:6 எரே 34:18 அப் 3:25 |
| 2 | மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் வரவழைத்து, அவர்களை நோக்கி: எகிப்து தேசத்தில் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பார்வோனுக்கும் அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும் அவனுடைய தேசமுழுவதற்கும், | யாத் 8:12 யாத் 19:4 யோசு 24:5 யோசு 24:6 சங் 78:43-51 சங் 105:27-36 |
| 3 | கர்த்தர் செய்த பெரிய சோதனைகளையும், பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்ணாரக் கண்டீர்களே. | உபா 4:32-35 உபா 7:18 உபா 7:19 நெகே 9:9-11 |
| 4 | ஆகிலும் கர்த்தர் உங்களுக்கு உணரத்தக்க இருதயத்தையும், காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க காதுகளையும் இந்நாள்வரைக்கும் கொடுக்கவில்லை. | உபா 2:30 நீதி 20:12 ஏசா 6:9 ஏசா 6:10 ஏசா 63:17 எசே 36:26 மத் 13:11-15 யோவா 8:43 யோவா 12:38-40 அப் 28:26 அப் 28:27 ரோம 11:7-10 2கொரி 3:15 எபே 4:18 2தெச 2:10-12 2தீமோ 2:25 யாக் 1:13-17 |
| 5 | கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்; உங்கள் மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை. | உபா 1:3 உபா 8:2 |
| 6 | நீங்கள் அப்பம் சாப்பிடவும் இல்லை, திராட்சரசமும், மதுவும் குடிக்கவும் இல்லை என்றார். | உபா 8:3 யாத் 16:12 யாத் 16:35 நெகே 9:15 சங் 78:24 சங் 78:25 |
| 7 | நீங்கள் இவ்விடத்துக்கு வந்தபோது, எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும், பாசானின் ராஜாவாகிய ஓகும் நம்மோடே யுத்தஞ்செய்யப் புறப்பட்டார்கள்; நாம் அவர்களை முறிய அடித்து, | உபா 2:24-37 உபா 3:1-17 எண் 21:21-35 எண் 32:33-42 சங் 135:10-12 சங் 136:17-22 |
| 8 | அவர்களுடைய தேசத்தைப் பிடித்து, அதை ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் சுதந்தரமாகக் கொடுத்தோம். | உபா 3:12 உபா 3:13 எண் 32:33 |
| 9 | இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக. | உபா 29:1 உபா 4:6 யோசு 1:7 1இரா 2:3 சங் 25:10 சங் 103:17 சங் 103:18 ஏசா 56:1 ஏசா 56:2 ஏசா 56:4-7 எரே 50:5 லூக் 11:28 எபிரெ 13:20 எபிரெ 13:21 |
| 10 | உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடியேயும், உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்தபடியேயும், இன்று உன்னைத் தமக்கு ஜனமாக ஏற்படுத்திக்கொள்ளவும், தாம் உனக்கு தேவனாயிருக்கவும், | உபா 4:10 உபா 31:12 உபா 31:13 2நாளா 23:16 2நாளா 34:29-32 நெகே 8:2 நெகே 9:1 நெகே 9:2 நெகே 9:38 நெகே 10:28 யோவே 2:16 யோவே 2:17 வெளிப் 6:15 வெளிப் 20:12 |
| 11 | நீ உன் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைக்கும் இன்று அவர் உன்னோடே பண்ணுகிற அவருடைய ஆணையுறுதிக்கும் உட்படும்படிக்கு, | உபா 5:14 யாத் 12:38 யாத் 12:48 யாத் 12:49 எண் 11:4 |
| 12 | உங்கள் கோத்திரங்களின் தலைவரும் உங்கள் மூப்பரும் உங்கள் அதிபதிகளும் இஸ்ரவேலின் சகல புருஷரும், | உபா 5:2 உபா 5:3 யாத் 19:5 யாத் 19:6 யோசு 24:25 2இரா 11:17 2நாளா 15:12-15 |
| 13 | உங்கள் பிள்ளைகளும், உங்கள் மனைவிகளும், உங்கள் பாளயத்துக்குள்ளிருக்கிற உங்கள் விறகுக்காரனும், உங்கள் தண்ணீர்க்காரனுமான அந்நியர் எல்லாரும் இன்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தில் நிற்கிறீர்களே. | உபா 7:6 உபா 26:18 உபா 26:19 உபா 28:9 |
| 14 | நான் உங்களோடேமாத்திரம் இந்த உடன்படிக்கையையும் இந்த ஆணையையும் உறுதியையும் பண்ணாமல், | எரே 31:31-34 எபிரெ 8:7-12 |
| 15 | இன்று இங்கே நம்மோடேகூட நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தில் நிற்கிறவர்களோடேயும், இன்று இங்கே நம்மோடே இராதவர்களோடேயும் கூட அதைப் பண்ணுகிறேன். | உபா 5:3 எரே 32:39 எரே 50:5 அப் 2:39 1கொரி 7:14 |
| 16 | நாம் எகிப்து தேசத்தில் குடியிருந்ததையும், நாம் கடந்துவந்த இடங்களிலிருந்த ஜாதிகளின் நடுவில் நடந்துவந்ததையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். | உபா 2:4 உபா 2:9 உபா 2:19 உபா 2:24 உபா 3:1 உபா 3:2 |
| 17 | அவர்களுடைய அருவருப்புகளையும், அவர்களிடத்திலிருக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமான அவர்களுடைய நரகலான தேவர்களையும் கண்டிருக்கிறீர்கள். |
| 18 | ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரை விட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள். | உபா 11:16 உபா 11:17 உபா 13:1-15 உபா 17:2-7 எபிரெ 3:12 |
| 19 | அப்படிப்பட்டவன் இந்த ஆணையுறுதியின் வார்த்தைகளைக் கேட்டும், தாகத்தினிமித்தம் வெறிக்கக் குடித்து, மன இஷ்டப்படி நடந்தாலும் எனக்குச் சுகமுண்டாயிருக்கும் என்று தன் உள்ளத்தைத் தேற்றிக்கொண்டால், கர்த்தர் அவனை மன்னிக்கச் சித்தமாயிரார். | உபா 29:12 ஆதி 2:17 |
| 20 | அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார். | சங் 78:50 நீதி 6:34 ஏசா 27:11 எரே 13:14 எசே 5:11 எசே 7:4 எசே 7:9 எசே 8:18 எசே 9:10 எசே 14:7 எசே 14:8 எசே 24:14 ரோம 8:32 ரோம 11:21 2பேது 2:4 2பேது 2:5 |
| 21 | இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையினுடைய சகல சாபங்களின்படியும் அவனுக்குத் தீங்காக கர்த்தர் இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவனைப் புறம்பாக்கிப்போடுவார். | யோசு 7:1-26 எசே 13:9 மல்கி 3:18 மத் 24:51 மத் 25:32 மத் 25:41 மத் 25:46 |
| 22 | அப்பொழுது உங்களுக்குப்பின் எழும்பும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், தூரதேசத்திலிருந்து வரும் அந்நியரும், கர்த்தர் இந்த தேசத்துக்கு வருவித்த வாதைகளையும் நோய்களையும் காணும்போதும், |
| 23 | கர்த்தர் தமது கோபத்திலும் தமது உக்கிரத்திலும் சோதோமையும், கோமோராவையும், அத்மாவையும், செபோயீமையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் யாதொரு பூண்டின் முளைப்பும் இல்லாதபடிக்கு, கந்தகத்தாலும், உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும், | யோபு 18:15 ஏசா 34:9 லூக் 17:29 வெளிப் 19:20 |
| 24 | அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள். | 1இரா 9:8 1இரா 9:9 2நாளா 7:21 2நாளா 7:22 எரே 22:8 எரே 22:9 புலம் 2:15-17 புலம் 4:12 எசே 14:23 ரோம 2:5 |
| 25 | அதற்கு: அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையை அவர்கள் விட்டுப்போய், | ஏசா 47:6 எரே 40:2 எரே 40:3 எரே 50:7 |
| 26 | தாங்கள் அறியாமலும் தங்களுக்கு ஒரு பலனும் அளிக்காமலும் இருக்கிற தேவர்களாகிய வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொண்டபடியினாலே, | நியா 2:12 நியா 2:13 நியா 5:8 2இரா 17:7-18 2நாளா 36:12-17 எரே 19:3-13 எரே 44:2-6 |
| 27 | கர்த்தர் இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்கள் எல்லாவற்றையும் இந்தத் தேசத்தின்மேல் வரப்பண்ண, அதின்மேல் கோபம் மூண்டவராகி, | உபா 29:20 உபா 29:21 உபா 27:15-26 உபா 28:15-68 லேவி 26:14-46 தானி 9:11-14 |
| 28 | அவர்களைக் கோபத்தினாலும் உக்கிரத்தினாலும் மகா எரிச்சலினாலும் அவர்களுடைய தேசத்திலிருந்து வேரோடே பிடுங்கி, இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்களை வேறே தேசத்தில் எறிந்துவிட்டார் என்று சொல்லப்படும். | உபா 28:25 உபா 28:36 உபா 28:64 1இரா 14:15 2இரா 17:18 2இரா 17:23 2நாளா 7:20 சங் 52:5 நீதி 2:22 எரே 42:10 லூக் 21:23 லூக் 21:24 |
| 29 | மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள். | யோபு 11:6 யோபு 11:7 யோபு 28:28 சங் 25:14 நீதி 3:32 எரே 23:18 தானி 2:18 தானி 2:19 தானி 2:22 தானி 2:27-30 தானி 4:9 ஆமோ 3:7 மத் 13:35 யோவா 15:15 யோவா 21:22 அப் 1:7 ரோம 11:33 ரோம 11:34 ரோம 16:25 ரோம 16:26 1கொரி 2:16 |