இணை வசன வேதாகமம்

Click to Subscribe

உபாகமம் 27

                   
புத்தகங்களைக் காட்டு
1பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்கூட இருக்கையில், ஜனங்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதிக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.உபா 4:1-3 உபா 11:32 உபா 26:16 லூக் 11:28 யோவா 15:14 1தெச 4:1 1தெச 4:2 யாக் 2:10
2உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரிய கல்லுகளை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,உபா 6:1 உபா 9:1 உபா 11:31 யோசு 1:11 யோசு 4:1 யோசு 4:5-24
3உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உனக்குக் கொடுக்கும் பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்குள் பிரவேசிக்கும்படி நீ கடந்துபோனபின்பு, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகள் யாவையும் அவைகளில் எழுதக்கடவாய்.யோசு 8:32 எரே 31:31-33 2கொரி 3:2 2கொரி 3:3 எபிரெ 8:6-10 எபிரெ 10:16
4மேலும் நீங்கள் யோர்தானைக் கடந்தபோது, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கல்லுகளை ஏபால் மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்துபூசி,உபா 11:29 உபா 11:30 யோசு 8:30-33
5அங்கே இருப்பாயுதம்படாத கற்களாலே உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டக்கடவாய்.யாத் 24:4 யோசு 8:30 யோசு 8:31 1இரா 18:31 1இரா 18:32
6நீ உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தை முழுக்கற்களாலே கட்டி, அதின்மேல் உன் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலிகளையும்,லேவி 1:1-17 எபே 5:2
7சமாதானபலிகளையும் இட்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் புசித்துச் சந்தோஷமாயிருந்து,லேவி 3:1-17 லேவி 7:11-17 அப் 10:36 ரோம 5:1 ரோம 5:10 எபே 2:16 எபே 2:17 எபே 2:16 எபே 2:17 கொலோ 1:20 எபிரெ 13:20 எபிரெ 13:21
8அந்தக் கல்லுகளில் இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளையெல்லாம் துலக்கமாய் எழுதக்கடவாய் என்று கட்டளையிட்டான்.ஆபகூ 2:2 யோவா 16:25 2கொரி 3:12
9பின்னும் மோசே, லேவியராகிய ஆசாரியர்களும் கூட இருக்கையில், இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய்.உபா 26:16-18 ரோம 6:17 ரோம 6:18 ரோம 6:22 1கொரி 6:9-11 எபே 5:8 எபே 5:9 1பேது 2:10 1பேது 2:11
10ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான்.உபா 10:12 உபா 10:13 உபா 11:1 உபா 11:7 உபா 11:8 லேவி 19:2 மீகா 4:5 மீகா 6:8 மத் 5:48 எபே 4:17-24 1பேது 1:14-16 1பேது 4:1-3
11மேலும் அந்நாளிலே மோசே ஜனங்களை நோக்கி:
12நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.உபா 11:26-29 யோசு 8:33 யோசு 8:34 நியா 9:7
13சாபங்கூறப்படும்பொருட்டு, ஏபால் மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.உபா 27:4 உபா 11:29 யோசு 8:33
14அப்பொழுது லேவியர் உரத்த சத்தமிட்டு இஸ்ரவேல் மனிதர் எல்லாரையும் பார்த்து:உபா 33:9 உபா 33:10 யோசு 8:33 நெகே 8:7 நெகே 8:8 தானி 9:11 மல்கி 2:7-9
15கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு ஜனங்களெல்லாரும் பிரதியுத்தரமாக ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.உபா 28:16-19 ஆதி 9:25 1சாமு 26:19 எரே 11:3
16தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.உபா 21:18-21 யாத் 20:12 யாத் 21:17 லேவி 19:3 நீதி 30:11-17 எசே 22:7 மத் 15:4-6
17பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.உபா 19:14 நீதி 22:28 நீதி 23:10 நீதி 23:11
18குருடனை வழிதப்பச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.லேவி 19:14 யோபு 29:15 நீதி 28:10 ஏசா 56:10 மத் 15:14 வெளிப் 2:14
19பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.உபா 10:18 உபா 24:17 யாத் 22:21-24 யாத் 23:2 யாத் 23:8 யாத் 23:9 சங் 82:2-4 நீதி 17:23 நீதி 31:5 மீகா 3:9 மல்கி 3:5
20தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன், தன் தகப்பனுடைய மானத்தைத் திறந்தபடியினாலே, சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.உபா 22:30 ஆதி 35:22 ஆதி 49:4 லேவி 18:8 லேவி 20:11 2சாமு 16:22 1நாளா 5:1 எசே 22:10 ஆமோ 2:7 1கொரி 5:1
21யாதொரு மிருகத்தோடே புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.யாத் 22:19 லேவி 18:23 லேவி 20:15
22தன் தகப்பனுக்காவது தாய்க்காவது குமாரத்தியாகிய தன் சகோதரியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.லேவி 18:9 லேவி 20:17 2சாமு 13:1 2சாமு 13:8-14 எசே 22:11
23தன் மாமியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.லேவி 18:17 லேவி 20:14
24ஒளிப்பிடத்திலே பிறனைக் கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.உபா 19:11 உபா 19:12 யாத் 20:13 யாத் 21:12-14 லேவி 24:17 எண் 35:31 2சாமு 3:27 2சாமு 11:15-17 2சாமு 12:9-12 2சாமு 13:28 2சாமு 20:9 2சாமு 20:10
25குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.உபா 10:17 உபா 16:19 யாத் 23:7 யாத் 23:8 சங் 15:5 நீதி 1:11-29 எசே 22:12 எசே 22:13 மீகா 3:10 மீகா 3:11 மீகா 7:2 மீகா 7:3 மத் 26:15 மத் 27:3 மத் 27:4 அப் 1:18
26இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.உபா 27:15 உபா 28:15-68 சங் 119:21 மத் 25:41 1கொரி 16:22
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.