| 1 | உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு அதில் வாசம்பண்ணும்போது, | உபா 5:31 உபா 6:1-10 உபா 7:1 உபா 13:1 உபா 13:9 உபா 17:14 உபா 18:9 எண் 15:2 எண் 15:18 |
| 2 | உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் கனிகளிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் ஸ்தானத்திற்குப் போய், | உபா 16:10 உபா 18:4 யாத் 23:16 யாத் 23:19 யாத் 34:26 லேவி 2:12 லேவி 2:14 எண் 18:12 எண் 18:13 2இரா 4:42 2நாளா 31:5 நெகே 10:35-37 நெகே 12:44 நெகே 13:31 நீதி 3:9 நீதி 3:10 எரே 2:3 எசே 20:40 எசே 44:30 எசே 48:14 ரோம 8:23 ரோம 11:16 ரோம 16:5 1கொரி 15:20 1கொரி 15:23 1கொரி 16:2 யாக் 1:18 வெளிப் 14:4 |
| 3 | அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: கர்த்தர் எங்களுக்குக் கொடுக்க நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக. | உபா 19:17 எபிரெ 7:26 எபிரெ 10:21 எபிரெ 13:15 1பேது 2:5 |
| 4 | அப்பொழுது ஆசாரியன் அந்தக் கூடையை உன் கையிலிருந்து வாங்கி, அதை உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்திற்கு முன்பாக வைக்கக்கடவன். | மத் 5:23 மத் 5:24 மத் 23:19 எபிரெ 13:10-12 |
| 5 | அப்பொழுது நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நின்று வசனித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரியா தேசத்தானாயிருந்தான்; அவன் கொஞ்சம் ஜனங்களோடே எகிப்துக்குப் போய், அவ்விடத்தில் பரதேசியாய்ச் சஞ்சரித்து, அங்கே பெரிய பலத்த திரட்சியான ஜாதியானான். | ஆதி 24:4 ஆதி 25:20 ஆதி 28:5 ஆதி 31:20 ஆதி 31:24 ஓசி 12:12 |
| 6 | எகிப்தியர் எங்களை ஒடுக்கி, எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்கள்மேல் கடினமான வேலையைச் சுமத்தினபோது, | உபா 4:20 யாத் 1:11 யாத் 1:14 யாத் 1:16 யாத் 1:22 யாத் 5:9 யாத் 5:19 யாத் 5:23 |
| 7 | எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டோம்; கர்த்தர் எங்கள் சத்தத்தைக் கேட்டு, எங்கள் சிறுமையையும் எங்கள் வருத்தத்தையும் எங்கள் ஒடுக்கத்தையும் பார்த்து, | யாத் 2:23-25 யாத் 3:1-4 யாத் 6:5 சங் 50:15 சங் 103:1 சங் 103:2 சங் 116:1-4 எரே 33:2 எபே 3:20 எபே 3:21 |
| 8 | எங்களைப் பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரங்களினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, | உபா 4:34 உபா 5:15 யாத் 12:37 யாத் 12:41 யாத் 12:51 யாத் 13:3 யாத் 14:16-31 சங் 78:12 சங் 78:13 சங் 105:27-38 சங் 106:7-10 ஏசா 63:12 |
| 9 | எங்களை இவ்விடத்துக்கு அழைத்து வந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார். | யோசு 23:14 1சாமு 7:12 சங் 105:44 சங் 107:7 சங் 107:8 அப் 26:22 |
| 10 | இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகளின் முதற்பலனைக் கொண்டு வந்தேன் என்று சொல்லி, அதை உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் பணிந்து, | உபா 26:2 உபா 26:17 1நாளா 29:14 ரோம 2:1 1பேது 4:10 1பேது 4:11 |
| 11 | நீயும் லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் உன் வீட்டாருக்கும் அநுக்கிரகம்பண்ணின சகல நன்மைகளினிமித்தமும் சந்தோஷப்படுவீர்களாக. | உபா 12:7 உபா 12:12 உபா 12:18 உபா 16:11 உபா 28:47 சங் 63:3-5 சங் 100:1 சங் 100:2 ஏசா 65:14 சகரி 9:17 அப் 2:46 அப் 2:47 பிலிப் 4:4 1தீமோ 6:17 1தீமோ 6:18 |
| 12 | தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு, | லேவி 27:30 எண் 18:24 |
| 13 | நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருள்களை என் வீட்டிலிருந்து எடுத்து வந்து, லேவியனுக்கும், பரதேசிக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை. | உபா 26:12 உபா 14:29 உபா 24:19-21 யோபு 31:16-20 |
| 14 | நான் துக்கங்கொண்டாடும்போது அதில் புசிக்கவும் இல்லை, தீட்டான காரியத்துக்கு அதில் ஒன்றும் எடுக்கவும் இல்லை; இழவுக்காரியத்துக்காக அதில் ஒன்றும் படைக்கவும் இல்லை; நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன். | உபா 16:11 லேவி 7:20 லேவி 21:1 லேவி 21:11 ஓசி 9:4 மல்கி 2:13 |
| 15 | நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து நோக்கிப் பார்த்து, உமது ஜனங்களாகிய இஸ்ரவேலரையும், நீர் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தையும் ஆசீர்வதியும் என்று சொல்வாயாக. | உபா 26:7 1இரா 8:27 1இரா 8:43 சங் 102:19 சங் 102:20 ஏசா 57:15 ஏசா 61:1 ஏசா 63:15 ஏசா 66:1 ஏசா 66:2 சகரி 2:13 மத் 6:9 அப் 7:49 |
| 16 | இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்யும் பொருட்டு, இன்று உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டைளையிடுகிறார்; ஆகையால் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் காத்து நடக்கக்கடவாய். | உபா 4:1-6 உபா 6:1 உபா 11:1 உபா 11:8 உபா 12:1 உபா 12:32 மத் 28:20 |
| 17 | கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பார் என்றும், நான் அவர் வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும், அவர் கற்பனைகளையும், அவர் நியாயங்களையும் கைக்கொண்டு, அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய். | உபா 5:2 உபா 5:3 யாத் 15:2 யாத் 20:19 யாத் 24:7 2நாளா 34:31 ஏசா 12:2 ஏசா 44:5 சகரி 13:9 அப் 27:23 ரோம 6:13 1கொரி 6:19 1கொரி 6:20 2கொரி 8:5 |
| 18 | கர்த்தரும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும், | உபா 7:6 உபா 14:2 உபா 28:9 யாத் 6:7 யாத் 19:5 யாத் 19:6 எரே 31:32-34 எசே 36:25-27 தீத் 2:14 |
| 19 | நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும், கீர்த்தியிலும், மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான். | உபா 4:7 உபா 4:8 உபா 28:1 சங் 148:14 ஏசா 62:12 ஏசா 66:20 ஏசா 66:21 எரே 13:11 எரே 33:9 எசே 16:12-14 செப் 3:19 1பேது 2:5 வெளிப் 1:5 வெளிப் 1:6 |