| 1 | பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். | ஆதி 28:7 ஆதி 37:13 லேவி 19:3 உபா 21:18 1சாமு 17:20 எஸ்தர் 2:20 நீதி 1:8 நீதி 6:20 நீதி 23:22 நீதி 30:11 நீதி 30:17 எரே 35:14 லூக் 2:51 கொலோ 3:20-25 |
| 2 | உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், | யாத் 20:12 உபா 27:16 நீதி 20:20 எரே 35:18 எசே 22:7 மல்கி 1:6 மத் 15:4-6 மாற் 7:9-13 ரோம 13:7 |
| 3 | உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது. | உபா 4:40 உபா 5:16 உபா 6:3 உபா 6:18 உபா 12:25 உபா 12:28 உபா 22:7 ரூத் 3:1 சங் 128:1 சங் 128:2 ஏசா 3:10 எரே 42:6 |
| 4 | பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக. | ஆதி 31:14 ஆதி 31:15 1சாமு 20:30-34 கொலோ 3:21 |
| 5 | வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து; | ஆதி 16:9 சங் 123:2 மல்கி 1:6 மத் 6:24 மத் 8:9 அப் 10:7 அப் 10:8 கொலோ 3:22 1தீமோ 6:1-3 தீத் 2:9 தீத் 2:10 1பேது 2:18-21 |
| 6 | மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். | பிலிப் 2:12 கொலோ 3:22 1தெச 2:4 |
| 7 | அடிமையானவனானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து, | ஆதி 31:6 ஆதி 31:38-40 2இரா 5:2 2இரா 5:3 2இரா 5:13 |
| 8 | மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். | நீதி 11:18 நீதி 23:18 ஏசா 3:11 மத் 5:12 மத் 6:1 மத் 6:4 மத் 10:41 மத் 10:42 மத் 16:27 லூக் 6:35 லூக் 14:14 ரோம 2:6-10 2கொரி 5:10 கொலோ 3:24 எபிரெ 10:35 எபிரெ 11:26 |
| 9 | எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள். | லேவி 19:13 லேவி 25:39-46 உபா 15:11-16 உபா 24:14 உபா 24:15 நெகே 5:5 நெகே 5:8 நெகே 5:9 யோபு 24:10-12 யோபு 31:13-15 ஏசா 47:6 ஏசா 58:3-6 ஆமோ 8:4-7 மல்கி 3:5 கொலோ 4:1 யாக் 5:4 |
| 10 | கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். | 2கொரி 13:11 பிலிப் 3:1 பிலிப் 4:8 1பேது 3:8 |
| 11 | நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். | எபே 4:24 ரோம 13:14 கொலோ 3:10 |
| 12 | ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. | லூக் 13:24 1கொரி 9:25-27 2தீமோ 2:5 எபிரெ 12:1 எபிரெ 12:4 |
| 13 | ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். | எபே 6:11-17 2கொரி 10:4 |
| 14 | சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; | எபே 5:9 ஏசா 11:5 லூக் 12:35 2கொரி 6:7 1பேது 1:13 |
| 15 | சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; | உபா 33:25 உன்ன 7:1 ஆபகூ 3:19 லூக் 15:22 |
| 16 | பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். | ஆதி 15:1 சங் 56:3 சங் 56:4 சங் 56:10 சங் 56:11 நீதி 18:10 2கொரி 1:24 2கொரி 4:16-18 எபிரெ 6:17 எபிரெ 6:18 எபிரெ 11:24-34 1பேது 5:8 1பேது 5:9 1யோவா 5:4 1யோவா 5:5 |
| 17 | இரட்சணியமென்னும், தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். | 1சாமு 17:5 1சாமு 17:58 ஏசா 59:17 1தெச 5:8 |
| 18 | எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். | எபே 1:16 யோபு 27:10 சங் 4:1 சங் 6:9 ஏசா 26:16 தானி 6:10 லூக் 3:26 லூக் 3:37 லூக் 18:1-7 லூக் 21:36 அப் 1:14 அப் 6:4 அப் 10:2 அப் 12:5 ரோம 12:12 பிலிப் 4:6 கொலோ 4:2 1தெச 5:17 2தீமோ 1:3 |
| 19 | சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக, | ரோம 15:30 2கொரி 1:11 பிலிப் 1:19 கொலோ 4:3 1தெச 5:25 2தெச 3:1 பிலேமோ 1:22 எபிரெ 13:18 |
| 20 | நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள். | நீதி 13:17 ஏசா 33:7 2கொரி 5:20 |
| 21 | அன்றியும், எனக்கடுத்த காரியங்களும், என் சுகசெய்திகளும் உங்களுக்குத் தெரியவரும்படிக்கு, அவைகளையெல்லாம் நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாயிருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான். | பிலிப் 1:12 கொலோ 4:7 |
| 22 | நீங்கள் எங்கள் செய்திகளை அறியவும், அவன் உங்கள் இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடத்தில் அனுப்பினேன். | பிலிப் 2:19 பிலிப் 2:25 கொலோ 4:7 கொலோ 4:8 1தெச 3:2 2தெச 2:17 |
| 23 | பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரருக்குச் சமாதானமும் விசுவாசத்தோடு கூடிய அன்பும் உண்டாவதாக. | ரோம 1:7 1கொரி 1:3 ஆதி 43:23 1சாமு 25:6 சங் 122:6-9 யோவா 14:27 கலா 6:16 1பேது 5:14 வெளிப் 1:4 |
| 24 | நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென். | 1கொரி 16:23 2கொரி 13:14 கொலோ 4:18 2தீமோ 4:22 தீத் 3:15 எபிரெ 13:25 |