| 1 | அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்? | ரோம 6:1 ரோம 7:7 ரோம 8:31 |
| 2 | ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை. | ரோம 3:20-28 பிலிப் 3:9 |
| 3 | வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது. | ரோம 9:17 ரோம 10:11 ரோம 11:2 ஏசா 8:20 மாற் 12:10 யாக் 4:5 2பேது 1:20 2பேது 1:21 |
| 4 | கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும். | ரோம 9:32 ரோம 11:6 ரோம 11:35 மத் 20:1-16 |
| 5 | ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும். | ரோம 4:24 ரோம 4:25 ரோம 3:22 ரோம 5:1 ரோம 5:2 ரோம 10:3 ரோம 10:9 ரோம 10:10 அப் 13:38 அப் 13:39 கலா 2:16 கலா 2:17 கலா 3:9-14 பிலிப் 3:9 |
| 6 | அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும்பொருட்டு: | ரோம 4:9 உபா 33:29 சங் 1:1-3 சங் 112:1 சங் 146:5 சங் 146:6 மத் 5:3-12 கலா 3:8 கலா 3:9 கலா 3:14 கலா 4:15 எபே 1:3 |
| 7 | எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். | சங் 32:1 சங் 32:2 சங் 51:8 சங் 51:9 சங் 85:2 சங் 130:3 சங் 130:4 ஏசா 40:1 ஏசா 40:2 எரே 33:8 எரே 33:9 மீகா 7:18-20 மத் 9:2 லூக் 7:47-50 |
| 8 | எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான். | ஏசா 53:10-12 2கொரி 5:19-20 பிலேமோ 1:18 பிலேமோ 1:19 1பேது 2:24 1பேது 3:18 |
| 9 | இந்தப் பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்குமாத்திரம் வருமோ, விருத்தசேதனமில்லாதவனுக்கும் வருமோ? ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறோமே. | ரோம 3:29 ரோம 3:30 ரோம 9:23 ரோம 9:24 ரோம 10:12 ரோம 10:13 ரோம 15:8-19 ஏசா 49:6 லூக் 2:32 கலா 3:14 கலா 3:26-28 எபே 2:11-13 எபே 3:8 கொலோ 3:11 |
| 10 | அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனமுள்ளவனாயிருந்த போதோ, விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோதோ? விருத்தசேதனமுள்ளவனாயிருந்தபோதல்ல, விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோதே. | ஆதி 15:5 ஆதி 15:6 ஆதி 15:16 ஆதி 16:1-3 ஆதி 17:1 ஆதி 17:10 ஆதி 17:23-27 1கொரி 7:18 1கொரி 7:19 கலா 5:6 கலா 6:15 |
| 11 | மேலும், விருத்தசேதனமில்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனமில்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும்பொருட்டாக அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும், | ஆதி 17:10 யாத் 12:13 யாத் 31:13 யாத் 31:17 எசே 20:12 எசே 20:20 |
| 12 | விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாய்மாத்திரமல்ல, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனமில்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாயுமிருக்கிறவர்களுக்குத் தகப்பனாயிருக்கும்படிக்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான். | ரோம 9:6 ரோம 9:7 மத் 3:9 லூக் 16:23-31 யோவா 8:39 யோவா 8:40 கலா 4:22-31 |
| 13 | அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது. | ஆதி 12:3 ஆதி 17:4 ஆதி 17:5 ஆதி 17:16 ஆதி 22:17 ஆதி 22:18 ஆதி 28:14 ஆதி 49:10 சங் 2:8 சங் 72:11 |
| 14 | நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால் விசுவாசம் வீணாய்ப்போகும், வாக்குத்தத்தமும் அவமாகும். | ரோம 4:16 கலா 2:21 கலா 3:18-24 கலா 5:4 பிலிப் 3:9 எபிரெ 7:19 எபிரெ 7:28 |
| 15 | மேலும் நியாயப்பிரமாணம் கோபாக்கினையை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணமில்லாவிட்டால் மீறுதலுமில்லை. | ரோம 1:17 ரோம 2:5 ரோம 2:6 ரோம 3:19 ரோம 3:20 ரோம 5:13 ரோம 5:20 ரோம 5:21 ரோம 7:7-11 எண் 32:14 உபா 29:20-28 2இரா 22:13 எரே 4:8 புலம் 2:22 எசே 7:19 செப் 1:18 யோவா 3:36 யோவா 15:22 அப் 17:30 அப் 17:31 1கொரி 15:56 2கொரி 3:7-9 கலா 3:10 கலா 3:19 எபே 5:6 கொலோ 3:6 1யோவா 3:4 வெளிப் 6:16 வெளிப் 6:17 வெளிப் 19:15 |
| 16 | ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது. | ரோம 3:24-26 ரோம 5:1 கலா 3:7-12 கலா 3:22-12 எபே 2:5 எபே 2:8 தீத் 3:7 |
| 17 | அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான். | ஆதி 17:4 ஆதி 17:5 ஆதி 17:16 ஆதி 17:20 ஆதி 25:1-34 ஆதி 28:3 எபிரெ 11:12 |
| 18 | உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான். | ரோம 4:19 ரோம 5:5 ரோம 8:24 ரூத் 1:11-13 நீதி 13:12 எசே 37:11 மாற் 5:35 மாற் 5:36 லூக் 1:18 அப் 27:25 |
| 19 | அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். | ரோம 4:20 ரோம 4:21 ரோம 14:21 மத் 6:30 மத் 8:26 மத் 14:31 மாற் 9:23 மாற் 9:24 யோவா 20:27 யோவா 20:28 |
| 20 | தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், | எண் 11:13-23 2இரா 7:2 2இரா 7:19 2நாளா 20:15-20 ஏசா 7:9 எரே 32:16-27 லூக் 1:18 லூக் 1:45 |
| 21 | தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். | ரோம 8:38 2தீமோ 1:12 எபிரெ 11:13 |
| 22 | ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. | ரோம 4:3 ரோம 4:6 |
| 23 | அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காகமாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. | ரோம 15:4 1கொரி 9:10 1கொரி 10:6 1கொரி 10:11 2தீமோ 3:16 2தீமோ 3:17 |
| 24 | நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். | அப் 2:39 |
| 25 | அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். | ரோம 3:25 ரோம 5:6-8 ரோம 8:3 ரோம 8:32 ஏசா 53:5 ஏசா 53:6 ஏசா 53:10-12 தானி 9:24 தானி 9:26 சகரி 13:7 மத் 20:28 1கொரி 15:3 1கொரி 15:4 2கொரி 5:21 கலா 1:4 கலா 3:13 எபே 5:2 தீத் 2:14 எபிரெ 9:28 1பேது 1:18 1பேது 1:19 1பேது 2:24 1பேது 3:18 1யோவா 2:2 1யோவா 4:9 1யோவா 4:10 வெளிப் 1:5 வெளிப் 5:9 வெளிப் 7:14 |