இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ரோமர் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன?ரோம 2:25-29 ஆதி 25:32 பிரச 6:8 பிரச 6:11 ஏசா 1:11-15 மல்கி 3:14 1கொரி 15:32 எபிரெ 13:9
2அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.ரோம 3:3 ரோம 11:1 ரோம 11:2 ரோம 11:15-23 ரோம 11:28-23 ரோம 11:29-23
3சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ?ரோம 9:6 ரோம 10:16 ரோம 11:1-7 எபிரெ 4:2
4அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.ரோம 3:6 ரோம 3:31 ரோம 6:2 ரோம 6:15 ரோம 7:7 ரோம 7:13 ரோம 9:14 ரோம 11:1 ரோம 11:11 லூக் 20:16 1கொரி 6:15 கலா 2:17 கலா 2:21 கலா 6:14
5நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா?ரோம 3:7 ரோம 3:25 ரோம 3:26 ரோம 8:20 ரோம 8:21
6அப்படிச் சொல்லக்கூடாது; சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி?ஆதி 18:25 யோபு 8:3 யோபு 34:17-19 சங் 9:8 சங் 11:5-7 சங் 50:6 சங் 96:13 சங் 98:9 அப் 17:31
7அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?ஆதி 37:8 ஆதி 37:9 ஆதி 37:20 ஆதி 44:1-14 ஆதி 50:18-20 யாத் 3:19 யாத் 14:5 யாத் 14:30 1இரா 13:17 1இரா 13:18 1இரா 13:26-32 2இரா 8:10-15 மத் 26:34 மத் 26:69-75
8நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.மத் 5:11 1பேது 3:16 1பேது 3:17
9ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல, யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே.ரோம 3:5 ரோம 6:15 ரோம 11:7 1கொரி 10:19 1கொரி 14:15 பிலிப் 1:18
10அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;ரோம 3:4 ரோம 11:8 ரோம 15:3 ரோம 15:4 ஏசா 8:20 1பேது 1:16
11உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;ரோம 1:22 ரோம 1:28 சங் 14:2-4 சங் 53:2 சங் 53:4 சங் 94:8 நீதி 1:7 நீதி 1:22 நீதி 1:29 நீதி 1:30 ஏசா 27:11 எரே 4:22 ஓசி 4:6 மத் 13:13 மத் 13:14 மத் 13:19 தீத் 3:3 1யோவா 5:20
12எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.யாத் 32:8 சங் 14:3 பிரச 7:29 ஏசா 53:6 ஏசா 59:8 எரே 2:13 எபே 2:3 1பேது 2:25
13அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;சங் 5:9 எரே 5:16 மத் 23:27 மத் 23:28
14அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது;சங் 10:7 சங் 59:12 சங் 109:17 சங் 109:18 யாக் 3:10
15அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது;நீதி 1:16 நீதி 6:18 ஏசா 59:7 ஏசா 59:8
16நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது;
17சமாதானவழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்;ரோம 5:1 ஏசா 57:21 ஏசா 59:8 மத் 7:14 லூக் 1:79
18அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.ஆதி 20:11 சங் 36:1 நீதி 8:13 நீதி 16:6 நீதி 23:17 லூக் 23:40 வெளிப் 19:5
19மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.ரோம 3:2 ரோம 2:12-18 யோவா 10:34 யோவா 10:35 யோவா 15:25 1கொரி 9:20 1கொரி 9:21 கலா 3:23 கலா 4:5 கலா 4:21 கலா 5:18
20இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.ரோம 3:28 ரோம 2:13 ரோம 4:13 ரோம 9:32 அப் 13:39 கலா 2:16 கலா 2:19 கலா 3:10-13 கலா 5:4 எபே 2:8 எபே 2:9 தீத் 3:5-7 யாக் 2:9 யாக் 2:10
21இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.ரோம 1:17 ரோம 5:19 ரோம 5:21 ரோம 10:3 ரோம 10:4 ஆதி 15:6 ஏசா 45:24 ஏசா 45:25 ஏசா 46:13 ஏசா 51:8 ஏசா 54:17 ஏசா 61:10 எரே 23:5 எரே 23:6 எரே 33:16 தானி 9:24 அப் 15:11 1கொரி 1:30 2கொரி 5:21 கலா 5:5 பிலிப் 3:9 எபிரெ 11:4-40 2பேது 1:1
22அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.ரோம 4:3-13 ரோம 4:20-22 ரோம 5:1-11 ரோம 8:1 பிலிப் 3:9
23எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,ரோம 3:9 ரோம 3:19 ரோம 1:28-32 ரோம 2:1-16 ரோம 11:32 பிரச 7:20 கலா 3:22 1யோவா 1:8-10
24இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;ரோம 4:16 ரோம 5:16-19 1கொரி 6:11 எபே 2:7-10 தீத் 3:5-7
25தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும்,அப் 2:23 அப் 3:18 அப் 4:28 அப் 15:18 1பேது 1:18-20 வெளிப் 13:8
26கிறிஸ்து இயேசுவினுடைய இரத்ததைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.உபா 32:4 சங் 85:10 சங் 85:11 ஏசா 42:21 ஏசா 45:21 செப் 3:5 செப் 3:15 சகரி 9:9 அப் 13:38 அப் 13:39 வெளிப் 15:3
27இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப்பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே.ரோம 3:19 ரோம 2:17 ரோம 2:23 ரோம 4:2 எசே 16:62 எசே 16:63 எசே 36:31 எசே 36:32 செப் 3:11 லூக் 18:9-14 1கொரி 1:29-31 1கொரி 4:7 எபே 2:8-10
28ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.ரோம 3:20-22 ரோம 3:26-22 ரோம 4:5 ரோம 5:1 ரோம 8:3 யோவா 3:14-18 யோவா 5:24 யோவா 6:40 அப் 13:38 அப் 13:39 1கொரி 6:11 கலா 2:16 கலா 3:8 கலா 3:11-14 கலா 3:24-14 பிலிப் 3:9 தீத் 3:7
29தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான்.ரோம 1:16 ரோம 9:24-26 ரோம 11:12 ரோம 11:13 ரோம 15:9-13 ரோம 15:16-13 ஆதி 17:7 ஆதி 17:8 ஆதி 17:18 சங் 22:7 சங் 67:2 சங் 72:17 ஏசா 19:23-25 ஏசா 54:5 எரே 16:19 எரே 31:33 ஓசி 1:10 சகரி 2:11 சகரி 8:20-23 மல்கி 1:11 மத் 22:32 மத் 28:19 மாற் 16:15 மாற் 16:16 லூக் 24:46 லூக் 24:47 அப் 9:15 அப் 22:21 அப் 26:17 கலா 3:14 கலா 3:25-29 எபே 3:6 கொலோ 3:11
30விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.ரோம 3:28 ரோம 4:11 ரோம 4:12 ரோம 10:12 ரோம 10:13 கலா 2:14-16 கலா 3:8 கலா 3:20 கலா 3:28 கலா 5:6 கலா 6:15 பிலிப் 3:3 கொலோ 2:10 கொலோ 2:11
31அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.ரோம 4:14 சங் 119:126 எரே 8:8 எரே 8:9 மத் 5:17 மத் 15:6 கலா 2:21 கலா 3:17-19
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.