இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ரோமர் 2

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத்தீர்க்கிறாய்.ரோம 1:18-20
2இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.ரோம 2:5 ரோம 3:4 ரோம 3:5 ரோம 9:14 ஆதி 18:25 யோபு 34:17-19 யோபு 34:23-19 சங் 9:4 சங் 9:7 சங் 9:8 சங் 11:5-7 சங் 36:5 சங் 36:6 சங் 96:13 சங் 98:9 சங் 145:17 ஏசா 45:19 ஏசா 45:21 எரே 12:1 எசே 18:25 எசே 18:29 தானி 4:37 செப் 3:5 அப் 17:31 2தெச 1:5-10 வெளிப் 15:3 வெளிப் 15:4 வெளிப் 16:5 வெளிப் 19:2
3இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ?2சாமு 10:3 யோபு 35:2 சங் 50:21 மத் 26:53
4அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?ரோம 6:1 ரோம 6:15 சங் 10:11 பிரச 8:11 எரே 7:10 எசே 12:22 எசே 12:23 மத் 24:48 மத் 24:49 2பேது 3:3
5உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.ரோம 11:25 யாத் 8:15 யாத் 14:17 உபா 2:30 யோசு 11:20 1சாமு 6:6 2நாளா 30:8 2நாளா 36:13 சங் 95:8 நீதி 29:1 ஏசா 48:4 எசே 3:7 தானி 5:20 சகரி 7:11 சகரி 7:12 எபிரெ 3:13 எபிரெ 3:15 எபிரெ 4:7
6தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.ரோம 14:22 யோபு 34:11 சங் 62:12 நீதி 24:2 ஏசா 3:10 ஏசா 3:11 எரே 17:10 எரே 32:19 எசே 18:30 மத் 16:27 மத் 25:34-46 1கொரி 3:8 1கொரி 4:5 2கொரி 5:10 கலா 6:7 கலா 6:8 வெளிப் 2:23 வெளிப் 20:12 வெளிப் 22:12
7சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.ரோம 8:24 ரோம 8:25 யோபு 17:9 சங் 27:14 சங் 37:3 சங் 37:34 புலம் 3:25 புலம் 3:26 மத் 24:12 மத் 24:13 லூக் 8:15 யோவா 6:66-69 1கொரி 15:58 கலா 6:9 2தீமோ 4:7 2தீமோ 4:8 எபிரெ 6:12 எபிரெ 6:15 எபிரெ 10:35 எபிரெ 10:36 யாக் 5:7 யாக் 5:8 வெளிப் 2:10 வெளிப் 2:11
8சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.நீதி 13:10 1கொரி 11:16 1தீமோ 6:3 1தீமோ 6:4 தீத் 3:9
9முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்.நீதி 1:27 நீதி 1:28 2தெச 1:6
10முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.ரோம 2:7 ரோம 9:21 ரோம 9:23 1சாமு 2:30 சங் 112:6-9 நீதி 3:16 நீதி 3:17 நீதி 4:7-9 நீதி 8:18 லூக் 9:48 லூக் 12:37 யோவா 12:26 1பேது 1:7 1பேது 5:4
11தேவனிடத்தில் பட்சபாதமில்லை.உபா 10:17 உபா 16:19 2நாளா 19:7 யோபு 34:19 நீதி 24:23 நீதி 24:24 மத் 22:16 லூக் 20:21 அப் 10:34 கலா 2:6 கலா 6:7 கலா 6:8 எபே 6:9 கொலோ 3:25 1பேது 1:17
12எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.ரோம 2:14 ரோம 2:15 ரோம 1:18-21 ரோம 1:32-21 எசே 16:49 எசே 16:50 மத் 11:22 மத் 11:24 லூக் 10:12-15 லூக் 12:47 லூக் 12:48 யோவா 19:11 அப் 17:30 அப் 17:31
13நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.ரோம 2:25 உபா 4:1 உபா 5:1 உபா 6:3 உபா 30:12-14 எசே 20:11 எசே 33:30-33 மத் 7:21-27 லூக் 8:21 யாக் 1:22-25 1யோவா 2:29 1யோவா 3:7
14அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.ரோம 2:12 ரோம 3:1 ரோம 3:2 உபா 4:7 சங் 147:19 சங் 147:20 அப் 14:16 அப் 17:30 எபே 2:12
15அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.ரோம 1:18 ரோம 1:19
16என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.ரோம 2:5 ரோம 3:6 ரோம 14:10-12 ஆதி 18:25 சங் 9:7 சங் 9:8 சங் 50:6 சங் 96:13 சங் 98:9 பிரச 3:17 பிரச 11:9 பிரச 12:14 மத் 16:27 மத் 25:31-46 லூக் 8:17 யோவா 12:48 1கொரி 4:5 2கொரி 5:10 எபிரெ 9:27 1பேது 4:5 2பேது 2:9 வெளிப் 20:11-15
17நீ யூதனென்று பெயர்பெற்று நியாயப்பிரமாணத்தின்மேல் பற்றுதலாயிருந்து, தேவனைக்குறித்து மேன்மை பாராட்டி,ரோம 2:28 ரோம 2:29 ரோம 9:4-7 சங் 135:4 ஏசா 48:1 ஏசா 48:2 மத் 3:9 மத் 8:11 மத் 8:12 யோவா 8:33 2கொரி 11:22 கலா 2:15 எபே 2:11 பிலிப் 3:3-7 வெளிப் 2:9 வெளிப் 3:1 வெளிப் 3:9
18நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாய், அவருடைய சித்தத்தை அறிந்து, நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கிறாயே.உபா 4:8 நெகே 9:13 நெகே 9:14 சங் 147:19 சங் 147:20 லூக் 12:47 யோவா 13:17 1கொரி 8:1 1கொரி 8:2 யாக் 4:17
19நீ உன்னைக் குருடருக்கு வழிகாட்டியாகவும், அந்தகாரத்திலுள்ளவர்களுக்கு வெளிச்சமாகவும்,நீதி 26:12 ஏசா 5:21 ஏசா 56:10 மத் 6:23 மத் 15:14 மத் 23:16-26 மாற் 10:15 யோவா 7:46-49 யோவா 9:34 யோவா 9:40 யோவா 9:41 1கொரி 3:18 1கொரி 4:10 1கொரி 8:1 1கொரி 8:2 வெளிப் 3:17 வெளிப் 3:18
20பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு உபாத்தியாயனாகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே.மத் 11:25 1கொரி 3:1 எபிரெ 5:13 1பேது 2:2
21இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவு செய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா?சங் 50:16-21 மத் 23:3-12 லூக் 4:23 லூக் 11:46 லூக் 12:47 லூக் 19:22 1கொரி 9:27 கலா 6:13 தீத் 2:1-7
22விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா?எரே 5:7 எரே 7:9 எரே 7:10 எரே 9:2 எசே 22:11 மத் 12:39 மத் 16:4 யாக் 4:4
23நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா?ரோம 2:17 ரோம 3:2 ரோம 9:4 எரே 8:8 எரே 8:9 மத் 19:17-20 லூக் 10:26-29 லூக் 18:11 யோவா 5:45 யோவா 9:28 யோவா 9:29 யாக் 1:22-27 யாக் 4:16 யாக் 4:17
24எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.ஏசா 52:5 புலம் 2:15 புலம் 2:16 எசே 36:20-23 மத் 18:7 1தீமோ 5:14 1தீமோ 6:1 தீத் 2:5 தீத் 2:8
25நீ நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்; நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாயிற்றே.ரோம 2:28 ரோம 2:29 ரோம 3:1 ரோம 3:2 ரோம 4:11 ரோம 4:12 உபா 30:6 எரே 4:4 கலா 5:3-6 கலா 6:15 எபே 2:11 எபே 2:12
26மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக் கைக்கொண்டால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா?ஏசா 56:6 ஏசா 56:7 மத் 8:11 மத் 8:12 மத் 15:28 அப் 10:2-4 அப் 10:34-4 அப் 10:35-4 அப் 11:3-18 1கொரி 7:18 1கொரி 7:19 பிலிப் 3:3 கொலோ 2:11
27சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாயிருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாயிருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானல்லவா?ரோம 8:4 ரோம 13:10 மத் 3:15 மத் 5:17-20 அப் 13:22 கலா 5:14
28ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.ரோம 9:6-8 சங் 73:1 ஏசா 1:9-15 ஏசா 48:1 ஏசா 48:2 ஓசி 1:6-9 மத் 3:9 யோவா 1:47 யோவா 8:37-39 கலா 6:15 வெளிப் 2:9
29உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.1சாமு 16:7 1நாளா 29:17 சங் 45:13 எரே 4:14 மத் 23:25-28 லூக் 11:39 லூக் 17:21 யோவா 4:23 1பேது 3:4
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.