| 1 | விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள். | ரோம 14:21 ரோம 4:19 ரோம 15:1 ரோம 15:7 யோபு 4:3 ஏசா 35:3 ஏசா 35:4 ஏசா 40:11 ஏசா 42:3 எசே 34:4 எசே 34:16 சகரி 11:16 மத் 12:20 மத் 14:31 மத் 18:6 மத் 18:10 லூக் 17:2 1கொரி 3:1 1கொரி 3:2 1கொரி 8:7-13 1கொரி 9:22 |
| 2 | ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளைமாத்திரம் புசிக்கிறான். | ரோம 14:14 1கொரி 10:25 கலா 2:12 1தீமோ 4:4 தீத் 1:15 எபிரெ 9:10 எபிரெ 13:9 |
| 3 | புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே. | ரோம 14:10 ரோம 14:15 ரோம 14:21 சகரி 4:10 மத் 18:10 லூக் 18:9 1கொரி 8:11-13 |
| 4 | மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே. | ரோம 9:20 அப் 11:17 1கொரி 4:4 1கொரி 4:5 யாக் 4:11 யாக் 4:12 |
| 5 | அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன். | கலா 4:9 கலா 4:10 கொலோ 2:16 கொலோ 2:17 |
| 6 | நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறான். | கலா 4:10 |
| 7 | நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை. | ரோம 14:9 1கொரி 6:19 1கொரி 6:20 2கொரி 5:15 கலா 2:19 கலா 2:20 பிலிப் 1:20-24 1தெச 5:10 தீத் 2:14 1பேது 4:2 |
| 8 | நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம். | யோவா 21:19 அப் 13:36 அப் 20:24 அப் 21:13 பிலிப் 2:17 பிலிப் 2:30 1தெச 5:10 |
| 9 | கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார். | ஏசா 53:10-12 லூக் 24:26 2கொரி 5:14 எபிரெ 12:2 1பேது 1:21 வெளிப் 1:18 |
| 10 | இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே. | ரோம 14:3 ரோம 14:4 லூக் 23:11 அப் 4:11 |
| 11 | அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. | எண் 14:21 எண் 14:28 ஏசா 49:18 எரே 22:24 எசே 5:11 செப் 2:9 |
| 12 | ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான். | பிரச 11:9 மத் 12:36 மத் 18:23-35 லூக் 16:2 கலா 6:5 1பேது 4:5 |
| 13 | இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள். | ரோம 14:4 ரோம 14:10 யாக் 2:4 யாக் 4:11 |
| 14 | ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும். | அப் 10:28 |
| 15 | போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே. | எசே 13:22 1கொரி 8:12 |
| 16 | உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள். | ரோம 12:17 1கொரி 10:29 1கொரி 10:30 2கொரி 8:20 2கொரி 8:21 1தெச 5:22 |
| 17 | தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. | தானி 2:44 மத் 3:2 மத் 6:33 லூக் 14:15 லூக் 17:20 லூக் 17:21 யோவா 3:3 யோவா 3:5 1கொரி 4:20 1கொரி 6:9 1தெச 2:12 |
| 18 | இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப்பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான். | ரோம 14:4 ரோம 6:22 ரோம 12:11 ரோம 16:18 மாற் 13:34 யோவா 12:26 1கொரி 7:22 கலா 6:15 கலா 6:16 கொலோ 3:24 தீத் 2:11-14 |
| 19 | ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம். | ரோம 12:18 சங் 34:14 சங் 133:1 மத் 5:9 மாற் 9:50 2கொரி 13:11 எபே 4:3-7 பிலிப் 2:1-4 கொலோ 3:12-15 எபிரெ 12:14 யாக் 3:13-18 1பேது 3:11 |
| 20 | போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும். | ரோம 14:15 மத் 18:6 1கொரி 6:12 1கொரி 6:13 1கொரி 8:8 1கொரி 8:13 1கொரி 10:31 |
| 21 | மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும். | ரோம 14:17 ரோம 15:1 ரோம 15:2 1கொரி 8:13 |
| 22 | உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்கு முன்பாக உன்மட்டும் இருக்கட்டும். நல்லதென்று நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான். | ரோம 14:2 ரோம 14:5 ரோம 14:14 ரோம 14:23 கலா 6:1 யாக் 3:13 |
| 23 | ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே. | 1கொரி 8:7 |