| 1 | எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. | உபா 17:12 எபே 5:21 தீத் 3:1 1பேது 2:13-17 2பேது 2:10 2பேது 2:11 யூதா 1:8 |
| 2 | ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள். | எரே 23:8-17 எரே 44:14-17 தீத் 3:1 |
| 3 | மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும். | ரோம 13:4 உபா 25:1 நீதி 14:35 நீதி 20:2 பிரச 10:4-6 எரே 22:15-18 |
| 4 | உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவவூழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவவூழியக்காரனாயிருக்கிறானே. | ரோம 13:6 1இரா 10:9 2நாளா 19:6 சங் 82:2-4 நீதி 24:23 நீதி 24:24 நீதி 31:8 நீதி 31:9 பிரச 8:2-5 ஏசா 1:17 எரே 5:28 எசே 22:27 மீகா 3:1-4 மீகா 3:9-4 |
| 5 | ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும். | 1சாமு 24:5 1சாமு 24:6 பிரச 8:2 தீத் 3:1 தீத் 3:2 1பேது 2:13-15 |
| 6 | இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவவூழியக்காரராயிருக்கிறார்களே. | எஸ்றா 4:13 எஸ்றா 4:20 எஸ்றா 6:8 நெகே 5:4 மத் 17:24-27 மத் 22:17-21 மாற் 12:14-17 லூக் 20:21-26 லூக் 23:2 |
| 7 | ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள். | லூக் 20:25 |
| 8 | ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். | ரோம 13:7 உபா 24:14 உபா 24:15 நீதி 3:27 நீதி 3:28 மத் 7:12 மத் 22:39 மத் 22:40 |
| 9 | எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது. | யாத் 20:12-17 உபா 5:16-21 மத் 19:18 மத் 19:19 மாற் 10:19 லூக் 18:20 |
| 10 | அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது. | 1கொரி 13:4-7 |
| 11 | நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. | ஏசா 21:11 ஏசா 21:12 மத் 16:3 மத் 24:42-44 1தெச 5:1-3 |
| 12 | இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம். | உன்ன 2:17 1யோவா 2:8 |
| 13 | களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம். | லூக் 1:6 கலா 5:16 கலா 5:25 எபே 4:1 எபே 4:17 எபே 5:2 எபே 5:8 எபே 5:15 பிலிப் 1:27 பிலிப் 3:16-20 பிலிப் 4:8 பிலிப் 4:9 கொலோ 1:10 1தெச 2:12 1தெச 4:12 1பேது 2:12 1யோவா 2:6 2யோவா 1:4 |
| 14 | துர்யிச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள். | கலா 3:27 எபே 4:24 கொலோ 3:10-12 |