| 1 | அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை. | ரோம 15:30 1கொரி 1:10 2கொரி 5:20 2கொரி 6:1 2கொரி 10:1 எபே 4:1 1தெச 4:1 1தெச 4:10 1தெச 5:12 எபிரெ 13:22 |
| 2 | நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். | யாத் 23:2 லேவி 18:29 லேவி 18:30 உபா 18:9-14 யோவா 7:7 யோவா 14:30 யோவா 15:19 யோவா 17:14 1கொரி 3:19 2கொரி 4:4 2கொரி 6:14-17 கலா 1:4 எபே 2:2 எபே 4:17-20 யாக் 1:27 யாக் 4:4 1பேது 1:14 1பேது 1:18 1பேது 4:2 2பேது 1:4 2பேது 2:20 1யோவா 2:15-17 1யோவா 3:13 1யோவா 4:4 1யோவா 4:5 1யோவா 5:19 வெளிப் 12:9 வெளிப் 13:8 |
| 3 | அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும். | ரோம 12:6-8 ரோம 1:5 ரோம 15:15 ரோம 15:16 1கொரி 3:10 1கொரி 15:10 கலா 2:8 கலா 2:9 எபே 3:2 எபே 3:4 எபே 3:7 எபே 3:8 எபே 4:7-12 கொலோ 1:29 1தீமோ 1:14 1பேது 4:11 |
| 4 | ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல, | 1கொரி 12:4 1கொரி 12:12 1கொரி 12:27 எபே 4:15 எபே 4:16 |
| 5 | அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம். | ரோம 12:4 1கொரி 10:17 1கொரி 12:12-14 1கொரி 12:20-14 1கொரி 12:27-14 1கொரி 12:28-14 எபே 1:23 எபே 4:25 எபே 5:23 எபே 5:30 கொலோ 1:24 கொலோ 2:19 |
| 6 | நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன். | ரோம 1:11 1கொரி 1:5-7 1கொரி 4:6 1கொரி 4:7 1கொரி 12:4-11 1கொரி 12:28-31 1கொரி 13:2 1பேது 4:10 1பேது 4:11 |
| 7 | ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், | ஏசா 21:8 எசே 3:17-21 எசே 33:7-9 மத் 24:45-47 லூக் 12:42-44 அப் 20:20 அப் 20:28 கொலோ 4:17 1தீமோ 4:16 2தீமோ 4:2 1பேது 5:1-4 |
| 8 | புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன். | அப் 13:15 அப் 15:32 அப் 20:2 1கொரி 14:3 1தெச 2:3 1தீமோ 4:13 எபிரெ 10:25 எபிரெ 13:22 |
| 9 | உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள். | 2சாமு 20:9 2சாமு 20:10 சங் 55:21 நீதி 26:25 எசே 33:31 மத் 26:49 யோவா 12:6 2கொரி 6:6 2கொரி 8:8 1தெச 2:3 1தீமோ 1:5 யாக் 2:15 யாக் 2:16 1பேது 1:22 1பேது 4:8 1யோவா 3:18-20 |
| 10 | சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். | யோவா 13:34 யோவா 13:35 யோவா 15:17 யோவா 17:21 அப் 4:32 கலா 5:6 கலா 5:13 கலா 5:22 எபே 4:1-3 கொலோ 1:4 1தெச 4:9 2தெச 1:3 எபிரெ 13:1 1பேது 1:22 1பேது 2:17 1பேது 3:8 1பேது 3:9 2பேது 1:7 1யோவா 2:9-11 1யோவா 3:10-18 1யோவா 4:11 1யோவா 4:20 1யோவா 4:21 1யோவா 5:1 1யோவா 5:2 |
| 11 | அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள். | யாத் 5:17 நீதி 6:6-9 நீதி 10:26 நீதி 13:4 நீதி 18:9 நீதி 22:29 நீதி 24:30-34 நீதி 26:13-16 பிரச 9:10 ஏசா 56:10 மத் 25:26 அப் 20:34 அப் 20:35 எபே 4:28 1தெச 4:11 1தெச 4:12 2தெச 3:6-12 1தீமோ 5:13 எபிரெ 6:10 எபிரெ 6:11 |
| 12 | நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள். | ரோம 5:2 ரோம 5:3 ரோம 15:13 சங் 16:9-11 சங் 71:20-23 சங் 73:24-26 நீதி 10:28 நீதி 14:32 புலம் 3:24-26 ஆபகூ 3:17 ஆபகூ 3:18 மத் 5:12 லூக் 10:20 1கொரி 13:13 பிலிப் 3:1 பிலிப் 4:4 கொலோ 1:27 1தெச 5:8 1தெச 5:16 2தெச 2:16 2தெச 2:17 தீத் 2:13 தீத் 3:7 எபிரெ 3:6 எபிரெ 6:17-19 1பேது 1:3-8 1பேது 4:13 1யோவா 3:1-3 |
| 13 | பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள். | ரோம 12:8 ரோம 15:25-28 சங் 41:1 அப் 4:35 அப் 9:36-41 அப் 10:4 அப் 20:34 அப் 20:35 1கொரி 16:1 1கொரி 16:2 2கொரி 8:1-4 2கொரி 9:1 2கொரி 9:12 கலா 6:10 பிலேமோ 1:7 எபிரெ 6:10 எபிரெ 13:16 1யோவா 3:17 |
| 14 | உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள். | ரோம 12:21 யோபு 31:29 யோபு 31:30 மத் 5:44 லூக் 6:28 லூக் 23:34 அப் 7:60 1கொரி 4:12 1கொரி 4:13 1தெச 5:15 யாக் 3:10 1பேது 2:21-23 1பேது 3:9 |
| 15 | சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள். | ஏசா 66:10-14 லூக் 1:58 லூக் 15:5-10 அப் 11:23 1கொரி 12:26 2கொரி 2:3 பிலிப் 2:17 பிலிப் 2:18 பிலிப் 2:28 |
| 16 | ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள். | ரோம 15:5 ரோம 6:2 2நாளா 30:12 எரே 32:39 அப் 4:32 1கொரி 1:10 பிலிப் 1:27 பிலிப் 2:2 பிலிப் 2:3 பிலிப் 3:16 பிலிப் 4:2 1பேது 3:8 |
| 17 | ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். | ரோம 12:19 நீதி 20:22 மத் 5:39 1தெச 5:15 1பேது 3:9 |
| 18 | கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். | ரோம 14:17 ரோம 14:19 2சாமு 20:19 சங் 34:14 சங் 120:5-7 நீதி 12:20 மத் 5:5 மத் 5:9 மாற் 9:50 1கொரி 7:15 2கொரி 13:11 கலா 5:22 எபே 4:3 கொலோ 3:14 கொலோ 3:15 1தெச 5:13 2தீமோ 2:22 எபிரெ 12:14 யாக் 3:16-18 1பேது 3:11 |
| 19 | பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். | ரோம 12:14 ரோம 12:17 லேவி 19:18 1சாமு 25:26 1சாமு 25:33 நீதி 24:17-19 நீதி 24:29-19 எசே 25:12 |
| 20 | அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய். | யாத் 23:4 யாத் 23:5 1சாமு 24:16-19 1சாமு 26:21 நீதி 25:21 நீதி 25:22 மத் 5:44 |
| 21 | நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு. | நீதி 16:32 லூக் 6:27-30 1பேது 3:9 |