| 1 | சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது. | ரோம 9:1-3 யாத் 32:10 யாத் 32:13 1சாமு 12:23 1சாமு 15:11 1சாமு 15:35 1சாமு 16:1 எரே 17:16 எரே 18:20 லூக் 13:34 யோவா 5:34 1கொரி 9:20-22 |
| 2 | தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல. | 2கொரி 8:3 கலா 4:15 கொலோ 4:13 |
| 3 | எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள். | ரோம 1:17 ரோம 3:22 ரோம 3:26 ரோம 5:19 ரோம 9:30 சங் 71:15 சங் 71:16 சங் 71:19 ஏசா 51:6 ஏசா 51:8 ஏசா 56:1 எரே 23:5 எரே 23:6 தானி 9:24 யோவா 16:9 யோவா 16:10 2கொரி 5:21 2பேது 1:1 |
| 4 | விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார். | ரோம 3:25-31 ரோம 8:3 ரோம 8:4 ஏசா 53:11 மத் 3:15 மத் 5:17 மத் 5:18 யோவா 1:17 அப் 13:38 அப் 13:39 1கொரி 1:30 கலா 3:24 கொலோ 2:10 கொலோ 2:17 எபிரெ 9:7-14 எபிரெ 10:8-12 எபிரெ 10:14-12 |
| 5 | மோசே நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து: இவைகளைச் செய்கிற மனுஷன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான். | லேவி 18:5 நெகே 9:29 எசே 20:11 எசே 20:13 எசே 20:21 லூக் 10:27 லூக் 10:28 கலா 3:12 |
| 6 | விசுவாசத்தினாலாகும் நீதியானது: கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்? | ரோம 3:22 ரோம 3:25 ரோம 4:13 ரோம 9:31 பிலிப் 3:9 எபிரெ 11:7 |
| 7 | அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக என்று சொல்லுகிறதுமன்றி; | ரோம 4:25 எபிரெ 13:20 1பேது 3:18 1பேது 3:22 வெளிப் 1:18 |
| 8 | இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே. | உபா 30:14 |
| 9 | என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். | ரோம 14:11 மத் 10:32 மத் 10:33 லூக் 12:8 யோவா 9:22 யோவா 12:42 யோவா 12:43 பிலிப் 2:11 1யோவா 4:2 1யோவா 4:3 2யோவா 1:7 |
| 10 | நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். | லூக் 8:15 யோவா 1:12 யோவா 1:13 யோவா 3:19-21 எபிரெ 3:12 எபிரெ 10:22 |
| 11 | அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. | ரோம 9:33 ஏசா 28:16 ஏசா 49:23 எரே 17:7 1பேது 2:6 |
| 12 | யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். | ரோம 3:22 ரோம 3:29 ரோம 3:30 ரோம 4:11 ரோம 4:12 ரோம 9:24 அப் 10:34 அப் 10:35 அப் 15:8 அப் 15:9 கலா 3:28 எபே 2:18-22 எபே 3:6 கொலோ 3:11 |
| 13 | ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். | யோவே 2:32 அப் 2:21 |
| 14 | அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? | 1இரா 8:41-43 யோனா 1:5 யோனா 1:9-11 யோனா 1:16-11 யோனா 3:5-9 எபிரெ 11:6 யாக் 5:15 |
| 15 | அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே. | எரே 23:32 மத் 9:38 மத் 10:1-6 மத் 28:18-20 லூக் 10:1 யோவா 20:21 அப் 9:15 அப் 13:2-4 அப் 22:21 1கொரி 12:28 1கொரி 12:29 2கொரி 5:18-20 எபே 3:8 எபே 4:11 எபே 4:12 1பேது 1:12 |
| 16 | ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான். | ரோம 3:3 ரோம 11:17 யோவா 10:26 அப் 28:24 எபிரெ 4:2 1பேது 2:8 |
| 17 | ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். | ரோம 10:14 ரோம 1:16 லூக் 16:29-31 1கொரி 1:18-24 கொலோ 1:4-6 1தெச 2:13 2தெச 2:13 2தெச 2:14 யாக் 1:18-21 1பேது 1:23-25 1பேது 2:1 1பேது 2:2 |
| 18 | இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே. | அப் 2:5-11 அப் 26:20 அப் 28:23 |
| 19 | இஸ்ரவேலர் அதை அறியவில்லையா என்று கேட்கிறேன், அறிந்தார்கள். முதலாவது, மோசே: எனக்கு ஜனங்களல்லாதவர்களைக்கொண்டு நான் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன்; புத்தியீனமுள்ள ஜனங்களாலே உங்களுக்குக் கோபமூட்டுவேன் என்றான். | ரோம 10:18 ரோம 3:26 1கொரி 1:12 1கொரி 7:29 1கொரி 10:19 1கொரி 11:22 1கொரி 15:50 |
| 20 | அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று தைரியங்கொண்டு சொல்லுகிறான். | நீதி 28:1 ஏசா 58:1 எபே 6:19 எபே 6:20 |
| 21 | இஸ்ரவேலரைக்குறித்தோ: கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாயிருக்கிற ஜனங்களிடத்திற்கு நாள்முழுவதும் என் கைகளை நீட்டினேன் என்று அவன் சொல்லியிருக்கிறான். | நீதி 1:24 ஏசா 65:2-5 எரே 25:4 எரே 35:15 மத் 20:1-15 மத் 21:33-43 மத் 22:3-7 மத் 23:34-37 லூக் 24:47 அப் 13:46 அப் 13:47 |