இணை வசன வேதாகமம்

Click to Subscribe

யோவான் 20

                   
புத்தகங்களைக் காட்டு
1வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள்.யோவா 20:19 யோவா 20:26 அப் 20:7 1கொரி 16:2 வெளிப் 1:10
2உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.யோவா 13:23 யோவா 19:26 யோவா 21:7 யோவா 21:20 யோவா 21:24
3அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.லூக் 24:12
4பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து,2சாமு 18:23 லேவி 13:30 1கொரி 9:24 2கொரி 8:12
5அதற்குள்ளே குனிந்து பார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.யோவா 11:44 யோவா 19:40
6சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து,யோவா 6:67-69 யோவா 18:17 யோவா 18:25-27 யோவா 21:7 யோவா 21:15-17 மத் 16:15 மத் 16:16 லூக் 22:31 லூக் 22:32
7சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.யோவா 11:44
8முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான்.யோவா 20:25 யோவா 20:29 யோவா 1:50
9அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.மத் 16:21 மத் 16:22 மாற் 8:31-33 மாற் 9:9 மாற் 9:10 மாற் 9:31 மாற் 9:32 லூக் 9:45 லூக் 18:33 லூக் 18:34 லூக் 24:26 லூக் 24:44-46
10பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.யோவா 7:53 யோவா 16:32
11மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,
12இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.மத் 28:3-5 மாற் 16:5 மாற் 16:6 லூக் 24:3-7 லூக் 24:22-7 லூக் 24:23-7
13அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.யோவா 2:4 யோவா 19:26
14இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.உன்ன 3:3 உன்ன 3:4 மத் 28:9 மாற் 16:9
15இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.யோவா 1:38 யோவா 18:4 யோவா 18:7 உன்ன 3:2 உன்ன 6:1 மத் 28:5 மாற் 16:6 லூக் 24:5
16இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.யோவா 10:3 ஆதி 22:1 ஆதி 22:11 யாத் 3:4 யாத் 33:17 1சாமு 3:6 1சாமு 3:10 ஏசா 43:1 லூக் 10:41 அப் 9:4 அப் 10:3
17இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.யோவா 20:27 2இரா 4:29 2இரா 7:9 மத் 28:7 மத் 28:9 லூக் 10:4
18மகதலேனாமரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.மத் 28:10 மாற் 16:10-13 லூக் 24:10
19வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.மாற் 16:14 லூக் 24:36-49 1கொரி 15:5
20அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.யோவா 20:27 லூக் 24:39 லூக் 24:40 1யோவா 1:1
21இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,யோவா 14:27
22அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;ஆதி 2:7 யோபு 33:4 சங் 33:6 எசே 37:9
23எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.மத் 16:19 மத் 18:18 மாற் 2:5-10 அப் 2:38 அப் 10:43 அப் 13:38 அப் 13:39 1கொரி 5:4 2கொரி 2:6-10 எபே 2:20 1தீமோ 1:20
24இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.யோவா 11:16 யோவா 14:5 யோவா 21:2 மத் 10:3
25மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.யோவா 20:14-20 யோவா 1:41 யோவா 21:7 மாற் 16:11 லூக் 24:34-40 அப் 5:30-32 அப் 10:40 அப் 10:41 1கொரி 15:5-8
26மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.யோவா 20:19 மத் 17:1 லூக் 9:28
27பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.யோவா 20:25 சங் 78:38 சங் 103:13 சங் 103:14 ரோம 5:20 1தீமோ 1:14-16 1யோவா 1:1 1யோவா 1:2
28தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.யோவா 20:16 யோவா 20:31 யோவா 5:23 யோவா 9:35-38 சங் 45:6 சங் 45:11 சங் 102:24-28 சங் 118:24-28 ஏசா 7:14 ஏசா 9:6 ஏசா 25:9 ஏசா 40:9-11 எரே 23:5 எரே 23:6 மல்கி 3:1 மத் 14:33 லூக் 24:52 அப் 7:59 அப் 7:60 1தீமோ 3:16 வெளிப் 5:9-14
29அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.யோவா 20:8 யோவா 4:48 லூக் 1:45 2கொரி 5:7 எபிரெ 11:1 எபிரெ 11:27 எபிரெ 11:39 1பேது 1:8
30இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.யோவா 21:25 லூக் 1:3 லூக் 1:4 ரோம 15:4 1கொரி 10:11 2தீமோ 3:15-17 2பேது 3:1 2பேது 3:2 1யோவா 1:3 1யோவா 1:4 1யோவா 5:13
31இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.யோவா 20:28 யோவா 1:49 யோவா 6:69 யோவா 6:70 யோவா 9:35-38 சங் 2:7 சங் 2:12 மத் 16:16 மத் 27:54 லூக் 1:4 அப் 8:37 அப் 9:20 ரோம 1:3 ரோம 1:4 1யோவா 4:15 1யோவா 5:1 1யோவா 5:10 1யோவா 5:20 2யோவா 1:9 வெளிப் 2:18
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.