| 1 | சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார். | லூக் 11:5-8 லூக் 21:36 ஆதி 32:9-12 ஆதி 32:24-26 யோபு 27:8-10 சங் 55:16 சங் 55:17 சங் 65:2 சங் 86:3 சங் 102:17 சங் 142:5-7 எரே 29:12 ரோம 12:12 எபே 6:18 பிலிப் 4:6 கொலோ 4:2 கொலோ 4:12 1தெச 5:17 |
| 2 | ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான். | லூக் 18:4 யாத் 18:21 யாத் 18:22 2நாளா 19:3-9 யோபு 29:7-17 சங் 8:1-4 எரே 22:16 எரே 22:17 எசே 22:6-8 மீகா 3:1-3 ரோம 3:14-18 |
| 3 | அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள். | உபா 27:19 2சாமு 14:5-24 யோபு 22:9 யோபு 29:13 ஏசா 1:17 ஏசா 1:21-23 எரே 5:28 |
| 4 | வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும், | லூக் 12:17 லூக் 16:3 எபிரெ 4:12 எபிரெ 4:13 |
| 5 | இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார். | லூக் 11:8 நியா 16:16 2சாமு 13:24-27 |
| 6 | பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள். |
| 7 | அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? | லூக் 11:13 மத் 7:11 |
| 8 | சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார். | சங் 46:5 சங் 143:7-9 2பேது 2:3 2பேது 3:8 2பேது 3:9 |
| 9 | அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். | லூக் 10:29 லூக் 15:29 லூக் 16:15 நீதி 30:12 ஏசா 65:5 ஏசா 66:5 யோவா 9:28 யோவா 9:34 ரோம 7:9 ரோம 9:31 ரோம 9:32 ரோம 10:3 பிலிப் 3:4-6 |
| 10 | இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். | லூக் 1:9 லூக் 1:10 லூக் 19:46 1இரா 8:30 அப் 3:1 |
| 11 | பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். | சங் 134:1 சங் 135:2 மத் 6:5 மாற் 11:25 |
| 12 | வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். | லூக் 17:10 எண் 23:4 1சாமு 15:13 2இரா 10:16 ஏசா 1:15 ஏசா 58:2 ஏசா 58:3 சகரி 7:5 சகரி 7:6 மத் 6:1 மத் 6:5 மத் 6:16 மத் 9:14 மத் 15:7-9 ரோம 3:27 ரோம 10:1-3 1கொரி 1:29 கலா 1:14 எபே 2:9 1தீமோ 4:8 |
| 13 | ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். | லூக் 5:8 லூக் 7:6 லூக் 7:7 லூக் 17:12 எஸ்றா 9:6 யோபு 42:6 சங் 40:12 ஏசா 6:5 எசே 16:63 தானி 9:7-9 அப் 2:37 |
| 14 | அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். | லூக் 5:24 லூக் 5:25 லூக் 7:47-50 1சாமு 1:18 பிரச 9:7 |
| 15 | பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள். | 1சாமு 1:24 மத் 19:13-15 மாற் 10:13-16 |
| 16 | இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. | ஆதி 47:10-14 ஆதி 21:4 உபா 29:11 உபா 31:12 2நாளா 20:13 எரே 32:39 அப் 2:39 1கொரி 7:14 |
| 17 | எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். | சங் 131:1 சங் 131:2 மாற் 10:15 1பேது 1:14 |
| 18 | அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். | மத் 19:16-30 மாற் 10:17-31 |
| 19 | அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே. | லூக் 1:35 லூக் 11:13 யோபு 14:4 யோபு 15:14-16 யோபு 25:4 1தீமோ 3:16 எபிரெ 7:26 யாக் 1:17 |
| 20 | விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார். | லூக் 10:26-28 ஏசா 8:20 மத் 19:17-19 மாற் 10:18 மாற் 10:19 ரோம 3:20 ரோம 7:7-11 |
| 21 | அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். | லூக் 18:11 லூக் 18:12 லூக் 15:7 லூக் 15:29 மத் 19:20 மத் 19:21 மாற் 10:20 மாற் 10:21 ரோம 10:2 ரோம 10:3 பிலிப் 3:6 |
| 22 | இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். | லூக் 10:42 சங் 27:4 பிலிப் 3:13 2பேது 3:8 |
| 23 | அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான். | லூக் 8:14 லூக் 12:15 லூக் 19:8 லூக் 21:34 நியா 18:23 நியா 18:24 யோபு 31:24 யோபு 31:25 எசே 33:31 மத் 19:22 மாற் 10:22 எபே 5:5 பிலிப் 3:8 கொலோ 3:5 1யோவா 2:15 |
| 24 | அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது. | மாற் 6:26 2கொரி 7:9 2கொரி 7:10 |
| 25 | ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். | மத் 23:24 |
| 26 | அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். | லூக் 13:23 |
| 27 | அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார். | லூக் 1:37 ஆதி 18:14 யோபு 42:2 எரே 32:17 தானி 4:35 சகரி 8:6 மத் 19:26 எபே 1:19 எபே 1:20 எபே 2:4-10 |
| 28 | அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான். | லூக் 5:11 மத் 4:19-22 மத் 9:9 மத் 19:27 மாற் 10:28 பிலிப் 3:7 |
| 29 | அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரரையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும், | லூக் 14:26-28 உபா 33:9 மத் 10:37-39 மத் 19:28-30 மாற் 10:29-31 |
| 30 | இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். | லூக் 12:31 லூக் 12:32 யோபு 42:10 சங் 37:16 சங் 63:4 சங் 63:5 சங் 84:10-12 சங் 119:72 சங் 119:103 சங் 119:111 சங் 119:127 சங் 119:162 ரோம 6:21-23 1தீமோ 4:8 1தீமோ 6:6 எபிரெ 13:5 எபிரெ 13:6 வெளிப் 2:10 வெளிப் 2:17 வெளிப் 3:21 |
| 31 | பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும். | லூக் 9:22 லூக் 24:6 லூக் 24:7 மத் 16:21 மத் 17:22 மத் 17:23 மத் 20:17-19 மாற் 8:31 மாற் 8:9 மாற் 8:30 மாற் 8:31 மாற் 10:32-34 |
| 32 | எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார். | லூக் 23:1 லூக் 23:11 மத் 27:2 மாற் 15:1 யோவா 18:28 யோவா 18:30 யோவா 18:35 அப் 3:13 |
| 33 | அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். | லூக் 24:7 லூக் 24:21 மத் 27:63 1கொரி 15:3 1கொரி 15:4 |
| 34 | இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. | லூக் 2:50 லூக் 9:45 லூக் 24:25 லூக் 24:45 மாற் 9:32 யோவா 10:6 யோவா 12:16 யோவா 16:1-19 |
| 35 | பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். | மத் 20:29 மத் 20:30 மாற் 10:46 மாற் 10:47 |
| 36 | ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான். | லூக் 15:26 மத் 21:10 மத் 21:11 |
| 37 | நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான். | மாற் 2:1-3 யோவா 12:35 யோவா 12:36 2கொரி 6:2 |
| 38 | முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான். | சங் 62:12 ஏசா 9:6 ஏசா 9:7 ஏசா 11:1 எரே 23:5 மத் 9:27 மத் 12:23 மத் 15:22 மத் 21:9 மத் 21:15 மத் 22:42-45 ரோம 1:3 வெளிப் 22:16 |
| 39 | இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார். | லூக் 18:15 லூக் 8:49 லூக் 11:52 லூக் 19:39 |
| 40 | அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி: | மத் 20:31-34 மாற் 10:48-52 |
| 41 | நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். | 1இரா 3:5-15 மத் 20:21 மத் 20:22 ரோம 8:25 பிலிப் 4:6 |
| 42 | இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். | சங் 33:9 சங் 107:20 மத் 8:3 மத் 15:28 |
| 43 | உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள். | சங் 30:2 சங் 146:8 ஏசா 29:18 ஏசா 29:19 ஏசா 35:5 ஏசா 42:16 ஏசா 43:8 மத் 9:28-30 மத் 11:5 மத் 21:14 யோவா 9:5-7 யோவா 9:39-7 யோவா 9:40-7 அப் 26:18 |