| 1 | பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது. | மத் 18:23 மத் 18:24 மத் 25:14-30 |
| 2 | அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கையொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான். | ஆதி 3:9-11 ஆதி 4:9 ஆதி 4:10 ஆதி 18:20 ஆதி 18:21 1சாமு 2:23 1சாமு 2:24 1கொரி 1:11 1தீமோ 5:24 |
| 3 | அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன். | லூக் 18:4 எஸ்தர் 6:6 |
| 4 | உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளுவார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு; | நீதி 30:9 எரே 4:22 யாக் 3:15 |
| 5 | தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான். | லூக் 7:41 லூக் 7:42 மத் 18:24 |
| 6 | அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான். | லூக் 16:9 லூக் 16:12 தீத் 2:10 |
| 7 | பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான். | லூக் 20:9 லூக் 20:12 உன்ன 8:11 உன்ன 8:12 |
| 8 | அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள். | லூக் 16:10 லூக் 18:6 |
| 9 | நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள். | லூக் 11:41 லூக் 14:14 நீதி 19:17 பிரச 11:1 ஏசா 58:7 ஏசா 58:8 தானி 4:27 மத் 6:19 மத் 19:21 மத் 25:35-40 அப் 10:4 அப் 10:31 2கொரி 9:12-15 1தீமோ 6:17-19 2தீமோ 1:16-18 |
| 10 | கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான். | லூக் 16:11 லூக் 16:12 லூக் 19:17 மத் 25:21 எபிரெ 3:2 |
| 11 | அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யானபொருளை ஒப்புவிப்பார்கள்? | லூக் 12:33 லூக் 18:22 நீதி 8:18 நீதி 8:19 எபே 3:8 யாக் 2:5 வெளிப் 3:18 |
| 12 | வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்? | லூக் 19:13-26 1நாளா 29:14-16 யோபு 1:21 எசே 16:16-21 ஓசி 2:8 மத் 25:14-29 |
| 13 | எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார். | லூக் 9:50 லூக் 11:23 யோசு 24:15 மத் 4:10 மத் 6:24 ரோம 6:16-22 ரோம 8:5-8 யாக் 4:4 1யோவா 2:15 1யோவா 2:16 |
| 14 | இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம் பண்ணினார்கள். | லூக் 12:15 லூக் 20:47 ஏசா 56:11 எரே 6:13 எரே 8:10 எசே 22:25-29 எசே 33:31 மத் 23:14 |
| 15 | அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது. | லூக் 10:29 லூக் 11:39 லூக் 18:11 லூக் 18:21 லூக் 20:20 லூக் 20:47 நீதி 20:6 மத் 6:2 மத் 6:5 மத் 6:16 மத் 23:5 மத் 23:25-27 ரோம 3:20 யாக் 2:21-25 |
| 16 | நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனவாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள். | லூக் 16:29 லூக் 16:31 மத் 11:9-14 யோவா 1:45 அப் 3:18 அப் 3:24 அப் 3:25 |
| 17 | வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும். | லூக் 21:33 சங் 102:25-27 ஏசா 51:6 மத் 5:18 2பேது 3:10 வெளிப் 20:11 வெளிப் 21:1 வெளிப் 21:4 |
| 18 | தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான். | மத் 5:32 மத் 19:9 மாற் 10:11 மாற் 10:12 1கொரி 7:4 1கொரி 7:10-12 |
| 19 | ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். | லூக் 12:16-21 லூக் 18:24 லூக் 18:25 யாக் 5:1-5 |
| 20 | லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, | லூக் 18:35-43 1சாமு 2:8 யாக் 1:9 யாக் 2:5 |
| 21 | அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று. | 1கொரி 4:11 2கொரி 11:27 |
| 22 | பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான். | யோபு 3:13-19 ஏசா 57:1 ஏசா 57:2 வெளிப் 14:13 |
| 23 | பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். | சங் 9:17 சங் 16:10 சங் 49:15 சங் 86:13 நீதி 5:5 நீதி 7:27 நீதி 9:18 நீதி 15:24 ஏசா 14:9 ஏசா 14:15 மத் 5:22 மத் 5:29 மத் 18:9 மத் 23:33 1கொரி 15:55 2பேது 2:4 வெளிப் 20:13 வெளிப் 20:14 |
| 24 | அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணிரீல் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜீவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான். | லூக் 16:30 லூக் 3:8 மத் 3:9 யோவா 8:33-39 யோவா 8:53-56 ரோம 4:12 ரோம 9:7 ரோம 9:8 |
| 25 | அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங்காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். | லூக் 16:23 புலம் 1:7 தானி 5:22 தானி 5:23 தானி 5:30 மாற் 9:46 |
| 26 | அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான். | 1சாமு 25:36 சங் 49:14 எசே 28:24 மல்கி 3:18 2தெச 1:4-10 யாக் 1:11 யாக் 1:12 யாக் 5:1-7 |
| 27 | அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு, |
| 28 | நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். | சங் 49:12 சங் 49:13 |
| 29 | ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான். | லூக் 16:16 ஏசா 8:20 ஏசா 34:16 மல்கி 4:2-4 யோவா 5:39-45 அப் 15:21 அப் 17:11 அப் 17:12 2தீமோ 3:15-17 2பேது 1:19-21 |
| 30 | அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப்போனால் மனந்திரும்புவார்கள் என்றான். | லூக் 13:3 லூக் 13:5 வெளிப் 16:9-11 |
| 31 | அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார். | யோவா 11:43-53 யோவா 12:10 யோவா 12:11 2கொரி 4:3 |