| 1 | அப்பொழுது பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப்புறப்பட்ட பத்துக்கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். | மத் 24:42-51 லூக் 21:34-36 |
| 2 | அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள். | மத் 7:24-27 மத் 13:19-23 மத் 13:38-43 மத் 13:47-43 மத் 13:48-43 மத் 22:10 மத் 22:11 எரே 24:2 1கொரி 10:1-5 1யோவா 2:19 யூதா 1:5 |
| 3 | புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை. | மத் 23:25 மத் 23:26 ஏசா 48:1 ஏசா 48:2 ஏசா 58:2 எசே 33:3 2தீமோ 3:5 எபிரெ 12:15 வெளிப் 3:1 வெளிப் 3:15 வெளிப் 3:16 |
| 4 | புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். | சங் 45:7 சகரி 4:2 சகரி 4:3 யோவா 1:15 யோவா 1:16 யோவா 3:34 ரோம 8:9 2கொரி 1:22 கலா 5:22 கலா 5:23 1யோவா 2:20 1யோவா 2:27 யூதா 1:19 |
| 5 | மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். | மத் 25:19 மத் 24:48 ஆபகூ 2:3 லூக் 12:45 லூக் 20:9 எபிரெ 10:36 எபிரெ 10:37 2பேது 3:4-9 வெளிப் 2:25 |
| 6 | நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. | மத் 24:44 மாற் 13:33-37 லூக் 12:20 லூக் 12:38-40 லூக் 12:46-40 1தெச 5:1-3 வெளிப் 16:15 |
| 7 | அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். | லூக் 12:35 2பேது 3:14 வெளிப் 2:4 வெளிப் 2:5 வெளிப் 3:2 வெளிப் 3:19 வெளிப் 3:20 |
| 8 | புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள். | மத் 3:9 லூக் 16:24 அப் 8:24 வெளிப் 3:9 |
| 9 | புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். | சங் 49:7-9 எரே 15:1 எசே 14:14-16 எசே 14:20-16 |
| 10 | அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாணவீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. | மத் 25:6 வெளிப் 1:7 வெளிப் 22:12 வெளிப் 22:20 |
| 11 | பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். | மத் 7:21-23 எபிரெ 12:16 எபிரெ 12:17 |
| 12 | அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். | சங் 1:6 சங் 5:5 ஆபகூ 1:13 லூக் 13:26-30 யோவா 9:31 யோவா 10:27 1கொரி 8:3 கலா 4:9 2தீமோ 2:19 |
| 13 | மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். | மத் 24:42-44 மாற் 13:33-37 லூக் 21:36 அப் 20:31 1கொரி 16:13 1தெச 5:6 2தீமோ 4:5 1பேது 4:7 1பேது 5:8 வெளிப் 16:15 |
| 14 | அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது. | மத் 21:33 மாற் 13:34 லூக் 19:12 லூக் 19:13 லூக் 20:9 |
| 15 | அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப்போனான். | மத் 18:24 லூக் 12:48 லூக் 19:13 லூக் 19:14 |
| 16 | ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம்பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். | 2சாமு 7:1-3 1நாளா 13:1-3 1நாளா 22:1-26 1நாளா 28:2-21 1நாளா 29:1-17 2நாளா 1:9 2நாளா 1:10 2நாளா 15:8-15 2நாளா 17:3-9 2நாளா 19:4-10 2நாளா 31:20 2நாளா 31:21 2நாளா 33:15 2நாளா 33:16 2நாளா 34:1-35 நெகே 5:14-19 ஏசா 23:18 ஏசா 49:23 ஏசா 60:5-16 அப் 13:36 ரோம 15:18 ரோம 15:19 1கொரி 9:16-23 1கொரி 15:10 1தீமோ 6:17 1தீமோ 6:18 2தீமோ 2:6 2தீமோ 4:5-8 பிலேமோ 1:6 பிலேமோ 1:7 3யோவா 1:5-8 |
| 17 | அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான். | ஆதி 18:19 2சாமு 19:32 1இரா 18:3 1இரா 18:4 2இரா 4:8-10 யோபு 29:11-17 யோபு 31:16-22 நீதி 3:9 நீதி 3:10 பிரச 11:1-6 மாற் 14:3-8 அப் 9:36-39 அப் 10:2 அப் 11:29 அப் 11:30 2கொரி 8:12 2கொரி 9:11-14 கலா 6:9 கலா 6:10 எபே 5:16 கொலோ 4:17 1தீமோ 5:10 2தீமோ 1:16-18 எபிரெ 6:10 எபிரெ 6:11 1பேது 4:10 |
| 18 | ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான். | நீதி 18:9 நீதி 26:13-16 ஆகா 1:2-4 மல்கி 1:10 லூக் 19:20 எபிரெ 6:12 2பேது 1:8 |
| 19 | வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான். | மத் 25:5 மத் 24:48 |
| 20 | அப்பொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான். | லூக் 19:16 லூக் 19:17 அப் 20:24 1கொரி 15:10 கொலோ 1:29 2தீமோ 4:1-8 யாக் 2:18 |
| 21 | அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். | 2நாளா 31:20 2நாளா 31:21 லூக் 16:10 ரோம 2:29 1கொரி 4:5 2கொரி 5:9 2கொரி 10:18 1பேது 1:7 |
| 22 | இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான். | லூக் 19:18 லூக் 19:19 ரோம 12:6-8 2கொரி 8:1-3 2கொரி 8:7-3 2கொரி 8:8-3 2கொரி 8:12-3 |
| 23 | அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். | மத் 25:21 மாற் 12:41-44 மாற் 14:8 மாற் 14:9 |
| 24 | ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன். | மத் 7:21 லூக் 6:46 |
| 25 | ஆகையால், நான் பயந்து போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான். | 2சாமு 6:9 2சாமு 6:10 நீதி 26:13 ஏசா 57:11 ரோம 8:15 2தீமோ 1:6 2தீமோ 1:7 வெளிப் 21:8 |
| 26 | அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பலுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. | மத் 18:32 யோபு 15:5 யோபு 15:6 |
| 27 | அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி, | லூக் 19:22 லூக் 19:23 ரோம 3:19 யூதா 1:15 |
| 28 | அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள். | லூக் 10:42 லூக் 19:24 |
| 29 | உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். | மத் 13:12 மாற் 4:25 லூக் 8:18 லூக் 16:9-12 லூக் 19:25 லூக் 19:26 யோவா 15:2 |
| 30 | பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான். | மத் 3:10 மத் 5:13 எரே 15:1 எரே 15:2 எசே 15:2-5 லூக் 14:34 லூக் 14:35 யோவா 15:6 தீத் 3:14 எபிரெ 6:7 எபிரெ 6:8 வெளிப் 3:15 வெளிப் 3:16 |
| 31 | அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். | மத் 25:6 மத் 16:27 மத் 19:28 மத் 26:64 தானி 7:13 தானி 7:14 சகரி 14:5 மாற் 8:38 மாற் 14:62 லூக் 9:26 லூக் 22:69 யோவா 1:51 யோவா 5:27-29 அப் 1:11 1தெச 4:16 2தெச 1:7 2தெச 1:8 எபிரெ 1:8 யூதா 1:14 வெளிப் 1:7 |
| 32 | அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, | சங் 96:13 சங் 98:9 அப் 17:30 அப் 17:31 ரோம 2:12 ரோம 2:16 ரோம 14:10-12 2கொரி 5:10 வெளிப் 20:12-15 |
| 33 | செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். | சங் 79:13 சங் 95:7 சங் 100:3 யோவா 10:26-28 யோவா 21:15-17 |
| 34 | அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். | மத் 21:5 மத் 22:11-13 மத் 27:37 சங் 2:6 சங் 24:7-10 ஏசா 9:7 ஏசா 32:1 ஏசா 32:2 ஏசா 33:22 எரே 23:5 எரே 23:6 எசே 37:24 எசே 37:25 தானி 9:25 செப் 3:15 சகரி 9:9 சகரி 9:10 லூக் 1:31-33 லூக் 19:38 யோவா 1:49 யோவா 12:13 யோவா 19:15 யோவா 19:19-22 வெளிப் 19:16 |
| 35 | பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; | மத் 25:40 மத் 10:40-42 மத் 26:11 உபா 15:7-11 யோபு 29:13-16 யோபு 31:16-21 சங் 112:5-10 நீதி 3:9 நீதி 3:10 நீதி 11:24 நீதி 11:25 நீதி 14:21 நீதி 14:31 நீதி 19:17 நீதி 22:9 பிரச 11:1 பிரச 11:2 ஏசா 58:7-11 எசே 18:7 எசே 18:16 தானி 4:27 மீகா 6:8 மாற் 14:7 லூக் 11:41 லூக் 14:12-14 யோவா 13:29 அப் 4:32 அப் 9:36-39 அப் 10:31 அப் 11:29 2கொரி 8:1-4 2கொரி 8:7-9 2கொரி 9:7-14 எபே 4:28 1தீமோ 6:17-19 பிலேமோ 1:7 எபிரெ 6:10 எபிரெ 13:16 யாக் 1:27 1பேது 4:9 1பேது 4:10 1யோவா 3:16-19 |
| 36 | வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். | யோபு 31:19 யோபு 31:20 லூக் 3:11 யாக் 2:14-16 |
| 37 | அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? | மத் 6:3 1நாளா 29:14 நீதி 15:33 ஏசா 64:6 1கொரி 15:10 1பேது 5:5 1பேது 5:6 |
| 38 | எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? |
| 39 | எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். |
| 40 | அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். | மத் 25:34 நீதி 25:6 நீதி 25:7 |
| 41 | அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். | மத் 7:23 சங் 6:8 சங் 119:115 சங் 139:19 லூக் 13:27 |
| 42 | பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; | மத் 25:35 மத் 10:37 மத் 10:38 மத் 12:30 ஆமோ 6:6 யோவா 5:23 யோவா 8:42-44 யோவா 14:21 1கொரி 16:22 2தெச 1:8 யாக் 2:15-24 1யோவா 3:14-17 1யோவா 4:20 |
| 43 | அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார். |
| 44 | அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். | மத் 25:24-27 மத் 7:22 1சாமு 15:13-15 1சாமு 15:20-15 1சாமு 15:21-15 எரே 2:23 எரே 2:35 மல்கி 1:6 மல்கி 2:17 மல்கி 3:13 லூக் 10:29 |
| 45 | அப்பொழுது, அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். | மத் 25:40 ஆதி 12:3 எண் 24:9 சங் 105:15 நீதி 14:31 நீதி 17:5 நீதி 21:13 சகரி 2:8 யோவா 15:18 யோவா 15:19 அப் 9:5 1யோவா 3:12-20 1யோவா 5:1-3 |
| 46 | அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார். | மத் 25:41 தானி 12:2 மாற் 9:44 மாற் 9:46 மாற் 9:48 மாற் 9:49 லூக் 16:26 யோவா 5:29 2தெச 1:9 வெளிப் 14:10 வெளிப் 14:11 வெளிப் 20:10 வெளிப் 20:15 வெளிப் 21:8 |