| 1 | பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி: | மத் 15:10-20 மாற் 7:14 லூக் 12:1 லூக் 12:57 லூக் 20:45 |
| 2 | வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; | நெகே 8:4-8 மல்கி 2:7 மாற் 12:38 லூக் 20:46 |
| 3 | ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். | மத் 15:2-9 யாத் 18:19 யாத் 18:20 யாத் 18:23 உபா 4:5 உபா 5:27 உபா 17:9-12 2நாளா 30:12 அப் 5:29 ரோம 13:1 |
| 4 | சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். | மத் 23:23 மத் 11:28-30 லூக் 11:46 அப் 15:10 அப் 15:28 கலா 6:13 வெளிப் 2:24 |
| 5 | தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி, | மத் 6:1-16 2இரா 10:16 லூக் 16:15 லூக் 20:47 லூக் 21:1 யோவா 5:44 யோவா 7:18 யோவா 12:43 பிலிப் 1:15 பிலிப் 2:3 2தெச 2:4 |
| 6 | விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், | மத் 20:21 நீதி 25:6 நீதி 25:7 மாற் 12:38 மாற் 12:39 லூக் 11:43-54 லூக் 14:7-11 லூக் 20:46 லூக் 20:47 ரோம 12:10 யாக் 2:1-4 3யோவா 1:9 |
| 7 | சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். | யோவா 1:38 யோவா 1:49 யோவா 3:2 யோவா 3:26 யோவா 6:25 யோவா 20:16 |
| 8 | நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். | மத் 23:10 2கொரி 1:24 2கொரி 4:5 யாக் 3:1 1பேது 5:3 |
| 9 | பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். | 2இரா 2:12 2இரா 6:21 2இரா 13:14 யோபு 32:21 யோபு 32:22 அப் 22:1 1கொரி 4:15 1தீமோ 5:1 1தீமோ 5:2 எபிரெ 12:9 |
| 10 | நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். |
| 11 | உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். | மத் 20:26 மத் 20:27 மாற் 10:43 மாற் 10:44 லூக் 22:26 லூக் 22:27 யோவா 13:14 யோவா 13:15 1கொரி 9:19 2கொரி 4:5 2கொரி 11:23 கலா 5:13 பிலிப் 2:5-8 |
| 12 | தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். | மத் 5:3 மத் 18:4 யோபு 22:29 சங் 138:6 நீதி 15:33 நீதி 16:18 நீதி 16:19 நீதி 29:23 ஏசா 57:15 தானி 4:37 லூக் 1:51 லூக் 1:52 லூக் 14:11 லூக் 18:14 யாக் 4:6 1பேது 5:5 |
| 13 | மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை. | மத் 23:14 மத் 23:15 மத் 23:27 மத் 23:29 ஏசா 9:14 ஏசா 9:15 ஏசா 33:14 சகரி 11:17 லூக் 11:43 லூக் 11:44 |
| 14 | மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள். | யாத் 22:22-24 யோபு 22:9 யோபு 31:16-20 மாற் 12:40 லூக் 20:47 2தீமோ 3:6 தீத் 1:10 தீத் 1:11 2பேது 2:14 2பேது 2:15 |
| 15 | மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள். | கலா 4:17 கலா 6:12 |
| 16 | குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். | மத் 23:17 மத் 23:19 மத் 23:24 மத் 23:26 மத் 15:14 ஏசா 56:10 ஏசா 56:11 யோவா 9:39-41 |
| 17 | மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? | சங் 94:8 |
| 18 | மேலும், எவனாகிலும் பலிபீடத்தின் பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். |
| 19 | மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? | யாத் 29:37 யாத் 30:29 |
| 20 | ஆகையால், பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான். |
| 21 | தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான். | 1இரா 8:13 1இரா 8:27 2நாளா 6:2 2நாளா 7:2 சங் 26:8 சங் 132:13 சங் 132:14 எபே 2:22 கொலோ 2:9 |
| 22 | வானத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான். | மத் 5:34 சங் 11:4 ஏசா 66:1 அப் 7:49 வெளிப் 4:2 வெளிப் 4:3 |
| 23 | மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே. | லூக் 11:42 |
| 24 | குருடரான வழிகாட்டிகளே, கொசுகில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள். | மத் 7:4 மத் 15:2-6 மத் 19:24 மத் 27:6-8 லூக் 6:7-10 யோவா 18:28 யோவா 18:40 |
| 25 | மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. | மத் 15:19 மத் 15:20 மாற் 7:4-13 லூக் 11:39 லூக் 11:40 |
| 26 | குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. | மத் 12:33 ஏசா 55:7 எரே 4:14 எரே 13:27 எசே 18:31 லூக் 6:45 2கொரி 7:1 எபிரெ 10:22 யாக் 4:8 |
| 27 | மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். | ஏசா 58:1 ஏசா 58:2 லூக் 11:44 அப் 23:3 |
| 28 | அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். | மத் 23:5 1சாமு 16:7 சங் 51:6 எரே 17:9 எரே 17:10 லூக் 16:15 எபிரெ 4:12 எபிரெ 4:13 |
| 29 | மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து: | லூக் 11:47 லூக் 11:48 அப் 2:29 |
| 30 | எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள். | மத் 23:34 மத் 23:35 மத் 21:35 மத் 21:36 2நாளா 36:15 எரே 2:30 |
| 31 | ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள். | யோசு 24:22 யோபு 15:5 யோபு 15:6 சங் 64:8 லூக் 19:22 |
| 32 | நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள். | ஆதி 15:16 எண் 32:14 சகரி 5:6-11 |
| 33 | சர்ப்பங்களே, விரியன்பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? | மத் 3:7 மத் 12:34 மத் 21:34 மத் 21:35 ஆதி 3:15 சங் 58:3-5 ஏசா 57:3 ஏசா 57:4 லூக் 3:7 யோவா 8:44 2கொரி 11:3 வெளிப் 12:9 |
| 34 | ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்; | மத் 10:16 மத் 28:19 மத் 28:20 லூக் 11:49 லூக் 24:47 யோவா 20:21 அப் 1:8 1கொரி 12:3-11 எபே 4:8-12 |
| 35 | நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள். | ஆதி 9:5 ஆதி 9:6 எண் 35:33 உபா 21:7 உபா 21:8 2இரா 21:16 2இரா 24:4 ஏசா 26:21 எரே 2:30 எரே 2:34 எரே 26:15 எரே 26:23 புலம் 4:13 புலம் 4:14 வெளிப் 18:24 |
| 36 | இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். | மத் 24:34 எசே 12:21-28 மாற் 13:30 மாற் 13:31 லூக் 21:32 லூக் 21:33 |
| 37 | எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. | எரே 4:14 எரே 6:8 லூக் 13:34 வெளிப் 11:8 |
| 38 | இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். | மத் 24:2 2நாளா 7:20 2நாளா 7:21 சங் 69:24 ஏசா 64:10-12 எரே 7:9-14 தானி 9:26 சகரி 11:1 சகரி 11:2 சகரி 11:6 சகரி 14:1 சகரி 14:2 மாற் 13:14 லூக் 13:35 லூக் 19:43 லூக் 19:44 லூக் 21:6 லூக் 21:20 லூக் 21:24 அப் 6:13 அப் 6:14 |
| 39 | கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். | ஓசி 3:4 லூக் 2:26-30 லூக் 10:22 லூக் 10:23 லூக் 17:22 யோவா 8:21 யோவா 8:24 யோவா 8:56 யோவா 14:9 யோவா 14:19 |