| 1 | ஆதிராக் தேசத்துக்கு விரோதமானதும், தமஸ்குவின்மேல் வந்து தங்குவதுமான கர்த்தருடைய வார்த்தையாகிய பாரம்; மனுஷரின் கண்களும் இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களின் கண்களும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கும். | ஏசா 13:1 எரே 23:33-38 மல்கி 1:1 |
| 2 | ஆமாத்தும், மிகவும் ஞானமுள்ள தீருவும் சீதோனும் அதின் எல்லைக்குள்ளாயிருக்கும். | எண் 13:21 2இரா 23:33 2இரா 25:21 எரே 49:23 ஆமோ 6:14 |
| 3 | தீரு தனக்கு அரணைக் கட்டி, தூளைப்போல் வெள்ளியையும், வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது. | யோசு 19:29 2சாமு 24:7 |
| 4 | இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்; அது அக்கினிக்கு இரையாகும். | நீதி 10:2 நீதி 11:4 ஏசா 23:1-7 எசே 28:16 யோவே 3:8 |
| 5 | அஸ்கலோன் அதைக் கண்டு பயப்படும், காத்சாவும் அதைக் கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் பிரலாபிக்கும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அஸ்கலோன் குடியற்றிருக்கும். | ஏசா 14:29-31 எரே 47:1 எரே 47:4-7 எசே 25:15-17 செப் 2:4-7 அப் 8:26 |
| 6 | அஸ்தோத்தில் வேசிப்பிள்ளைகள் வாசம்பண்ணுவார்கள்; நான் பெலிஸ்தரின் கர்வத்தை அழிப்பேன். | பிரச 2:18-21 பிரச 6:2 ஆமோ 1:8 ஏசா 2:12-17 ஏசா 23:9 ஏசா 28:1 தானி 4:37 செப் 2:10 1பேது 5:5 |
| 7 | அவனுடைய இரத்தத்தை அவன் வாயிலிருந்தும், அவனுடைய அருவருப்புகளை அவன் பல்லுகளின் நடுவிலிருந்தும் நீக்கிப்போடுவேன்; அவனோ நம்முடைய தேவனுக்கென்று மீதியாக வைக்கப்பட்டு, யூதாவிலே பிரபுவைப்போல இருப்பான்; எக்ரோன் எபூசியனைப்போல இருப்பான். | 1சாமு 17:34-36 சங் 3:7 சங் 58:6 ஆமோ 3:12 |
| 8 | சேனையானது புறப்படும்போதும், திரும்பி வரும்போதும், என் ஆலயம் காக்கப்படும்படி அதைச் சுற்றிலும் பாளயம்போடுவேன்; இனி ஒடுக்குகிறவன் அவர்களிடத்தில் கடந்துவருவதில்லை; அதை என் கண்களினாலே பார்த்துக்கொண்டிருக்கிறேன். | சகரி 2:1-13 சகரி 12:8 ஆதி 32:1 ஆதி 32:2 சங் 34:7 சங் 46:1-5 சங் 125:1 சங் 125:2 ஏசா 4:5 ஏசா 26:1 ஏசா 31:5 ஏசா 33:20-22 ஏசா 52:12 யோவே 3:16 யோவே 3:17 வெளிப் 20:9 |
| 9 | சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார். | சகரி 2:10 சங் 97:6-8 ஏசா 12:6 ஏசா 40:9 ஏசா 52:9 ஏசா 52:10 ஏசா 62:11 செப் 3:14 செப் 3:15 |
| 10 | எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப்பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும். | ஓசி 1:7 ஓசி 2:18 மீகா 5:10 மீகா 5:11 ஆகா 2:22 2கொரி 10:4 2கொரி 10:5 |
| 11 | உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன். | உபா 5:31 2சாமு 13:13 2நாளா 7:17 தானி 2:29 |
| 12 | நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன். | ஏசா 52:2 எரே 31:6 எரே 50:4 எரே 50:5 எரே 50:28 எரே 51:10 மீகா 4:8 நாகூ 1:7 எபிரெ 6:18 |
| 13 | நான் எனக்கென்று யூதாவை நாணேற்றி, எப்பிராயீமிலே வில்லை நிரப்பி, சீயோனே, உன் புத்திரரைக் கிரேக்குதேசப் புத்திரருக்கு விரோதமாக எழுப்பி, உன்னைப் பராக்கிரமசாலியின் பட்டயத்துக்கு ஒப்பாக்குவேன். | சகரி 1:21 சகரி 10:3-7 சகரி 12:2-8 மீகா 5:4-9 வெளிப் 17:14 |
| 14 | அவர்கள் பட்சத்தில் கர்த்தர் காணப்படுவார்; அவருடைய அம்பு மின்னலைப்போலப் புறப்படும்; கர்த்தராகிய ஆண்டவர் எக்காளம் ஊதி, தென்திசைச் சுழல்காற்றுகளோடே நடந்துவருவார். | சகரி 2:5 சகரி 12:8 சகரி 14:3 யாத் 14:24 யாத் 14:25 யோசு 10:11-14 யோசு 10:42-14 மத் 28:20 அப் 4:10 அப் 4:11 ரோம 15:19 எபிரெ 2:4 |
| 15 | சேனைகளின் கர்த்தர் அவர்களைக் காப்பாற்றுவார்; அவர்கள் பட்சித்து, கவண்கற்களால் கீழ்ப்படுத்திக்கொள்வார்கள்; அவர்கள் குடித்துக் களிப்பினால் ஆரவாரிப்பார்கள்; பானபாத்திரங்கள்போலவும், பலிபீடத்தின் கோடிகளைப்போலவும் நிறைந்திருப்பார்கள். | சகரி 10:5 சகரி 12:6 மீகா 5:8 வெளிப் 19:13-21 |
| 16 | அந்நாளில் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனமான மந்தையாகிய அவர்களை இரட்சிப்பார்; அவர்கள் அவருடைய தேசத்தில் ஏற்றப்பட்ட கொடிகளின் கிரீடத்தில் பதிந்திருப்பார்கள். | சங் 100:3 ஏசா 40:10 எரே 23:3 எசே 34:22-26 எசே 34:31-26 மீகா 5:4 மீகா 7:14 லூக் 12:32 யோவா 10:27 1பேது 5:2-4 |
| 17 | அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபரையும், புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும். | சங் 31:19 சங் 36:7 சங் 86:5 சங் 86:15 சங் 145:7 ஏசா 63:7 ஏசா 63:15 யோவா 3:16 ரோம 5:8 ரோம 5:20 எபே 1:7 எபே 1:8 எபே 2:4 எபே 2:5 எபே 3:18 எபே 3:19 தீத் 3:4-7 1யோவா 4:8-11 |