இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சகரியா 10

                   
புத்தகங்களைக் காட்டு
1பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார்.எசே 36:37 மத் 7:7 மத் 7:8 யோவா 16:23 யாக் 5:16-18
2சுரூபங்கள் அபத்தமானதைச் சொல்லிற்று; குறிசொல்லுகிறவர்கள் பொய்யைத்தரித்தார்கள்; சொப்பனக்காரர் வீணானதைச் சொல்லி, வியர்த்தமாகத் தேற்றரவுபண்ணினார்கள்; ஆகையால் ஜனங்கள் ஆடுகளைப்போலச் சிதறி, மேய்ப்பனில்லாததினால் சிறுமைப்பட்டார்கள்.ஆதி 31:19 நியா 18:14 ஏசா 44:9 ஏசா 46:5 எரே 10:8 எரே 14:22 ஓசி 3:4 ஆபகூ 2:18
3மேய்ப்பருக்கு விரோதமாக என் கோபம் மூண்டது; கடாக்களைத் தண்டித்தேன்; சேனைகளின் கர்த்தர் யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார்.சகரி 11:5-8 சகரி 11:17-8 ஏசா 56:9-12 எரே 10:21 எரே 23:1 எரே 23:2 எரே 50:6 எசே 34:2 எசே 34:7-10
4அவர்களிலிருந்து கோடிக்கல்லும், அவர்களிலிருந்து கூடாரமுளையும், அவர்களிலிருந்து யுத்தவில்லும் வரும்; அவர்களிலிருந்து ஆளுகிற யாவரும் ஏகமாய்ப் புறப்படுவார்கள்.சகரி 1:20 சகரி 1:21 சகரி 9:13-16 சகரி 12:6-8 எண் 24:17 ஏசா 41:14-16 ஏசா 49:2 ஏசா 54:16 எரே 1:18 மீகா 5:5-8 மத் 9:38 2கொரி 10:4 2கொரி 10:5 எபே 4:8-11 எபே 6:10-17 2தீமோ 2:4 வெளிப் 17:14 வெளிப் 19:13-15
5அவர்கள் யுத்தத்திலே தங்கள் சத்துருக்களை வீதிகளின் சேற்றில் மிதிக்கிற பராக்கிரமசாலிகளைப்போல இருந்து யுத்தம்பண்ணுவார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருப்பார்; குதிரைகளின்மேல் ஏறிவருகிறவர்கள் வெட்கப்படுவார்கள்.சகரி 9:13 சகரி 12:8 1சாமு 16:18 2சாமு 22:8 சங் 45:3 லூக் 24:19 அப் 7:22 அப் 18:24 2கொரி 10:4
6நான் யூதா வம்சத்தாரைப் பலப்படுத்தி, யோசேப்பு வம்சத்தாரை இரட்சித்து, அவர்களைத் திரும்ப நிலைக்கப்பண்ணுவேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்; அவர்கள் என்னால் ஒருக்காலும் தள்ளிவிடப்படாதவர்களைப்போல் இருப்பார்கள்; நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர், நான் அவர்களுக்குச் செவிகொடுப்பேன்.சகரி 10:12 சங் 89:21 ஏசா 41:10 எசே 37:16 ஒபதி 1:18 மீகா 4:6 மீகா 4:13 மீகா 5:8 மீகா 7:16 செப் 3:19 செப் 3:20
7எப்பிராயீமர் பராக்கிரமரைப்போல இருப்பார்கள்; மதுபானத்தால் களிப்பதுபோல, அவர்களுடைய இருதயம் களிக்கும்; அவர்களுடைய பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழுவார்கள்; அவர்கள் இருதயம் கர்த்தருக்குள் களிகூரும்.சகரி 9:15 சகரி 9:17 ஆதி 43:34 சங் 104:15 நீதி 31:6 நீதி 31:7 அப் 2:13-18 எபே 5:18 எபே 5:19
8நான் அவர்களைப் பார்த்துப் பயில்போட்டு அவர்களைக் கூட்டிக்கொள்ளுவேன்; அவர்களை மீட்டுக்கொண்டேன்; அவர்கள் பெருகியிருந்ததுபோலவே பெருகிப்போவார்கள்.ஏசா 5:26 ஏசா 7:18 ஏசா 11:11 ஏசா 11:12 ஏசா 27:12 ஏசா 27:13 ஏசா 55:1-3 மத் 11:28 வெளிப் 22:17
9நான் அவர்களை ஜனங்களுக்குள்ளே இறைத்தபின்பு, அவர்கள் தூரதேசங்களிலே என்னை நினைத்து தங்கள் பிள்ளைகளோடுங்கூடப் பிழைத்துத் திரும்புவார்கள்.எஸ்தர் 8:17 எரே 31:27 தானி 3:1-6 ஓசி 2:23 ஆமோ 9:9 மீகா 5:7 அப் 8:1 அப் 8:4 அப் 11:19-21 அப் 13:1-38 அப் 14:1-21 ரோம 11:11-15
10நான் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து திரும்பிவரப்பண்ணி, அவர்களை அசீரியாவிலிருந்து கூட்டிக்கொண்டு, அவர்களைக் கீலேயாத் தேசத்துக்கும் லீபனோனுக்கும் வரப்பண்ணுவேன்; அவர்களுக்கு இடம் போதாமற்போகும்.சகரி 8:7 ஏசா 11:11-16 ஏசா 19:23-25 ஏசா 27:12 ஏசா 27:13 ஓசி 11:11 மீகா 7:11 மீகா 7:12
11இடுக்கமென்கிற சமுத்திரத்தைக் கடக்கையில் அவர் சமுத்திரத்தின் அலைகளை அடிப்பார்; அப்பொழுது நதியின் ஆழங்கள் எல்லாம் வறண்டுபோகும்; அசீரியாவின் கர்வம் தாழ்த்தப்படும், எகிப்தின் கொடுங்கோல் விலகிப்போகும்.சங் 66:10-12 ஏசா 11:15 ஏசா 11:16 ஏசா 42:15 ஏசா 42:16 ஏசா 43:2
12நான் அவர்களைக் கர்த்தருக்குள் பலப்படுத்துவேன்; அவர்கள் அவருடைய நாமத்திலே நடந்துகொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.சகரி 10:6 சகரி 12:5 சங் 68:34 சங் 68:35 ஏசா 41:10 ஏசா 45:24 எபே 6:10 பிலிப் 4:13 2தீமோ 2:1
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.