| 1 | லீபனோனே, அக்கினி உன் கேதுருமரங்களைப் பட்சிக்கும்படி உன் வாசல்களைத் திற. | சகரி 10:10 எரே 22:6 எரே 22:7 எரே 22:23 ஆபகூ 2:8 ஆபகூ 2:17 ஆகா 1:8 |
| 2 | தேவதாரு விருட்சங்களே, புலம்புங்கள்; கேதுமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்டன. பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; அரணுள்ள சோலை கீழே தள்ளப்பட்டது. | ஏசா 2:12-17 ஏசா 10:33 ஏசா 10:34 எசே 31:2 எசே 31:3 எசே 31:17 ஆமோ 6:1 நாகூ 3:8-19 லூக் 23:31 |
| 3 | மேய்ப்பர்களின் மகிமை அழிந்துபோனபடியால், அவர்கள் அலறுகிற சத்தம் கேட்கப்படுகிறது; யோர்தானின் பெருமை அழிந்துபோனபடியால், பாலசிங்கங்கள் கர்ச்சிக்கிற சத்தம் கேட்கப்படுகிறது. | சகரி 11:8 சகரி 11:15-17 எரே 25:34-36 யோவே 1:13 ஆமோ 8:8 செப் 1:10 மத் 15:14 மத் 23:13-33 யாக் 5:1-6 |
| 4 | என் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், கொலையுண்கிற ஆடுகளை மேய்க்கக்கடவாய். | சகரி 14:5 ஏசா 49:4 ஏசா 49:5 யோவா 20:17 எபே 1:3 |
| 5 | அவைகளை உடையவர்கள், அவைகளைக் கொன்றுபோட்டுத் தங்களுக்குக் குற்றமில்லையென்று எண்ணுகிறார்கள். அவைகளை விற்கிறவர்கள், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நாங்கள் ஐசுவரியமுள்ளவர்களானோம் என்கிறார்கள்; அவைகளை மேய்க்கிறவர்கள், அவைகள்மேல் இரக்கம் வைக்கிறதில்லை. | எரே 23:1 எரே 23:2 எசே 22:25-27 எசே 34:2 எசே 34:3 எசே 34:10 மீகா 3:1-3 மீகா 3:9-12 மத் 23:14 யோவா 16:2 |
| 6 | நான் இனி தேசத்துக் குடிகளின்மேல் இரக்கம் வையாமல் மனுஷரில் யாவரையும் அவனவனுடைய அயலான் கையிலும், அவனவனுடைய ராஜாவின் கையிலும் அகப்படப்பண்ணுவேன்; அவர்கள் தேசத்தை அழித்தும், நான் இவர்களை அவர்கள் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார். | சகரி 11:5 ஏசா 27:11 எசே 8:18 எசே 9:10 ஓசி 1:6 மத் 18:33-35 மத் 22:7 மத் 23:35-38 லூக் 19:43 லூக் 19:44 லூக் 21:22-24 1தெச 2:16 எபிரெ 10:26-31 யாக் 2:13 |
| 7 | கொலையுண்கிற மந்தையாகிய சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன்; நான் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிற்கு அநுக்கிரகம் என்றும், ஒன்றிற்கு நிக்கிரகம் என்றும் பேரிட்டு மந்தையை மேய்த்து, | சகரி 11:4 சகரி 11:11 சகரி 13:8 சகரி 13:9 |
| 8 | ஒரே மாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்; என் ஆத்துமா அவர்களை அரோசித்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது. | ஓசி 5:7 மத் 23:34-36 மத் 24:50 மத் 24:51 |
| 9 | இனி நான் உங்களை மேய்ப்பதில்லை; சாகிறது சாகட்டும், அதமாகிறது அதமாகட்டும்; மீதியானவைகளோவென்றால், ஒன்றின் மாம்சத்தை ஒன்று தின்னக்கடவது என்று நான் சொல்லி, | எரே 23:33 எரே 23:39 மத் 13:10 மத் 13:11 மத் 21:43 மத் 23:38 மத் 23:39 யோவா 8:21 யோவா 8:24 யோவா 12:35 அப் 13:46 அப் 13:47 அப் 28:26-28 |
| 10 | அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த ஜனங்களெல்லாரோடும் பண்ணியிருந்த என் உடன்படிக்கை அற்றுப்போகும்படிக்கு அதை முறித்துப்போட்டேன். | சகரி 11:7 சங் 50:2 சங் 90:17 எசே 7:20-22 எசே 24:21 தானி 9:26 லூக் 21:5 லூக் 21:6 லூக் 21:32 அப் 6:13 அப் 6:14 ரோம 9:3-5 |
| 11 | அந்நாளிலே அது அற்றுப்போயிற்று; அப்படியே மந்தையில் எனக்குக் காத்திருந்த சிறுமைப்பட்டவைகள் அது கர்த்தருடைய வார்த்தையென்று அறிந்துகொண்டன. | சகரி 11:7 சங் 69:33 சங் 72:12-14 ஏசா 14:32 செப் 3:12 லூக் 7:22 லூக் 19:48 யாக் 2:5 யாக் 2:6 |
| 12 | உங்கள் பார்வைக்கு நன்றாய்க் கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள். | 1இரா 21:2 2நாளா 30:4 |
| 13 | கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன். | ஏசா 54:7-10 மத் 27:3-10 மத் 27:12-10 அப் 1:18 அப் 1:19 |
| 14 | நான் யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் இருக்கிற சகோதரக்கட்டை அற்றுப்போகப்பண்ணும்படிக்கு, நிக்கிரகம் என்னப்பட்ட என் இரண்டாம் கோலையும் முறித்தேன். | சகரி 11:9 ஏசா 9:21 ஏசா 11:13 எசே 37:16-20 மத் 24:10 அப் 23:7-10 கலா 5:15 யாக் 3:14 யாக் 3:16 யாக் 4:1-3 |
| 15 | கர்த்தர் என்னை நோக்கி: நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுடைய ஆயுதங்களை இன்னும் எடுத்துக்கொள். | ஏசா 6:10-12 எரே 2:26 எரே 2:27 புலம் 2:14 எசே 13:3 மத் 15:14 மத் 23:17 லூக் 11:40 |
| 16 | இதோ, நான் தேசத்திலே ஒரு மேய்ப்பனை எழும்பப்பண்ணுவேன்; அவன் அதமாகிறவைகளைப் பராமரிக்காமலும், சிதறுண்டதைத் தேடாமலும், நொறுங்குண்டதைக் குணமாக்காமலும், இளைத்திருக்கிறதை ஆதரிக்காமலும், கொழுத்ததின் மாம்சத்தைத் தின்று, அவைகளுடைய குளம்புகளை உடைத்துப்போடுவான். | எரே 23:2 எரே 23:22 எசே 34:2-6 எசே 34:16-6 மத் 23:2-4 மத் 23:13-29 லூக் 12:45 லூக் 12:46 யோவா 10:12 யோவா 10:13 |
| 17 | மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலது கண்ணின்மேலும் வரும்; அவன் புயமுழுதும் சூம்பிப்போகும்; அவன் வலது கண் முற்றிலும் இருள் அடையும் என்றார். | எரே 22:1 எசே 13:3 எசே 34:2 மத் 23:13 மத் 23:16 லூக் 11:42-52 |