| 1 | இஸ்ரவேலைக்குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம்; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறதாவது: | சகரி 9:1 புலம் 2:14 மல்கி 1:1 |
| 2 | இதோ, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன்; எருசலேமுக்கு விரோதமாய்ப்போடப்படும் முற்றிகையிலே யூதாவும் அப்படியேயாகும். | சங் 75:8 ஏசா 51:17 ஏசா 51:22 ஏசா 51:23 எரே 25:15 எரே 25:17 எரே 49:12 எரே 51:7 ஆபகூ 2:16 வெளிப் 14:10 வெளிப் 16:19 வெளிப் 18:6 |
| 3 | அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள். | சகரி 12:4 சகரி 12:6 சகரி 12:8 சகரி 12:9 சகரி 12:11 சகரி 2:8 சகரி 2:9 சகரி 10:3-5 சகரி 13:1 சகரி 14:2 சகரி 14:3 சகரி 14:4 சகரி 14:6 சகரி 14:8 சகரி 14:9 சகரி 14:13 ஏசா 60:12 ஏசா 66:14-16 எசே 38:1-39 யோவே 3:8-16 ஒபதி 1:18 மீகா 5:8 மீகா 5:15 மீகா 7:15-17 ஆபகூ 2:17 செப் 3:19 ஆகா 2:22 |
| 4 | அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரப்பண்ணி, யூதா வம்சத்தின்மேல் என் கண்களைத் திறந்துவைத்து, ஜனங்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டுபண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | சகரி 12:3 சகரி 12:6 சகரி 12:8 சகரி 12:9 சகரி 12:11 ஏசா 24:21 |
| 5 | எருசலேமின் குடிகள், சேனைகளின் கர்த்தராகிய தங்கள் தேவனுடைய துணையினால் எங்களுக்குப் பெலனானவர்கள் என்று அப்போது யூதாவின் தலைவர் தங்கள் இருதயத்திலே சொல்லுவார்கள். | சகரி 12:6 நியா 5:9 ஏசா 1:10 ஏசா 1:23 ஏசா 1:26 ஏசா 29:10 ஏசா 32:1 ஏசா 60:17 எரே 30:21 எரே 33:26 எசே 45:8 எசே 45:9 |
| 6 | அந்நாளிலே யூதாவின் தலைவரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கும் ஒப்பாக்குவேன்; அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பார்கள்; எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும். | ஏசா 10:16 ஏசா 10:17 ஒபதி 1:18 வெளிப் 20:9 |
| 7 | தாவீது வம்சத்தாரின் மகிமையும், எருசலேமின் குடிகளுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாதபடிக்கு, கர்த்தர் யூதாவின் கூடாரங்களை முதல்முதல் இரட்சிப்பார். | சகரி 4:6 சகரி 11:11 ஏசா 2:11-17 ஏசா 23:9 எரே 9:23 எரே 9:24 மத் 11:25 மத் 11:26 லூக் 1:51-53 லூக் 10:21 யோவா 7:47-49 ரோம 3:27 1கொரி 1:26-31 2கொரி 4:7-12 யாக் 2:5 யாக் 4:6 |
| 8 | அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாக தேவனைப்போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள். | சகரி 2:5 சகரி 9:8 சகரி 9:15 சகரி 9:16 யோவே 3:16 யோவே 3:17 |
| 9 | அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன். | சகரி 12:2 ஏசா 54:17 ஆகா 2:22 |
| 10 | நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். | நீதி 1:23 ஏசா 32:15 ஏசா 44:3 ஏசா 44:4 ஏசா 59:19-21 எசே 39:29 யோவே 2:28 யோவே 2:29 அப் 2:17 அப் 2:33 அப் 10:45 அப் 11:15 தீத் 3:5 தீத் 3:6 |
| 11 | அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாயிருக்கும். | 2இரா 23:29 2நாளா 35:24 |
| 12 | தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், நாத்தான் குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், | எரே 3:21 எரே 4:28 எரே 31:18 மத் 24:30 வெளிப் 1:7 |
| 13 | லேவி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், சீமேயி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், | யாத் 6:16-26 எண் 3:1-4 மல்கி 2:4-9 |
| 14 | மற்றுமுண்டான சகல குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பத்தின் மனுஷர் தனித்தனியேயும் அவர்களுடைய ஸ்திரீகள் தனித்தனியேயும் புலம்புவார்கள். | நீதி 9:12 |