| 1 | சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை உண்டாகி, அவர்: |
| 2 | நான் சீயோனுக்காக கடும் வைராக்கியங்கொண்டேன்; அதற்காக மகா உக்கிரமான வைராக்கியங்கொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | சகரி 1:14-16 சங் 78:58 சங் 78:59 ஏசா 42:13 ஏசா 42:14 ஏசா 59:17 ஏசா 63:4-6 ஏசா 63:15-6 எசே 36:5 எசே 36:6 யோவே 2:18 நாகூ 1:2 நாகூ 1:6 |
| 3 | நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். | சகரி 1:16 எரே 30:10 எரே 30:11 |
| 4 | திரும்பவும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற கிழவரும் கிழவிகளும் குடியிருப்பார்கள். | 1சாமு 2:31 யோபு 5:26 யோபு 42:17 ஏசா 65:20-22 புலம் 2:20 புலம் 2:21 புலம் 2:22 புலம் 5:11-15 எபிரெ 12:22 |
| 5 | நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | சகரி 2:4 சங் 128:3 சங் 128:4 சங் 144:12-15 எரே 30:19 எரே 30:20 எரே 31:27 எரே 33:11 புலம் 2:19 மத் 11:16 மத் 11:17 |
| 6 | சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | ஆதி 18:14 எண் 11:22 எண் 11:23 2இரா 7:2 எரே 32:17 எரே 32:27 லூக் 1:20 லூக் 1:37 லூக் 18:27 ரோம 4:20 ரோம 4:21 ரோம 6:19-21 |
| 7 | இதோ, கிழக்குதேசத்திலும் தெற்கு தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து, | சங் 107:2 சங் 107:3 ஏசா 11:11-16 ஏசா 27:12 ஏசா 27:13 ஏசா 43:5 ஏசா 43:6 ஏசா 49:12 ஏசா 59:19 ஏசா 66:19 ஏசா 66:20 எரே 31:8 எசே 37:19-25 ஓசி 11:10 ஓசி 11:11 ஆமோ 9:14 ஆமோ 9:15 மல்கி 1:11 ரோம 11:25-27 |
| 8 | அவர்களை அழைத்துக்கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | எரே 3:17 எரே 3:18 எரே 23:8 எரே 32:41 எசே 37:25 யோவே 3:20 ஆமோ 9:14 ஆமோ 9:15 ஒபதி 1:17-21 செப் 3:14-20 |
| 9 | சேனைகளுடைய கர்த்தரின் வீடாகிய ஆலயம் கட்டப்படும்படிக்கு அதின் அஸ்திபாரங்கள் போடப்பட்ட நாள்முதற்கொண்டிருக்கிற தீர்க்கதரிசிகளின் வாயினால் இந்த வார்த்தைகளை இந்நாட்களில் கேட்டுவருகிறவர்களே, உங்கள் கைகள் திடப்படக்கடவது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | சகரி 8:13 சகரி 8:18 யோசு 1:6 யோசு 1:8 1நாளா 22:13 1நாளா 28:20 ஏசா 35:4 ஆகா 2:4-9 எபே 6:10 2தீமோ 2:1 |
| 10 | இந்நாட்களுக்கு முன்னே மனுஷனுடைய வேலையால் பலனுமில்லை, மிருகஜீவனுடைய வேலையால் பலனுமில்லை; போகிறவனுக்கும் வருகிறவனுக்கும் நெருக்கிடையினிமித்தம் சமாதானமுமில்லை; எல்லா மனுஷரையும் ஒருவரையொருவர் விரோதிக்கச்சேய்தேன். | ஆகா 1:6-11 ஆகா 2:16-18 |
| 11 | இப்போதோ இந்த ஜனத்தில் மீதியானவர்களுக்கு நான் முந்தின நாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | சகரி 8:8 சகரி 8:9 சங் 103:9 ஏசா 11:13 ஏசா 12:1 ஆகா 2:19 மல்கி 3:9-11 |
| 12 | விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன். | ஆதி 26:12 லேவி 26:4 லேவி 26:5 உபா 28:4-12 சங் 67:6 சங் 67:7 நீதி 3:9 நீதி 3:10 ஏசா 30:23 எசே 34:26 எசே 34:27 எசே 36:30 ஓசி 2:21-23 யோவே 2:22 ஆமோ 9:13-15 ஆகா 2:19 |
| 13 | சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது. | உபா 28:37 உபா 29:23-28 1இரா 9:7 1இரா 9:8 2நாளா 7:20-22 சங் 44:13 சங் 44:14 சங் 44:16 சங் 79:4 ஏசா 65:15 ஏசா 65:16 எரே 24:9 எரே 25:18 எரே 26:6 எரே 29:18 எரே 42:18 எரே 44:12 எரே 44:22 புலம் 2:15 புலம் 2:16 புலம் 4:15 எசே 5:15 தானி 9:11 |
| 14 | சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் பிதாக்கள் எனக்குக் கோபமூட்டினபோது நான் உங்களைத் தண்டிக்க நினைத்து, மனம் மாறாமல் இருந்ததுபோல, | சகரி 1:6 சங் 33:11 ஏசா 14:24 எரே 31:28 |
| 15 | இந்நாட்களில் எருசலேமுக்கும் யூதாவுக்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள். | எரே 29:11-14 எரே 32:42 மீகா 4:10-13 மீகா 7:18-20 |
| 16 | நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள். | உபா 10:12 உபா 10:13 உபா 11:7 உபா 11:8 மீகா 6:8 லூக் 3:8-14 எபே 4:17 1பேது 1:13-16 |
| 17 | ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | சகரி 7:10 நீதி 3:29 நீதி 6:14 எரே 4:14 மீகா 2:1-3 மத் 5:28 மத் 12:35 மத் 15:19 |
| 18 | சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 19 | நாலாம் மாதத்தின் உபவாசமும், ஐந்தாம் மாதத்தின் உபவாசமும், ஏழாம் மாதத்தின் உபவாசமும், பத்தாம் மாதத்தின் உபவாசமும், யூதா வம்சத்தாருக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் நல்ல பண்டிகைகளாகவும் மாறிப்போகும்; ஆகையால் சத்தியத்தையும் சமாதானத்தையும் சிநேகியுங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | 2இரா 25:3 2இரா 25:4 எரே 39:2 எரே 52:6 எரே 52:7 |
| 20 | இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | சகரி 2:11 சகரி 14:16 சகரி 14:17 1இரா 8:41 1இரா 8:43 2நாளா 6:32 2நாளா 6:33 சங் 22:27 சங் 67:1-4 சங் 72:17 சங் 89:9 சங் 117:1 சங் 117:2 சங் 138:4 சங் 138:5 ஏசா 2:2 ஏசா 2:3 ஏசா 11:10 ஏசா 49:6 ஏசா 49:22 ஏசா 49:23 ஏசா 60:3-12 ஏசா 66:18-20 எரே 16:19 ஓசி 1:10 ஓசி 2:23 ஆமோ 9:12 மீகா 4:1 மீகா 4:2 மல்கி 1:11 மத் 8:11 அப் 15:14 அப் 15:18 ரோம 15:9-12 வெளிப் 11:15 |
| 21 | ஒரு பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில் போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும், தீவிரித்துப்போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள். | சங் 122:1-9 |
| 22 | அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் வருவார்கள். | ஏசா 25:7 ஏசா 55:5 ஏசா 60:3-22 ஏசா 66:23 எரே 4:2 மீகா 4:3 ஆகா 2:7 கலா 3:8 வெளிப் 15:4 வெளிப் 21:24 |
| 23 | அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார். | ஆதி 31:7 ஆதி 31:41 எண் 14:22 யோபு 19:3 பிரச 11:2 மீகா 5:5 மத் 18:21 மத் 18:22 |