| 1 | தரியு ராஜா அரசாண்ட நாலாம் வருஷம், கிஸ்லே என்னும் ஒன்பதாம் மாதம், நாலாந்தேதியிலே, சகரியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று. | சகரி 1:1 எஸ்றா 6:14 எஸ்றா 6:15 ஆகா 2:10 ஆகா 2:20 |
| 2 | கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும், | சகரி 6:10 எஸ்றா 6:10 எஸ்றா 7:15-23 எஸ்றா 8:28-30 ஏசா 60:7 |
| 3 | நாங்கள் இத்தனை வருஷம்வரையிலே செய்ததுபோல ஐந்தாம் மாதத்திலே அழுது ஒடுக்கத்திலிருக்கவேண்டுமோ என்று சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலிருக்கும் ஆசாரியரிடத்திலும் தீர்க்கதரிசிகளிடத்திலும் கேட்கவும், சரேத்சேரும் ரெகெம்மெலேகும் அவனுடைய மனுஷரும் தேவனுடைய ஆலயத்துக்கு அனுப்பப்பட்டார்கள். | உபா 17:9-11 உபா 33:10 எசே 44:23 எசே 44:24 ஓசி 4:6 ஆகா 2:11 மல்கி 2:7 |
| 4 | அப்பொழுது சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: | ஏசா 10:16 |
| 5 | நீ தேசத்தின் எல்லா ஜனத்தோடும் ஆசாரியர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால், நீங்கள் இந்த எழுபது வருஷமாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபவாசம்பண்ணி துக்கங்கொண்டாடினபோது நீங்கள் எனக்கென்றுதானா உபவாசம்பண்ணினீர்கள்? | ஏசா 58:5 |
| 6 | நீங்கள் புசிக்கிறபோதும் குடிக்கிறபோதும் உங்களுக்கென்றல்லவா புசிக்கிறீர்கள்? உங்களுக்கென்றல்லவா குடிக்கிறீர்கள்? | உபா 12:7 உபா 14:26 1சாமு 16:7 1நாளா 29:22 எரே 17:9 எரே 17:10 ஓசி 8:13 ஓசி 9:4 1கொரி 10:31 1கொரி 11:20 1கொரி 11:21 1கொரி 11:26-29 கொலோ 3:17 |
| 7 | எருசலேமும் அதைச் சுற்றிலும் இருந்த பட்டணங்களும் குடிநிறைந்து சுகமாயிருந்தகாலத்திலும், தெற்கு நாடும் சமபூமியும் குடியேறியிருந்த காலத்திலும் முன்னிருந்த தீர்க்கதரிசிகளைக்கொண்டு கர்த்தர் கூறின வார்த்தைகள் இவைகள் அல்லவோ என்ற சொல் என்றார். | ஏசா 55:3 ஏசா 55:6 ஏசா 55:7 |
| 8 | பின்பு கர்த்தருடைய வார்த்தை சகரியாவுக்கு உண்டாகி, அவர்: |
| 9 | சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து, | சகரி 7:7 சகரி 8:16 சகரி 8:17 லேவி 19:15 லேவி 19:35-37 உபா 10:18 உபா 10:19 உபா 15:7-14 உபா 16:18-20 சங் 82:2-4 நீதி 21:3 ஏசா 58:6-10 எரே 7:5 எரே 7:23 எசே 45:9 ஓசி 10:12 ஓசி 10:13 ஆமோ 5:24 மீகா 6:8 மத் 23:23 லூக் 11:42 யாக் 2:13-17 |
| 10 | விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும் இருங்கள் என்றார். | யாத் 22:21-24 யாத் 23:9 உபா 24:14-18 உபா 27:19 சங் 72:4 நீதி 22:22 நீதி 22:23 நீதி 23:10 நீதி 23:11 ஏசா 1:16 ஏசா 1:17 ஏசா 1:23 எரே 5:28 எரே 22:15-17 எசே 22:7 எசே 22:12 எசே 22:29 ஆமோ 4:1 ஆமோ 5:11 ஆமோ 5:12 மீகா 2:1-3 மீகா 3:1-4 செப் 3:1-3 மல்கி 3:5 மத் 23:14 1கொரி 6:10 யாக் 5:4 |
| 11 | அவர்களோ கவனிக்க மனதில்லாமல் தங்கள் தோளை முரட்டுத்தனமாய் விலக்கி, கேளாதபடிக்குத் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டார்கள். | சகரி 1:4 யாத் 10:3 2இரா 17:13-15 2நாளா 33:10 நெகே 9:17 நெகே 9:26 நெகே 9:29 நீதி 1:24-32 ஏசா 1:19 ஏசா 1:20 எரே 6:16 எரே 6:17 எரே 7:24 எரே 13:10 எரே 26:5 எரே 26:6 எரே 35:15 எரே 36:31 எரே 44:16 எசே 3:7 ஓசி 4:16 தானி 9:5 செப் 3:2 அப் 7:51 எபிரெ 12:25 |
| 12 | வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைரமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று. | நெகே 9:29 யோபு 9:4 ஏசா 48:4 எரே 5:3 எசே 2:4 எசே 3:7-9 எசே 11:19 எசே 36:26 |
| 13 | ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படி கேளாமற்போனார்களோ, அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேளாமலிருந்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | சங் 81:8-12 நீதி 1:24-28 ஏசா 50:2 எரே 6:16 எரே 6:17 லூக் 13:34 லூக் 13:35 லூக் 19:42-44 |
| 14 | அவர்கள் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைப் பறக்கடித்தேன்; அதினால் அவர்கள் பின்வைத்துப்போன தேசம் போக்குவரத்தில்லாமல் பாழாய்ப்போயிற்று; அவர்கள் இன்பமான தேசத்தைப் பாழாய்ப்போகப்பண்ணினார்கள் என்றார். | சகரி 2:6 சகரி 9:14 லேவி 26:33 உபா 4:27 உபா 28:33 உபா 28:64 சங் 58:9 ஏசா 17:13 ஏசா 21:1 ஏசா 66:15 எரே 4:11 எரே 4:12 எரே 23:19 எரே 25:32 எரே 25:33 எரே 30:23 எரே 36:19 ஆமோ 1:14 நாகூ 1:3 ஆபகூ 3:14 |