| 1 | நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து, இதோ, இரண்டு பர்வதங்களின் நடுவாகப் புறப்பட்டு வருகிற நாலு இரதங்களைக் கண்டேன்; அந்தப் பர்வதங்கள் வெண்கலப் பர்வதங்களாயிருந்தன. | சகரி 5:1 |
| 2 | முதலாம் இரதத்தில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் இரதத்தில் கறுப்புக் குதிரைகளும், | சகரி 1:8 வெளிப் 6:2-5 வெளிப் 12:3 வெளிப் 17:3 |
| 3 | மூன்றாம் இரதத்தில் வெள்ளைக்குதிரைகளும், நான்காம் இரதத்தில் புள்ளிபுள்ளியான சிவப்புக்குதிரைகளும் பூட்டியிருந்தன. | வெளிப் 6:2 வெளிப் 19:11 வெளிப் 20:11 |
| 4 | நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன். | சகரி 1:9 சகரி 1:19-21 சகரி 5:5 சகரி 5:6 சகரி 5:10 |
| 5 | அந்தத் தூதன் எனக்குப் பிரதியுத்தரமாக: இவைகள் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நாலு ஆவிகள் என்றார். | சகரி 1:10 சகரி 1:11 சங் 68:17 சங் 104:3 சங் 104:4 எசே 1:5-28 எசே 10:9-19 எசே 11:22 எபிரெ 1:7 எபிரெ 1:14 வெளிப் 14:6-13 |
| 6 | ஒன்றில் பூட்டப்பட்டிருந்த கறுப்புக்குதிரைகள் வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போயின; வெண்மையான குதிரைகள் அவைகளின் பின்னாலே புறப்பட்டுப்போயின; புள்ளிபுள்ளியான குதிரைகள் தென்தேசத்துக்குப் புறப்பட்டுப்போயின. | எரே 1:14 எரே 1:15 எரே 4:6 எரே 6:1 எரே 25:9 எரே 46:10 எரே 51:48 எசே 1:4 |
| 7 | சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரியும்படி கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன. | சகரி 1:10 ஆதி 13:17 2நாளா 16:9 யோபு 1:6 யோபு 1:7 யோபு 2:1 யோபு 2:2 தானி 7:19 தானி 7:24 |
| 8 | பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு: பார், வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்திபண்ணிற்று என்று என்னோடே சொன்னார். | சகரி 1:15 நியா 8:3 நியா 15:7 பிரச 10:4 ஏசா 1:24 ஏசா 18:3 ஏசா 18:4 ஏசா 42:13-15 ஏசா 48:14 ஏசா 51:22 ஏசா 51:23 எரே 51:48 எரே 51:49 எசே 5:13 எசே 16:42 எசே 16:63 வெளிப் 18:21 வெளிப் 18:22 |
| 9 | பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: | சகரி 1:1 சகரி 7:1 சகரி 8:1 |
| 10 | சிறையிருப்பின் மனுஷராகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் குமாரனாகிய யோசியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, | எஸ்றா 7:14-16 எஸ்றா 8:26-30 ஏசா 66:20 அப் 24:17 ரோம 15:25 ரோம 15:26 |
| 11 | அங்கே அவர்கள் கையிலே வெள்ளியையும் பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச் செய்வித்து, யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய சிரசிலே வைத்து, | சகரி 3:5 யாத் 28:36-38 யாத் 29:6 யாத் 39:30 லேவி 8:9 சங் 21:3 உன்ன 3:11 எபிரெ 2:9 வெளிப் 19:12 |
| 12 | அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். | சகரி 13:7 ஏசா 32:1 ஏசா 32:2 மீகா 5:5 மாற் 15:39 யோவா 19:5 அப் 13:38 அப் 17:31 எபிரெ 7:4 எபிரெ 7:24 எபிரெ 8:3 எபிரெ 10:12 |
| 13 | அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும். | சங் 21:5 சங் 45:3 சங் 45:4 சங் 72:17-19 ஏசா 9:6 ஏசா 11:10 ஏசா 22:24 ஏசா 49:5 ஏசா 49:6 எரே 23:6 தானி 7:13 தானி 7:14 யோவா 13:31 யோவா 13:32 யோவா 17:1-5 எபே 1:20-23 பிலிப் 2:7-11 எபிரெ 2:7-9 1பேது 3:22 வெளிப் 3:21 வெளிப் 5:9-13 வெளிப் 19:11-16 |
| 14 | இந்தக் கிரீடங்களோவென்றால், கர்த்தருடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் குமாரனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக. | யாத் 12:14 யாத் 28:12 யாத் 28:29 எண் 16:40 எண் 31:54 யோசு 4:7 1சாமு 2:30 மத் 26:13 மாற் 14:9 அப் 10:4 1கொரி 11:23-26 |
| 15 | தூரத்திலுள்ளவர்கள் வந்து கர்த்தருடைய ஆலயத்தைக் கூட இருந்து கட்டுவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிந்துகொள்வீர்கள்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்டு நடந்தீர்களானால் இது நிறைவேறும் என்று சொல் என்றார். | ஏசா 56:6-8 ஏசா 57:19 ஏசா 60:10 அப் 2:39 1கொரி 3:10-15 எபே 2:13-22 1பேது 2:4 1பேது 2:5 |