| 1 | அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான். | சகரி 1:9 சகரி 1:13 சகரி 1:19 சகரி 2:3 |
| 2 | அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார். | சங் 109:31 லூக் 22:32 ரோம 16:20 1யோவா 3:8 |
| 3 | யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான். | 2நாளா 30:18-20 எஸ்றா 9:15 ஏசா 64:6 தானி 9:18 மத் 22:11-13 வெளிப் 7:13 வெளிப் 7:14 வெளிப் 19:8 |
| 4 | அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார். | சகரி 3:1 சகரி 3:7 1இரா 22:19 ஏசா 6:2 ஏசா 6:3 லூக் 1:19 வெளிப் 5:11 |
| 5 | அவன் சிரசின்மேல் சுத்தமான பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின்மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள்; கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார். | சகரி 6:11 யாத் 28:2-4 யாத் 29:6 லேவி 8:6-9 எபிரெ 2:8 எபிரெ 2:9 வெளிப் 4:4 வெளிப் 4:10 வெளிப் 5:8-14 |
| 6 | கர்த்தருடைய தூதன் யோசுவாவுக்குச் சாட்சியாக: | சகரி 3:1 ஆதி 22:15 ஆதி 22:16 ஆதி 28:13-17 ஆதி 48:15 ஆதி 48:16 யாத் 23:20 யாத் 23:21 ஏசா 63:9 ஓசி 12:4 அப் 7:35-38 |
| 7 | சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் பிராகாரங்களையும் காவல்காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன். | ஆதி 26:5 லேவி 8:35 லேவி 10:3 1இரா 2:3 1நாளா 23:32 எசே 44:8 எசே 44:15 எசே 44:16 எசே 48:11 1தீமோ 6:13 1தீமோ 6:14 2தீமோ 4:1 2தீமோ 4:2 |
| 8 | இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன். | சங் 71:7 ஏசா 8:18 ஏசா 20:3 1கொரி 4:9-13 |
| 9 | இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி, இந்த தேசத்தில் அக்கிரமத்தை ஒரே நாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | சங் 118:22 ஏசா 8:14 ஏசா 8:15 ஏசா 28:16 மத் 21:42-44 அப் 4:11 ரோம 9:33 1பேது 2:4-8 |
| 10 | அந்நாளிலே நீங்கள் ஒருவரையொருவர் திராட்சச்செடியின்கீழும் அத்திமரத்தின்கீழும் வரவழைப்பீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார். | சகரி 2:11 |