| 1 | பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: |
| 2 | குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப்பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல் புத்திரர் உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு. | யாத் 27:20 யாத் 27:21 யாத் 39:37 யாத் 40:24 எண் 8:2-4 1சாமு 3:3 1சாமு 3:4 |
| 3 | ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சிசந்நிதியின் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அதை எப்பொழுதும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதியில் எரியும்படி ஏற்றக்கடவன்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்தியகட்டளை. |
| 4 | அவன் எப்பொழுதும் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற விளக்குகளை எரியவைக்கக்கடவன். | யாத் 25:31-39 யாத் 31:8 யாத் 37:17-24 யாத் 39:37 எண் 3:31 எண் 4:9 1இரா 7:49 1நாளா 28:15 எரே 52:19 சகரி 4:2 சகரி 4:3 சகரி 4:11-14 எபிரெ 9:2 வெளிப் 1:20 வெளிப் 2:1 வெளிப் 2:5 வெளிப் 11:4 |
| 5 | அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பம் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும். | யாத் 25:30 யாத் 40:23 1இரா 18:31 1சாமு 21:4 1சாமு 21:5 மத் 12:4 அப் 26:7 யாக் 1:1 |
| 6 | அவைகளை நீ கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கில் அவ்வாறு அப்பம் இருக்கும்படியாக வைத்து, | 1கொரி 14:40 |
| 7 | ஒவ்வொரு அடுக்கினிடத்தில் சுத்தமான தூபவர்க்கம் போடக்கடவாய்; அது அப்பத்தோடிருந்து, ஞாபகக்குறியாகக் கர்த்தருக்கேற்ற தகனபலியாயிருக்கும். | லேவி 2:2 எபே 1:6 எபிரெ 7:25 வெளிப் 8:3 வெளிப் 8:4 |
| 8 | அப்பத்தை நித்திய உடன்படிக்கையாக இஸ்ரவேல் புத்திரர் கையிலே வாங்கி, ஓய்வுநாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் அடுக்கிவைக்கக்கடவன். | எண் 4:7 1நாளா 9:32 1நாளா 23:29 2நாளா 2:4 நெகே 10:33 மத் 12:3-5 |
| 9 | அது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; அதைப் பரிசுத்த இடத்திலே புசிக்கக்கடவர்கள்; நித்தியகட்டளையாக கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது அவனுக்கு மகா பரிசுத்தமாயிருக்கும் என்றார். | லேவி 8:31 1சாமு 21:6 மல்கி 1:12 மத் 12:4 மாற் 2:26 லூக் 6:4 |
| 10 | அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும் எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன் இஸ்ரவேல் புத்திரரோடேகூடப் புறப்பட்டு வந்திருந்தான்; இவனும் இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டைபண்ணினார்கள். | யாத் 12:38 எண் 11:4 |
| 11 | அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரீயின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித்; அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி. | லேவி 24:15 லேவி 24:16 யாத் 20:7 2சாமு 12:14 1இரா 21:10 1இரா 21:13 2இரா 18:30 2இரா 18:35 2இரா 18:37 2இரா 19:1-3 2இரா 19:6-3 2இரா 19:10-3 2இரா 19:22-3 2நாளா 32:14-17 சங் 74:18 சங் 74:22 மத் 26:65 அப் 6:11-13 ரோம 2:24 1தீமோ 1:13 வெளிப் 16:11 வெளிப் 16:21 |
| 12 | கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல்படுத்தினார்கள். | யாத் 18:15 யாத் 18:16 யாத் 18:23 எண் 27:5 எண் 36:5 எண் 36:6 |
| 13 | அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: |
| 14 | தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோ; கேட்டவர்கள் எல்லாரும் தங்கள் கைகளை அவன் தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியக்கடவர்கள். | லேவி 13:46 எண் 5:2-4 எண் 15:35 |
| 15 | மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத் தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான். | லேவி 5:1 லேவி 20:16 லேவி 20:17 எண் 9:13 |
| 16 | கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும்; பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும். | யாத் 20:7 1இரா 21:10-13 சங் 74:10 சங் 74:18 சங் 139:20 மத் 12:31 மாற் 3:28 மாற் 3:29 யோவா 8:58 யோவா 8:59 யோவா 10:33-36 அப் 26:11 1தீமோ 1:13 யாக் 2:7 |
| 17 | ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும். | ஆதி 9:5 ஆதி 9:6 யாத் 21:12-14 எண் 35:31 உபா 19:11 உபா 19:12 |
| 18 | மிருகத்தைக் கொன்றவன் மிருகத்துக்கு மிருகம் கொடுக்கக்கடவன். | லேவி 24:21 யாத் 21:34-36 |
| 19 | ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது. | உபா 19:21 மத் 5:38 மத் 7:2 |
| 20 | நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினது போல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும். | யாத் 21:23-25 உபா 19:21 மத் 5:38 |
| 21 | மிருகத்தைக் கொன்றவன் பதில் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன். | லேவி 24:18 யாத் 21:33 |
| 22 | உங்களில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார். | லேவி 17:10 லேவி 19:34 யாத் 12:49 எண் 9:14 எண் 15:15 எண் 15:16 எண் 15:29 |
| 23 | அப்படியே, தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவனைக் கல்லெறியும்படி மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். | லேவி 24:14-16 எண் 15:35 எண் 15:36 எபிரெ 2:2 எபிரெ 2:3 எபிரெ 10:28 எபிரெ 10:29 |