| 1 | கர்த்தர் சீனாய்மலையில் மோசேயை நோக்கி: | யாத் 19:1 எண் 1:1 எண் 10:11 எண் 10:12 கலா 4:24 கலா 4:25 |
| 2 | நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்திருக்கும்போது, தேசம் கர்த்தருக்கென்று ஓய்வு கொண்டாடவேண்டும். | லேவி 14:34 உபா 32:8 உபா 32:49 உபா 34:4 சங் 24:1 சங் 24:2 சங் 115:16 ஏசா 8:8 எரே 27:5 |
| 3 | ஆறுவருஷம் உன் வயலை விதைத்து, உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழித்து, அதின் பலனைச் சேர்ப்பாயாக. |
| 4 | ஏழாம் வருஷத்திலோ, கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு தேசத்திற்கு இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும், உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழிக்காமலும், | லேவி 25:20-23 லேவி 26:34 லேவி 26:35 லேவி 26:43 யாத் 23:10 யாத் 23:11 2நாளா 36:21 |
| 5 | தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காதே விட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்துக்கு அது ஓய்வு வருஷமாயிருக்கக்கடவது. | 2இரா 19:29 ஏசா 37:30 |
| 6 | தேசத்தின் ஓய்விலே பயிராகிறது உங்களுக்கு ஆகாரமாயிருப்பதாக; உன் வேலைக்காரனுக்கும், உன் வேலைக்காரிக்கும், உன் கூலிக்காரனுக்கும், உன்னிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும், | யாத் 23:11 அப் 2:44 அப் 4:32 அப் 4:34 அப் 4:35 |
| 7 | உன் நாட்டு மிருகத்துக்கும், உன் தேசத்தில் இருக்கிற காட்டு மிருகத்துக்கும் அதில் விளைந்திருப்பதெல்லாம் ஆகாரமாயிருப்பதாக. |
| 8 | அன்றியும், ஏழு ஓய்வு வருஷங்களுள்ள ஏழு ஏழு வருஷங்களை எண்ணுவாயாக; அந்த ஏழு ஓய்வு வருஷங்களும் நாற்பத்தொன்பது வருஷமாகும். | லேவி 23:15 ஆதி 2:2 |
| 9 | அப்பொழுதும் ஏழாம் மாதம் பத்தாந்தேதியில் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்; பாவநிவாரணநாளில் உங்கள் தேசமெங்கும் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும். | எண் 10:10 சங் 89:15 அப் 13:38 அப் 13:39 ரோம 10:18 ரோம 15:19 2கொரி 5:19-21 1தெச 1:8 |
| 10 | ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன். | யாத் 20:2 எஸ்றா 1:3 சங் 146:7 ஏசா 49:9 ஏசா 49:24 ஏசா 49:25 ஏசா 61:1-3 ஏசா 63:4 எரே 34:8 எரே 34:13-17 சகரி 9:11 சகரி 9:12 லூக் 1:74 லூக் 4:16-21 யோவா 8:32-36 ரோம 6:17 ரோம 6:18 2கொரி 3:17 கலா 4:25-31 கலா 5:1 கலா 5:13 1பேது 2:16 2பேது 2:19 2பேது 2:20 |
| 11 | அந்த ஐம்பதாம் வருஷம் உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காமல் விடப்பட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக. | லேவி 27:17 |
| 12 | அது யூபிலி வருஷம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்கவேண்டும்; அந்த வருஷத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் புசிக்கவேண்டும். | லேவி 25:6 லேவி 25:7 |
| 13 | அந்த யூபிலி வருஷத்தில் உங்களில் அவனவன் தன்தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன். | லேவி 25:10 லேவி 27:17-24 எண் 36:4 |
| 14 | ஆகையால், பிறனுக்கு எதையாவது விற்றாலும், அவனிடத்தில் எதையாவது கொண்டாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது. | லேவி 25:17 லேவி 19:13 உபா 16:19 உபா 16:20 நியா 4:3 1சாமு 12:3 1சாமு 12:4 2நாளா 16:10 நெகே 9:36 நெகே 9:37 யோபு 20:19 யோபு 20:20 சங் 10:18 நீதி 14:31 நீதி 21:13 நீதி 22:16 நீதி 28:3 நீதி 28:8 நீதி 28:16 பிரச 5:8 ஏசா 1:17 ஏசா 3:12-15 ஏசா 5:7 ஏசா 33:15 ஏசா 58:6 எரே 22:17 எசே 22:7 எசே 22:12 எசே 22:13 ஆமோ 5:11 ஆமோ 5:12 ஆமோ 8:4-7 மீகா 2:2 மீகா 2:3 மீகா 6:10-12 மீகா 7:3 லூக் 3:14 1கொரி 6:8 யாக் 5:1-5 |
| 15 | யூபிலி வருஷத்துக்குப் பின்வரும் வருஷங்களின் தொகைக்கேற்கப் பிறனிடத்தில் கொள்ளுவாயாக; பலனுள்ள வருஷங்களின் தொகைக்கேற்க அவன் உனக்கு விற்பானாக. | லேவி 27:18-23 பிலிப் 4:5 |
| 16 | பலனுள்ள வருஷங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிறபடியால், வருஷங்களின் தொகை ஏறினால் விலையேறவும், வருஷங்களின் தொகை குறைந்தால், விலை குறையவும் வேண்டும். |
| 17 | உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயம் செய்யக்கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். | லேவி 25:43 லேவி 19:14 லேவி 19:32 ஆதி 20:11 ஆதி 22:12 ஆதி 39:9 ஆதி 42:18 யாத் 20:20 உபா 25:18 1சாமு 12:24 2நாளா 19:7 நெகே 5:9 நெகே 5:15 சங் 19:9 நீதி 1:7 எரே 22:16 மல்கி 3:5 லூக் 12:5 அப் 9:31 அப் 10:2 அப் 10:35 ரோம 3:18 ரோம 11:20 |
| 18 | என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள். | லேவி 19:37 சங் 103:18 |
| 19 | பூமி தன் கனியைத் தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாய்க் குடியிருப்பீர்கள். | லேவி 26:5 சங் 67:6 சங் 85:12 ஏசா 30:23 ஏசா 65:21 ஏசா 65:22 எசே 34:25-28 எசே 36:30 யோவே 2:24 யோவே 2:26 |
| 20 | ஏழாம் வருஷத்தில் எதைப் புசிப்போம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால், | எண் 11:4 எண் 11:13 2இரா 6:15-17 2இரா 7:2 2நாளா 25:9 சங் 78:19 சங் 78:20 ஏசா 1:2 மத் 6:25-34 மத் 8:26 லூக் 12:29 பிலிப் 4:6 எபிரெ 13:5 எபிரெ 13:6 |
| 21 | நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண்ணுவேன்; அது உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத் தரும். | ஆதி 26:12 ஆதி 41:47 யாத் 16:29 உபா 28:3 உபா 28:8 சங் 133:3 நீதி 10:22 2கொரி 9:10 |
| 22 | நீங்கள் எட்டாம் வருஷத்திலே விதைத்து, ஒன்பதாம் வருஷம்மட்டும் பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரைக்கும் பழைய பலனைச் சாப்பிடுவீர்கள். | 2இரா 19:29 ஏசா 37:30 |
| 23 | தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்கவேண்டாம்; நீங்கள் பரதேசிகளும் என்னிடத்தில் புறக்குடிகளுமாயிருக்கிறீர்கள். | லேவி 25:10 1இரா 21:3 எசே 48:14 |
| 24 | உங்கள் காணியாட்சியான தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ள இடங்கொடுக்கக்கடவீர்கள். | லேவி 25:27 லேவி 25:31 லேவி 25:51-53 ரோம 8:23 1கொரி 1:30 எபே 1:7 எபே 1:14 எபே 4:30 |
| 25 | உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன். | ரூத் 2:20 ரூத் 3:2 ரூத் 3:9 ரூத் 3:12 ரூத் 4:4-6 எரே 32:7 எரே 32:8 2கொரி 8:9 எபிரெ 2:13 எபிரெ 2:14 வெளிப் 5:9 |
| 26 | அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால், | லேவி 5:7 |
| 27 | அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி, மீந்த தொகையை ஏற்றி, கொண்டவனுக்குக் கொடுத்து, அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன். |
| 28 | அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருஷம்மட்டும் இருந்து, யூபிலி வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பப்போவான். | ஏசா 35:9 ஏசா 35:10 எரே 32:15 1கொரி 15:52-54 1தெச 4:13-18 1பேது 1:4 1பேது 1:5 |
| 29 | ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருஷத்துக்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருஷத்துக்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும். |
| 30 | ஒரு வருஷத்துக்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்; யூபிலி வருஷத்திலும் அது விடுதலையாகாது. |
| 31 | மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள்போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யூபிலி வருஷத்தில் அவைகள் விடுதலையாகும். | சங் 49:7 சங் 49:8 |
| 32 | லேவியரின் காணியாட்சியாகிய பட்டணங்களிலுள்ள வீடுகளையோ லேவியர் எக்காலத்திலும் மீட்டுக்கொள்ளலாம். | எண் 35:2-8 யோசு 21:1-45 |
| 33 | இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே லேவியருடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் அவர்களுக்குரிய காணியாட்சியானபடியால், லேவியரிடத்தில் அவனுடைய காணியாட்சிப் பட்டணத்திலுள்ள வீட்டை ஒருவன் வாங்கினால், விற்கப்பட்ட அந்த வீடு யூபிலி வருஷத்தில் விடுதலையாகும். | எண் 18:20-24 உபா 18:1 உபா 18:2 |
| 34 | அவர்கள் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலம் விற்கப்படலாகாது; அது அவர்களுக்கு நித்திய காணியாட்சியாயிருக்கும். | லேவி 25:23 அப் 4:36 அப் 4:37 |
| 35 | உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால் அவனை ஆதரிக்கவேண்டும்; பரதேசியைப்போலும் தங்கவந்தவனைப்போலும் அவன் உன்னோடே பிழைப்பானாக. | லேவி 25:25 உபா 15:7 உபா 15:8 நீதி 14:20 நீதி 14:21 நீதி 17:5 நீதி 19:17 மாற் 14:7 யோவா 12:8 2கொரி 8:9 யாக் 2:5 யாக் 2:6 |
| 36 | நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக. | யாத் 22:25 உபா 23:19 உபா 23:20 நெகே 5:7-10 சங் 15:5 நீதி 28:8 எசே 18:8 எசே 18:13 எசே 18:17 எசே 22:12 |
| 37 | அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக. |
| 38 | உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே. | யாத் 20:2 |
| 39 | உன் சகோதரன் தரித்திரனாகி, உனக்கு விலைப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல ஊழியஞ்செய்ய நெருக்கவேண்டாம். | யாத் 21:2 யாத் 22:3 உபா 15:12 1இரா 9:22 2இரா 4:1 நெகே 5:5 எரே 34:14 |
| 40 | அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னோடே இருந்து, யூபிலி வருஷம்மட்டும் உன்னிடத்தில் சேவிக்கக்கடவன். | யாத் 21:2 யாத் 21:3 |
| 41 | பின்பு, தன் பிள்ளைகளோடுங்கூட உன்னை விட்டு நீங்கலாகி, தன் குடும்பத்தாரிடத்துக்கும் தன் பிதாக்களின் காணியாட்சிக்கும் திரும்பிப்போகக்கடவன். | யாத் 21:3 யோவா 8:32 ரோம 6:14 தீத் 2:14 |
| 42 | அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என்னுடைய ஊழியக்காரர்; ஆகையால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படலாகாது. | லேவி 25:55 ரோம 6:22 1கொரி 7:21-23 |
| 43 | நீ அவனைக் கொடூரமாய் ஆளாமல், உன் தேவனுக்குப் பயந்திரு. | லேவி 25:46 லேவி 25:53 யாத் 1:13 யாத் 1:14 யாத் 2:23 யாத் 3:7 யாத் 3:9 யாத் 5:14 ஏசா 47:6 ஏசா 58:3 எபே 6:9 கொலோ 4:1 |
| 44 | உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளாயிருக்கவேண்டும்; அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் விலைக்கு வாங்கலாம். | யாத் 12:44 சங் 2:8 சங் 2:9 ஏசா 14:1 ஏசா 14:2 வெளிப் 2:26 வெளிப் 2:27 |
| 45 | உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய புத்திரரிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக்கொண்டு, அவர்களை உங்களுக்குச் சுதந்தரமாக்கலாம். | ஏசா 56:3-6 |
| 46 | அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி நீங்கள் அவர்களைச் சுதந்தரமாக்கிக்கொள்ளலாம்; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாயிருக்கலாம்; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரோ ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக்கூடாது. | ஏசா 14:2 |
| 47 | உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வனாயிருக்க, அவனிடத்தில் இருக்கிற உன் சகோதரன் தரித்திரப்பட்டு, அந்தப் பரதேசிக்காவது, அந்நியனுக்காவது, பரதேசியின் குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விலைப்பட்டுப்போனால், | லேவி 25:26 1சாமு 2:7 1சாமு 2:8 யாக் 2:5 |
| 48 | அவன் விலைப்பட்டுப்போனபின் திரும்ப மீட்கப்படலாம்; அவன் சகோதரரில் ஒருவன் அவனை மீட்கலாம். | லேவி 25:25 லேவி 25:35 நெகே 5:5 நெகே 5:8 கலா 4:4 கலா 4:5 எபிரெ 2:11-13 |
| 49 | அவனுடைய பிதாவின் சகோதரனாவது, அந்தச் சகோதரனுடைய புத்திரனாவது, அவன் குடும்பத்திலுள்ள அவனைச் சேர்ந்த இனத்தாரில் எவனாவது அவனை மீட்கலாம்; தன்னால் கூடுமானால், தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம். |
| 50 | அவன் தான் விலைப்பட்ட வருஷந்தொடங்கி, யூபிலி வருஷம்வரைக்கும் உண்டான காலத்தைத் தன்னை விலைக்குக் கொண்டவனுடன் கணக்குப் பார்க்கக்கடவன்; அவனுடைய விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல, வருஷத்தொகைக்கு ஒத்துப்பார்க்கவேண்டும். | லேவி 25:40 லேவி 25:53 உபா 15:18 யோபு 7:1 யோபு 7:2 யோபு 14:6 ஏசா 16:14 ஏசா 21:16 |
| 51 | இன்னும் அநேக வருஷங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக்கொடுக்கக்கடவன். |
| 52 | யூபிலி வருஷம்மட்டும் மீதியாயிருக்கிற வருஷங்கள் கொஞ்சமேயானால், அவனோடே கணக்குப் பார்த்து, தன் வருஷங்களுக்குத்தக்கதை, தன்னை மீட்கும் பொருளாகத் திரும்பக் கொடுக்கவேண்டும். |
| 53 | இவன் வருஷத்திற்கு வருஷம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப் போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாகக் கொடூரமாய் ஆளக்கூடாது. |
| 54 | இப்படி இவன் மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால், இவனும் இவனோடுகூட இவன் பிள்ளைகளும் யூபிலி வருஷத்தில் விடுதலையாவார்கள். | லேவி 25:40 லேவி 25:41 யாத் 21:2 யாத் 21:3 ஏசா 49:9 ஏசா 49:25 ஏசா 52:3 |
| 55 | இஸ்ரவேல் புத்திரர் என் ஊழியக்காரர்; அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என் ஊழியக்காரரே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். | லேவி 25:42 யாத் 13:3 யாத் 20:2 சங் 116:16 ஏசா 43:3 லூக் 1:74 லூக் 1:75 ரோம 6:14 ரோம 6:17 ரோம 6:18 ரோம 6:22 1கொரி 7:22 1கொரி 7:23 1கொரி 9:19 1கொரி 9:21 கலா 5:13 |