| 1 | ஆரோனின் இரண்டு குமாரர் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரித்துப்போனபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி: | லேவி 10:1 லேவி 10:2 |
| 2 | கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல். | லேவி 23:27 யாத் 26:33 யாத் 26:34 யாத் 30:10 யாத் 40:20 யாத் 40:21 1இரா 8:6 எபிரெ 9:3 எபிரெ 9:7 எபிரெ 9:8 எபிரெ 10:19 எபிரெ 10:20 |
| 3 | ஆரோன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்திப் பிரவேசிக்கவேண்டும். | எபிரெ 9:7 எபிரெ 9:12 எபிரெ 9:24 எபிரெ 9:25 |
| 4 | அவன் பரிசுத்தமான சணல்நூல்சட்டையைத் தரித்து, தன் அரைக்குச் சணல்நூல் ஜல்லடத்தைப் போட்டு, சணல்நூல் இடைக்கச்சையைக் கட்டி, சணல்நூல் பாகையைத் தரித்துக்கொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த வஸ்திரங்கள்; அவன் ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அவைகளைத் தரித்துக்கொண்டு, | லேவி 6:10 யாத் 28:2 யாத் 28:39-43 யாத் 39:27-29 ஏசா 53:2 எசே 44:17 எசே 44:18 லூக் 1:35 பிலிப் 2:7 எபிரெ 2:14 எபிரெ 7:26 |
| 5 | இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும், சர்வாங்கதகனபலியாக ஒரு ஆட்டுகடாவையும் வாங்கக்கடவன். | லேவி 4:14 லேவி 8:2 லேவி 8:14 லேவி 9:8-16 எண் 29:11 2நாளா 29:21 எஸ்றா 6:17 எசே 45:22 எசே 45:23 ரோம 8:3 எபிரெ 7:27 எபிரெ 7:28 எபிரெ 10:5-14 |
| 6 | பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரப்பண்ணி, | லேவி 8:14-17 எபிரெ 9:7 |
| 7 | அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக்கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, | லேவி 1:3 லேவி 4:4 லேவி 12:6 லேவி 12:7 மத் 16:21 ரோம 12:1 |
| 8 | அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு, | எண் 26:55 எண் 33:54 யோசு 18:10 யோசு 18:11 1சாமு 14:41 1சாமு 14:42 நீதி 16:33 எசே 48:29 யோனா 1:7 அப் 1:23-26 |
| 9 | கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி, | அப் 2:23 அப் 4:27 அப் 4:28 |
| 10 | போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக் கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்தரத்திலே போகவிடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி; | லேவி 16:21 லேவி 16:22 |
| 11 | பின்பு ஆரோன் தனக்காவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்துக்கான காளையைக் கொண்டுவந்து, அதைக்கொன்று, | லேவி 16:3 லேவி 16:6 |
| 12 | கர்த்தருடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட சுகந்த தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, | லேவி 10:1 எண் 16:18 எண் 16:46 ஏசா 6:6 ஏசா 6:7 எபிரெ 9:14 1யோவா 1:7 |
| 13 | தான் சாகாதபடிக்கு தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன். | யாத் 30:1 யாத் 30:7 யாத் 30:8 எண் 16:7 எண் 16:18 எண் 16:46 வெளிப் 8:3 வெளிப் 8:4 |
| 14 | பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்துக்கு முன்பாக ஏழுதரம் தன் விரலினால் தெளிக்கக்கடவன். | லேவி 4:5 லேவி 4:6 லேவி 4:17 லேவி 8:11 ரோம 3:24-26 எபிரெ 9:7 எபிரெ 9:13 எபிரெ 9:25 எபிரெ 10:4 எபிரெ 10:10-12 எபிரெ 10:19-12 எபிரெ 12:24 |
| 15 | பின்பு ஜனத்தினுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்தது போல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து, | லேவி 16:5-9 எபிரெ 2:17 எபிரெ 5:3 எபிரெ 9:7 எபிரெ 9:25 எபிரெ 9:26 |
| 16 | இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன். | லேவி 16:18 லேவி 8:15 யாத் 29:36 யாத் 29:37 எசே 45:18 எசே 45:19 யோவா 14:3 எபிரெ 9:22 எபிரெ 9:23 |
| 17 | பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது. | யாத் 34:3 ஏசா 53:6 தானி 9:24 லூக் 1:10 அப் 4:12 1தீமோ 2:5 எபிரெ 1:3 எபிரெ 9:7 1பேது 2:24 1பேது 3:18 |
| 18 | பின்பு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக் கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின் மேல் சுற்றிலும் பூசி, | லேவி 16:16 லேவி 4:7 லேவி 4:18 யாத் 30:10 யோவா 17:19 எபிரெ 2:11 எபிரெ 5:7 எபிரெ 5:8 எபிரெ 9:22 எபிரெ 9:23 |
| 19 | தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுதரம் அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் புத்திரரின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தக்கடவன். | எசே 43:18-22 சகரி 13:1 |
| 20 | அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து தீர்ந்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரப்பண்ணி, | லேவி 16:16 லேவி 6:30 லேவி 8:15 எசே 45:20 2கொரி 5:19 கொலோ 1:20 |
| 21 | அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன். | லேவி 1:4 யாத் 29:10 |
| 22 | அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திலே போக விடக்கடவன். | ஏசா 53:11 ஏசா 53:12 யோவா 1:29 கலா 3:13 எபிரெ 9:28 1பேது 2:24 |
| 23 | ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போது, உடுத்தியிருந்த சணல்நூல் வஸ்திரங்களைக் களைந்து, அங்கே வைத்துவிட்டு, | லேவி 16:4 எசே 42:14 எசே 44:19 ரோம 8:3 பிலிப் 2:6-11 எபிரெ 9:28 |
| 24 | பரிசுத்த இடத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, தன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, வெளியே வந்து, தன் சர்வாங்கதகனபலியையும் ஜனங்களின் சர்வாங்கதகனபலியையும் இட்டு, தனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, | லேவி 16:4 லேவி 8:6 லேவி 14:9 லேவி 22:6 யாத் 29:4 எபிரெ 9:10 எபிரெ 10:19-22 வெளிப் 1:5 வெளிப் 1:6 |
| 25 | பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன். | லேவி 16:6 லேவி 4:8-10 லேவி 4:19-10 யாத் 29:13 |
| 26 | போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக. | லேவி 16:10 லேவி 16:21 லேவி 16:22 |
| 27 | பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்த ஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவைகளின் தோலையும், மாம்சத்தையும், சாணியையும் அக்கினியிலே சுட்டெரிக்கக்கடவர்கள். | லேவி 4:11 லேவி 4:12 லேவி 4:21 லேவி 6:30 லேவி 8:17 |
| 28 | அவைகளைச் சுட்டெரித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக. |
| 29 | ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, சுதேசியானாலும், உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது. | லேவி 23:27-32 யாத் 30:10 எண் 29:7 1இரா 8:2 எஸ்றா 3:1 |
| 30 | கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும். | சங் 51:2 சங் 51:7 சங் 51:10 எரே 33:8 எசே 36:25-27 எபே 5:26 தீத் 2:14 எபிரெ 9:13 எபிரெ 9:14 எபிரெ 10:1 எபிரெ 10:2 1யோவா 1:7-9 |
| 31 | உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வு நாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை. | லேவி 23:32 லேவி 25:4 யாத் 31:15 யாத் 35:2 |
| 32 | அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பன் பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியஞ்செய்யப் பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த வஸ்திரங்களாகிய சணல்நூல் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, | லேவி 4:3 லேவி 4:5 லேவி 4:16 |
| 33 | பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக்கூடாரத்துக்கும், பலிபீடத்துக்கும், பிராயச்சித்தஞ்செய்து, ஆசாரியருக்காகவும் சபையின் சகல ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். | லேவி 16:6 லேவி 16:16 லேவி 16:18 லேவி 16:19 லேவி 16:24 யாத் 20:25 யாத் 20:26 |
| 34 | இப்படி வருஷத்தில் ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது என்று சொல் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான். | லேவி 23:31 எண் 29:7 |