| 1 | பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: | லேவி 11:1 லேவி 13:1 சங் 25:14 ஆமோ 3:7 எபிரெ 1:1 |
| 2 | நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்குப் பிரமியம் உண்டானால், அவன் தன் பிரமியத்தினாலே தீட்டானவன். | உபா 4:7 உபா 4:8 நெகே 9:13 நெகே 9:14 சங் 78:5 சங் 147:19 சங் 147:20 ரோம 3:2 |
| 3 | அவனுடைய மாம்சத்திலுள்ள பிரமியம் ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் பிரமியம் அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும். | லேவி 12:3 எசே 16:26 எசே 23:20 |
| 4 | பிரமியமுள்ளவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின்மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும். | 1கொரி 15:33 எபே 5:11 தீத் 1:15 |
| 5 | அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக. | லேவி 11:25 லேவி 11:28 லேவி 11:32 லேவி 13:6 லேவி 13:34 லேவி 14:8 லேவி 14:9 லேவி 14:27 லேவி 14:46 லேவி 14:47 லேவி 16:26 லேவி 16:28 லேவி 17:15 எண் 19:10 எண் 19:22 சங் 26:6 சங் 51:2 சங் 51:7 ஏசா 1:16 ஏசா 22:14 எசே 36:25 எசே 36:29 எபிரெ 9:14 எபிரெ 9:26 எபிரெ 10:22 யாக் 4:8 வெளிப் 7:14 |
| 6 | பிரமியம் உள்ளவன் உட்கார்ந்ததின்மேல் உட்காருகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பபட்டிருப்பானாக. | ஏசா 1:16 யாக் 4:8 |
| 7 | பிரமியம் உள்ளவனின் சரீரத்தைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. |
| 8 | பிரமியம் உள்ளவன் சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. | ஏசா 1:16 கலா 1:8 கலா 1:9 1தீமோ 4:1-3 தீத் 1:9 தீத் 1:10 2பேது 2:1-3 யாக் 4:8 யூதா 1:4 |
| 9 | பிரமியம் உள்ளவன் ஏறும் எந்தச்சேணமும் தீட்டாயிருக்கும். | ஆதி 31:34 |
| 10 | அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. | லேவி 15:5 லேவி 15:8 சங் 26:6 யாக் 4:8 |
| 11 | பிரமியம் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. |
| 12 | பிரமியம் உள்ளவன் தொட்ட மண்பாண்டம் உடைக்கப்படவும், மரச்சாமான் எல்லாம் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும். | லேவி 6:28 லேவி 11:32 லேவி 11:33 நீதி 1:21 நீதி 1:23 நீதி 3:21 2கொரி 5:1 பிலிப் 3:21 |
| 13 | பிரமியம் உள்ளவன் தன் பிரமியம் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாள் எண்ணிக்கொண்டிருந்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் தேகத்தை ஊற்றுநீரில் கழுவக்கடவன்; அப்பொழுது சுத்தமாயிருப்பான். | லேவி 15:28 லேவி 8:33 லேவி 9:1 லேவி 14:8 லேவி 14:10 யாத் 29:35 யாத் 29:37 எண் 12:14 எண் 19:11 எண் 19:12 |
| 14 | எட்டாம்நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன். | லேவி 15:29 லேவி 15:30 லேவி 1:14 லேவி 12:6 லேவி 12:8 லேவி 14:22-31 எண் 6:10 2கொரி 5:21 எபிரெ 7:26 எபிரெ 10:10 எபிரெ 10:12 எபிரெ 10:14 |
| 15 | ஆசாரியன் அவைகளில் ஒன்றைப்பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக்கி, அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவன் பிரமியத்தினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். | லேவி 5:7-10 லேவி 14:19 லேவி 14:20 லேவி 14:30 லேவி 14:31 |
| 16 | ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக. | லேவி 15:5 லேவி 22:4 உபா 23:10 உபா 23:11 2கொரி 7:1 1பேது 2:11 1யோவா 1:7 |
| 17 | கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக. |
| 18 | இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக. | லேவி 15:5 எபே 4:17-19 எபே 5:3-11 2தீமோ 2:22 1பேது 2:11 |
| 19 | சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊரலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. | லேவி 12:2 லேவி 12:4 லேவி 20:18 புலம் 1:8 புலம் 1:9 புலம் 1:17 எசே 36:17 மத் 15:19 மாற் 5:25 |
| 20 | அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும். | லேவி 15:4-9 நீதி 2:16-19 நீதி 5:3-13 நீதி 6:24 நீதி 6:35 நீதி 7:10-27 நீதி 9:13-18 நீதி 22:27 பிரச 7:26 1கொரி 15:33 |
| 21 | அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. | லேவி 15:5 லேவி 15:6 ஏசா 22:14 2கொரி 7:1 எபிரெ 9:26 வெளிப் 7:14 |
| 22 | அவள் உட்கார்ந்த மணையைத்தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. |
| 23 | அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. |
| 24 | ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிறபடுக்கையும் தீட்டுப்படும். | லேவி 15:33 லேவி 20:18 எசே 18:6 எசே 22:10 1தெச 5:22 எபிரெ 13:4 1பேது 2:11 |
| 25 | ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக. | லேவி 15:19-24 மத் 9:20 மாற் 5:25 மாற் 7:20-23 லூக் 8:43 |
| 26 | அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும். |
| 27 | அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. | லேவி 15:5-8 லேவி 15:13-8 லேவி 15:21-8 லேவி 17:15 லேவி 17:16 எசே 36:25 எசே 36:29 சகரி 13:1 எபிரெ 9:14 எபிரெ 10:22 1பேது 1:18 1பேது 1:19 1யோவா 1:7 |
| 28 | அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாள் எண்ணிக்கொள்வாளாக; அதின்பின்பு சுத்தமாயிருப்பாள். | லேவி 15:13-15 மத் 1:21 1கொரி 1:30 1கொரி 6:11 கலா 3:13 கலா 4:4 எபே 1:6 எபே 1:7 |
| 29 | எட்டாம்நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள். |
| 30 | ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். |
| 31 | இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் சாகாதபடிக்கு, இப்படி நீங்கள் அவர்கள் தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைக்கக்கடவீர்கள். | லேவி 11:47 லேவி 13:59 எண் 5:3 உபா 24:8 சங் 66:18 எசே 44:23 எபிரெ 10:29 எபிரெ 12:14 எபிரெ 12:15 யூதா 1:4 |
| 32 | பிரமியமுள்ளவனுக்கும், இந்திரியக்கழிவினாலே தீட்டானவனுக்கும், | லேவி 15:1-18 லேவி 11:46 லேவி 13:59 லேவி 14:2 லேவி 14:32 லேவி 14:54-57 எண் 5:29 எண் 6:13 எண் 19:14 எசே 43:12 |
| 33 | சூதக பலவீனமுள்ளவளுக்கும், பிரமியமுள்ள ஸ்திரீ புருஷருக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் ஏற்ற பிரமாணம் இதுவே என்றார். | லேவி 15:24 லேவி 20:18 |