| 1 | கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 2 | மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். | எசே 16:44 எசே 16:46 எரே 3:7-10 |
| 3 | அவர்கள் எகிப்திலே வேசித்தனம்பண்ணினார்கள்; தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம் பண்ணினார்கள்; அங்கே அவர்களுடைய ஸ்தனங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் கொங்கைகள் தொடப்பட்டது. | எசே 20:8 லேவி 17:7 உபா 29:16 யோசு 24:14 |
| 4 | அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள்; அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்; இவைகளே அவர்களுடைய பெயர்கள்; அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம். | எசே 16:40 1இரா 12:20 |
| 5 | அகோலாள் என்னுடையவளாயிருக்கும்போது சோரம்போனாள். | 1இரா 14:9 1இரா 14:16 1இரா 15:26 1இரா 15:30 1இரா 16:31 1இரா 16:32 1இரா 21:26 2இரா 17:7-18 |
| 6 | நீலாம்பரந்தரித்த தலைவரும், அதிபதிகளும், சௌந்தரிய வாலிபரும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரருமாயிருந்த சமீபதேசத்தாராகிய அசீரியரென்கிற தன் சிநேகிதர்மேல் அவள் மோகித்து, |
| 7 | அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும், தான் மோகித்த அனைவரோடும் தன் வேசித்தனங்களை நடப்பித்து, அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள். | எசே 16:15 |
| 8 | தான் எகிப்திலேபண்ணின வேசித்தனங்களை அவள் விடவில்லை; அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள். | எசே 23:3 எசே 23:19 எசே 23:21 யாத் 32:4 1இரா 12:28 2இரா 10:29 2இரா 17:16 |
| 9 | ஆகையால் அவளுடைய சிநேகிதரின் கையிலே, அவள் மோகித்திருந்த அசீரிய புத்திரரின் கையிலே, நான் அவளை ஒப்புக்கொடுத்தேன். | 2இரா 15:29 2இரா 17:3-6 2இரா 17:23-6 2இரா 18:9-12 1நாளா 5:26 ஓசி 11:5 வெளிப் 17:12 வெளிப் 17:13 வெளிப் 17:16 |
| 10 | அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்; அவளுடைய குமாரரையும் அவளுடைய குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவளையோ பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; அப்படியே அவளிடத்தில் ஆக்கினைகள் செய்யப்பட்டபடியினால் ஸ்திரீகளுக்குள் அவகீர்த்தியுள்ளவளானாள். | எசே 23:29 எசே 16:37-41 ஓசி 2:3 ஓசி 2:10 |
| 11 | அவளுடைய தங்கையாகிய அகோலிபாள் இதைக் கண்டும், தன் மோகவிகாரத்தில் அவளைப் பார்க்கிலும் கெட்டவளானாள்; தன் சகோதரியின் வேசித்தனங்களிலும் தன் வேசித்தனங்கள் அதிகமாயிற்று. | எசே 23:4 எரே 3:8 |
| 12 | மகா அலங்கார உடுப்புள்ள தலைவரும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரரும், சௌந்தரியமுள்ள வாலிபருமான சமீபதேசத்தாராகிய அசீரிய புத்திரர்மேல் மோகங்கொண்டாள். | எசே 23:5 எசே 16:28 2இரா 16:7-15 2நாளா 28:16-23 |
| 13 | அவளும் அசுத்தமானாளென்றும், அவர்கள் இருவரும் ஒரே வழியில் போனார்களென்றும் கண்டேன். | எசே 23:31 2இரா 17:18 2இரா 17:19 ஓசி 12:1 ஓசி 12:2 |
| 14 | அவள் தன் வேசித்தனங்களில் அதிகரித்தாள்; சுவரில் ஜாதிலிங்கத்தால் சித்திரந்தீர்ந்த கல்தேயரின் புருஷசுரூபங்களைக் கண்டாள். | எசே 8:10 ஏசா 46:1 எரே 50:2 |
| 15 | அவர்கள் எல்லாரும் தங்கள் ஜென்மதேசமாகிய கல்தேயாவில் உள்ள பாபிலோன் புத்திரரின் சாயலாகத் தங்கள் அரைகளில் கச்சை கட்டினவர்களும், தங்கள் தலைகளில் சாயந்தீர்ந்த பெரிய பாகைகளைத் தரித்தவர்களும், பார்வைக்கு ராஜகுமாரர்களுமாக இருந்தார்கள். | 1சாமு 18:4 ஏசா 22:21 |
| 16 | அவளுடைய கண்கள் அவர்களைப் பார்த்தவுடனே, அவள் அவர்கள்மேல் மோகித்து, கல்தேயாவுக்கு அவர்களண்டையிலே ஸ்தானாதிபதிகளை அனுப்பினாள். | எசே 16:29 ஆதி 3:6 ஆதி 6:2 ஆதி 39:7 2சாமு 11:2 2இரா 24:1 யோபு 31:1 சங் 119:37 நீதி 6:25 நீதி 23:33 மத் 5:28 |
| 17 | அப்பொழுது பாபிலோன் புத்திரர் அவளண்டையிலே சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; அவள் இவர்களால் தீட்டுப்பட்டுப்போனபின்பு, அவள் மனது அவர்களை விட்டுப் பிரிந்தது. | ஆதி 10:10 ஆதி 11:9 |
| 18 | இவ்விதமாய் அவள் தன் வேசித்தனங்களை வெளிப்படுத்தி, தன்னை நிர்வாணமாக்கினபோது, என் மனம் அவளுடைய சகோதரியை விட்டுப் பிரிந்ததுபோல அவளையும் விட்டுப் பிரிந்தது. | எசே 16:36 எசே 21:24 ஏசா 3:9 எரே 8:12 ஓசி 7:1 |
| 19 | அவள் எகிப்துதேசத்திலே வேசித்தனம்பண்ணின தன் வாலிபத்தின் நாட்களை நினைத்து, தன் வேசித்தனங்களில் அதிகரித்துப்போனாள். | எசே 23:14 எசே 16:25 எசே 16:29 எசே 16:51 ஆமோ 4:4 |
| 20 | கழுதைமாம்சமான மாம்சமும், குதிரை இந்திரியமான இந்திரியமுமுள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாயிருக்கும்படி அவர்கள்மேல் மோகித்தாள். | எசே 16:20 எசே 16:26 எசே 17:15 எரே 5:8 |
| 21 | எகிப்தியரால் உன் கன்னிமையின் ஸ்தனங்களாகிய கொங்கைகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன் இளம்பிராயத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய். |
| 22 | ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன் மனது விட்டுப்பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும் வரப்பண்ணுவேன். | எசே 23:9 எசே 23:28 எசே 16:37 ஏசா 10:5 ஏசா 10:6 ஏசா 39:3 ஏசா 39:4 ஆபகூ 1:6-10 வெளிப் 17:16 |
| 23 | சௌந்தரியமுள்ள வாலிபரும், தலைவரும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரருமாகிய பேர்பெற்ற பிரபுக்களான பாபிலோன் புத்திரரையும், கல்தேயர் எல்லாரையும், பேகோடு, சோவா, கோவா என்கிற தேசங்களின் மனுஷரையும் அவர்களோடேகூட அசீரிய புத்திரர் எல்லாரையும் வரப்பண்ணுவேன். | எசே 21:19-27 2இரா 20:14-17 2இரா 25:1-3 |
| 24 | அவர்கள் வண்டிகளோடும், இரதங்களோடும், இயந்திரங்களோடும், ஜனக்கூட்டத்தோடும், கேடகங்களும், பரிசைகளும், தலைச்சீராக்களும் தரித்தவர்களாய், உனக்கு விரோதமாக வந்து, உன்னை சுற்றிலும் பாளயமிறங்குவார்கள்; அவர்களுக்கு முன்னே நான் நியாயத்தை விளங்கப்பண்ணுவேன்; அவர்கள் தங்கள் நியாயங்களின்படி உன்னை நியாயந்தீர்ப்பார்கள். | எசே 26:10 எரே 47:3 நாகூ 2:3 நாகூ 2:4 நாகூ 3:2 நாகூ 3:3 |
| 25 | உனக்கு விரோதமாக என் எரிச்சலை விளங்கப்பண்ணுவேன்; அவர்கள் உன்னை உக்கிரமாய் நடப்பித்து, உன் மூக்கையும் உன் காதுகளையும் அறுத்துப்போடுவார்கள்; உன்னில் மீதியாயிருப்பவர்கள் பட்டயத்தால் வெட்டுண்டுபோவார்கள்; அவர்கள் உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் பிடித்துக்கொள்ளுவார்கள்; உன்னில் மீதியாயிருப்பவர்கள் அக்கினிக்கு இரையாவார்கள். | எசே 5:13 எசே 8:1-18 எசே 16:38-42 யாத் 34:14 உபா 29:20 உபா 32:21 உபா 32:22 நீதி 6:34 உன்ன 8:6 செப் 1:18 |
| 26 | அவர்கள் உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்காரமான ஆபரணங்களைப் பறித்துக்கொள்ளுவார்கள். | எசே 23:29 எசே 16:16 எசே 16:37 எசே 16:39 எரே 13:22 ஓசி 2:3 ஓசி 2:9 ஓசி 2:10 வெளிப் 17:16 வெளிப் 18:14-17 |
| 27 | இவ்விதமாய் உன் முறைகேட்டையும், நீ எகிப்துதேசத்தில் துவக்கின உன் வேசித்தனத்தையும் ஒழியப்பண்ணுவேன்; நீ இனி அவர்களை நோக்க உன் கண்களை ஏறெடுக்காமலும், எகிப்தை நினையாமலும் இருப்பாய். | எசே 16:41 எசே 22:15 ஏசா 27:9 மீகா 5:10-14 சகரி 13:2 |
| 28 | கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்களின் கையிலும், உன் மனம்விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன். | எசே 23:17 எசே 23:22 எசே 16:37 எரே 21:7-10 எரே 24:8 எரே 34:20 |
| 29 | அவர்கள் உன்னை வெறுப்பாய் நடத்தி, உன் பிரயாசத்தின் பலனையெல்லாம் எடுத்துக்கொண்டு, உன்னை அம்மணமும், நிர்வாணமுமாக்கிவிடுவார்கள்; அப்படியே உன் வெட்கக்கேடும் உன் முறைகேடுமான உன் வேசித்தனத்தின் நிர்வாணம் வெளிப்படுத்தப்படும். | எசே 23:25 எசே 23:26 எசே 23:45-47 எசே 16:39 உபா 28:47-51 2சாமு 13:15 |
| 30 | நீ புறஜாதிகளைப் பின்தொடர்ந்து, அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன் வேசித்தனத்தினிமித்தம் இவைகள் உனக்குச் செய்யப்படும். | எசே 23:12-21 எசே 6:9 சங் 106:35-38 எரே 2:18-20 எரே 16:11 எரே 16:12 எரே 22:8 எரே 22:9 |
| 31 | உன் சகோதரியின் வழியிலே நீ நடந்தாய்; ஆகையால் அவளுடைய பாத்திரத்தை உன் கையிலே கொடுப்பேன். | எசே 23:13 எசே 16:47-51 எரே 3:8-11 |
| 32 | கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் சகோதரியினுடைய ஆழமும் அகலமுமானதும் நிறைய வார்க்கப்பட்டதுமான பாத்திரத்தைக் குடித்து, நகைப்பும் பரியாசமுமாவாய். | சங் 60:3 ஏசா 51:17 எரே 25:15-28 எரே 48:26 மத் 20:22 மத் 20:23 வெளிப் 16:19 வெளிப் 18:6 |
| 33 | சமாரியா என்னும் உன் சகோதரியினுடைய பாத்திரமாயிருக்கிற பிரமிப்பும் பாழ்க்கடிப்பும் என்கிற பாத்திரத்தால் வெறியினாலும் சஞ்சலத்தினாலும் நிறையப்படுவாய். | எரே 25:27 ஆபகூ 2:16 |
| 34 | நீ அதில் இருக்கிறதைக் குடித்து, உறிஞ்சி, அதின் ஓடுகளை உடைத்துப்போட்டு, உன் ஸ்தனங்களைக் கீறிக்கொள்வாய்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். | சங் 75:8 ஏசா 51:17 |
| 35 | ஆகையால், நீ என்னை மறந்து, என்னை உனக்குப் புறம்பே தள்ளிவிட்டதினிமித்தம், நீ உன் முறைகேட்டையும் உன் வேசித்தனங்களையும் சுமப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். | எசே 22:12 ஏசா 17:10 எரே 2:32 எரே 3:21 எரே 13:25 எரே 23:27 எரே 32:33 ஓசி 8:14 ஓசி 13:6 ரோம 1:28 |
| 36 | பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே. நீ அகோலாளையும் அகோலிபாளையும் குறித்து வழக்காட மனதானால், அவர்களுடைய அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டு. | எசே 20:4 எசே 22:2 எரே 1:10 1கொரி 6:2 1கொரி 6:3 |
| 37 | அவர்கள் விபசாரம்பண்ணினார்கள்; அவர்கள் கைகளில் இரத்தமும் இருக்கிறது; அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களோடே விபசாரம்பண்ணி, தாங்கள் எனக்குப்பெற்ற தங்கள் பிள்ளைகளையும் அவைகளுக்கு இரையாகத் தீக்கடக்கப்பண்ணினார்கள். | எசே 23:5 எசே 16:32 ஓசி 1:2 ஓசி 3:1 |
| 38 | அன்றியும் அவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்தை அந்நாளிலேதானே தீட்டுப்படுத்தி, என் ஓய்வு நாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள். | எசே 7:20 எசே 8:5-16 2இரா 21:4 2இரா 21:7 2இரா 23:11 2இரா 23:12 |
| 39 | அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் நரகலான விக்கிரகங்களுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்நாளில்தானே அதற்குள் பிரவேசித்தார்கள்; இதோ, என் ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள். | ஏசா 3:9 எரே 7:8-11 எரே 11:15 மீகா 3:11 யோவா 18:28 |
| 40 | இதுவுமல்லாமல், தூரத்திலுள்ள புருஷரிடத்திற்குத் தூது அனுப்பி, அவர்களை வரவழைத்தார்கள், அவர்கள் வந்தார்கள்; அவர்களுக்கென்று நீ குளித்து, உன் கண்களில் மையிட்டுக்கொண்டு ஆபரணங்களால் உன்னை அலங்கரித்து, | எசே 23:13 ஏசா 57:9 |
| 41 | சிறந்த மஞ்சத்தின்மேல் உட்கார்ந்துகொண்டாய்; அதின் முன்னே ஒரு பீடம் ஆயத்தம் பண்ணப்பட்டிருந்தது; என் தூபவர்க்கத்தையும் என் எண்ணெயையும் அதின்மேல் வைத்தாய். | எஸ்தர் 1:6 நீதி 7:16 நீதி 7:17 ஏசா 57:7 ஆமோ 2:8 ஆமோ 6:4 |
| 42 | அவளிடத்திலே அந்தச் சந்தடியின் இரைச்சல் அடங்கின பின்பு, ஜனத்திரளான புருஷரையும் அழைத்தனுப்பினார்கள்; சபேயர் வனாந்தரத்திலிருந்து கொண்டுவரப்பட்டார்கள்; இவர்கள் அவர்களுடைய கைகளில் கடகங்களையும் அவர்களுடைய தலைகளில் அலங்காரமான கிரீடங்களையும் போட்டார்கள். | யாத் 32:6 யாத் 32:18 யாத் 32:19 ஓசி 13:6 ஆமோ 6:1-6 |
| 43 | விபசாரங்களில் கிழவியானவளைக் குறித்து அவள் இன்னும் தன் வேசித்தனங்களைச் செய்வாளோ என்றேன். | எஸ்றா 9:7 சங் 106:6 எரே 13:23 தானி 9:16 |
| 44 | பரஸ்திரீயினிடத்திலே பிரவேசிக்குமாப்போல அவளிடத்தில் பிரவேசித்தார்கள்; இந்தப் பிரகாரமாக முறைகேடானவர்களாகிய அகோலாளிடத்திலும் அகோலிபாளிடத்திலும் பிரவேசித்தார்கள். | எசே 23:3 எசே 23:9-13 |
| 45 | ஆகையால், விபசாரிகளை நியாயந்தீர்க்கிறபிரகாரமாகவும், இரத்தஞ்சிந்தும் ஸ்திரீகளை நியாயந்தீர்க்கிறபிரகாரமாகவும், நீதிமான்கள் அவர்களை நியாயந்தீர்ப்பார்கள்; அவர்கள் விபசாரிகள், அவர்களுடைய கைகளில் இரத்தம் இருக்கிறது. | எசே 23:36 எரே 5:14 ஓசி 6:5 சகரி 1:6 யோவா 8:3-7 |
| 46 | கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்களுக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தை வரப்பண்ணி, அவர்களை அலைச்சலுக்கும் கொள்ளைக்கும் ஒப்புக்கொடுப்பேன். | எசே 23:22-26 எசே 16:40 எரே 25:9 |
| 47 | அந்தக் கூட்டத்தார் அவர்களைக் கல்லெறிந்து, தங்கள் பட்டயங்களால் வெட்டிப்போடுவார்கள்; அவர்களுடைய குமாரரையும் அவர்களுடைய குமாரத்திகளையும் கொன்று, அவர்களுடைய வீடுகளை அக்கினியால் சுட்டெரிப்பார்கள். | எசே 23:25 எசே 23:29 எசே 9:6 எசே 16:41 எரே 33:4 எரே 33:5 |
| 48 | இவ்விதமாய் எல்லா ஸ்திரீகளும் புத்தியடைந்து, உங்கள் முறைகேடுகளைச் செய்யாதிருக்கும்படி, முறைகேட்டைத் தேசத்தைவிட்டு ஒழியப்பண்ணுவேன். | எசே 23:27 எசே 6:6 எசே 22:15 எசே 36:25 மீகா 5:11-14 செப் 1:3 |
| 49 | உங்கள் முறைகேட்டை உங்கள்மேல் சுமத்துவார்கள்; அப்பொழுது நீங்கள் உங்கள் நரகலான விக்கிரகங்களைச் சேவித்த பாவங்களைச் சுமந்து, நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள். | எசே 7:4 எசே 7:9 எசே 9:10 எசே 11:21 எசே 16:43 எசே 22:31 ஏசா 59:18 |