| 1 | ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: | எசே 1:2 எசே 8:1 எசே 20:1 எசே 26:1 எசே 29:1 எசே 29:17 எசே 31:1 எசே 32:1 எசே 32:17 எசே 33:21 எசே 40:1 2இரா 24:12 |
| 2 | மனுபுத்திரனே, இந்த நாளின் பேரையும், இந்தத் தேதியையும் நீ எழுதிவை, இந்தத் தேதியில்தானே பாபிலோன் ராஜா எருசலேமில் பாளயமிறங்கினான். | ஏசா 8:1 ஏசா 30:8 ஏசா 30:9 ஆபகூ 2:2 ஆபகூ 2:3 |
| 3 | இப்போதும் நீ கலகவீட்டாருக்கு ஒரு உபமானத்தைக் காண்பித்து, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஒரு கொப்பரையை அடுப்பிலே வை; அதை அடுப்பிலே வைத்து, அதிலே தண்ணீரை விடு. | எசே 17:2 எசே 19:2-14 எசே 20:49 சங் 78:2 மீகா 2:4 மாற் 12:12 லூக் 8:10 |
| 4 | சகல நல்ல கண்டங்களான பின்னந்தொடைகளும் முன்னந்தொடைகளுமாகிய கண்டங்களைச் சேர்த்து அதிலே போடு; நல்ல எலும்புகளால் அதை நிரப்பு. | எசே 22:18-22 மீகா 3:2 மீகா 3:3 மத் 7:2 |
| 5 | ஆட்டுமந்தையில் தெரிந்துகொள்ளப்பட்டதை அதற்காகக் கொண்டுவந்து, எலும்புகளை அதின் கீழே குவித்து எரிக்கவேண்டும்; அதிலுள்ள எலும்புகளும் வேகத்தக்கதாக அதைப் பொங்கப்பொங்கக் காய்ச்சவேண்டும். | எசே 20:47 எசே 34:16 எசே 34:17 எசே 34:20 எரே 39:6 எரே 52:10 எரே 52:24-27 வெளிப் 19:20 |
| 6 | இதற்காகக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நுரை ஒட்டிக்கொண்டிருக்கிறதும் நுரை நீங்காததுமாகிய கொப்பரை என்னப்பட்ட இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! அதில் இருக்கிறதைக் கண்டங்கண்டமாக எடுத்துக்கொண்டுபோ; அதின்பேரில் சீட்டுப்போடலாகாது. | எசே 24:9 எசே 11:6 எசே 11:7 எசே 22:2 எசே 22:6-9 எசே 22:12-9 எசே 22:27-9 எசே 23:37-45 2இரா 21:16 2இரா 24:4 மீகா 7:2 நாகூ 3:1 மத் 23:35 வெளிப் 11:7 வெளிப் 11:8 வெளிப் 17:6 வெளிப் 18:24 |
| 7 | அவள் இரத்தம் அவள் நடுவில் இருக்கிறது; மண்ணிலே மறைந்துபோகும்படி அதைத் தரையிலே ஊற்றாமல் கற்பாறையிலே ஊற்றிப்போட்டாள். | 1இரா 21:19 ஏசா 3:9 எரே 2:34 எரே 6:15 |
| 8 | நீதியைச் சரிக்கட்டுவதற்காகக் கோபம் மூளும்படி நான் அவள் இரத்தத்தை மறைக்காமல் கன்மலையின்மேல் வைத்தேன். | எசே 5:13 எசே 8:17 எசே 8:18 எசே 22:30 எசே 22:31 உபா 32:21 உபா 32:22 2இரா 22:17 2நாளா 34:25 2நாளா 36:16 2நாளா 36:17 எரே 7:18 எரே 7:20 எரே 15:1-4 |
| 9 | ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியப்பண்ணுவேன். | எசே 24:6 நாகூ 3:1 ஆபகூ 2:12 லூக் 13:34 லூக் 13:35 வெளிப் 14:20 வெளிப் 16:6 வெளிப் 16:19 |
| 10 | திரளான விறகுகளைக் கூட்டு, தீயை மூட்டு, இறைச்சியை முறுக வேவித்துச் சம்பாரங்களை இடு; எலும்புகளை எரித்துப்போடு. | எரே 17:3 எரே 20:5 புலம் 1:10 புலம் 2:16 |
| 11 | பின்பு கொப்பரை காய்ந்து, அதின் களிம்பு வெந்து, அதற்குள் இருக்கிற அதின் அழுக்கு உருகி, அதின் நுரை நீங்கும்படி அதை வெறுமையாகத் தழலின்மேல் வை. | எரே 21:10 எரே 32:29 எரே 37:10 எரே 38:18 எரே 39:8 எரே 52:13 |
| 12 | அது மகா வருத்தத்தை உண்டாக்கியும், அதின் திரளான நுரை அதை விட்டு நீங்கவில்லை; அதின் நுரை அக்கினிக்கு உள்ளாகவேண்டியது. | ஏசா 47:13 ஏசா 57:9 ஏசா 57:10 எரே 2:13 எரே 9:5 எரே 10:14 எரே 10:15 எரே 51:58 ஓசி 12:1 ஆபகூ 2:13 ஆபகூ 2:18 ஆபகூ 2:19 |
| 13 | உன் அசுத்தத்தோடே முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாதபடியினால், இனி என் உக்கிரம் உன்னில் ஆறித்தீருமட்டும் உன் அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய். | எசே 24:11 எசே 23:36-48 2கொரி 7:1 |
| 14 | கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன்; நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை; உன் வழிகளுக்கும் உன் செய்கைகளுக்குத்தக்கதாக உன்னை நியாயந்தீர்ப்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். | எண் 23:19 1சாமு 15:29 சங் 33:9 ஏசா 55:11 எரே 23:20 மத் 24:35 |
| 15 | பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 16 | மனுபுத்திரனே, இதோ, நான் உன் கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இருப்பாயாக. | எசே 24:18 எசே 24:21 எசே 24:25 நீதி 5:19 உன்ன 7:10 |
| 17 | அலறாமல் பெருமூச்சு விடு, இழவு கொண்டாடவேண்டாம்; உன் பாகையை உன் தலையிலே கட்டி, உன் பாதரட்சையை உன் பாதங்களில் தொடுத்துக்கொள்; உன் தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருக்கக்கடவாய் என்றார். | சங் 37:7 சங் 39:9 சங் 46:10 ஆமோ 8:3 ஆபகூ 2:20 |
| 18 | விடியற்காலத்தில் நான் ஜனங்களோடே பேசினேன்; அன்று சாயங்காலத்தில் என் மனைவி செத்துப்போனாள்; எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன். | 1கொரி 7:29 1கொரி 7:30 |
| 19 | அப்பொழுது ஜனங்கள் என்னை நோக்கி: நீர் செய்கிறவைகள் எங்களுக்கு என்னத்திற்கு அடையாளம் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கமாட்டீரா என்று கேட்டார்கள். | எசே 12:9 எசே 17:12 எசே 20:49 எசே 21:7 எசே 37:18 மல்கி 3:7 மல்கி 3:8 மல்கி 3:13 |
| 20 | நான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 21 | நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்கள் பலத்தின் முக்கியமும் உங்கள் கண்களின் விருப்பமும் உங்கள் ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என் பரிசுத்த ஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள். | எசே 7:20-22 எசே 9:7 சங் 74:7 சங் 79:1 ஏசா 65:11 எரே 7:14 புலம் 1:10 புலம் 2:6 புலம் 2:7 தானி 11:31 அப் 6:13 அப் 6:14 |
| 22 | அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருப்பீர்கள். | எசே 24:16 எசே 24:17 யோபு 27:15 சங் 78:64 எரே 16:4-7 எரே 47:3 ஆமோ 6:9 ஆமோ 6:10 |
| 23 | உங்கள் பாகைகள் உங்கள் தலைகளிலும், உங்கள் பாதரட்சைகள் உங்கள் கால்களிலும் இருக்கும்; நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்கள் அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள். | எசே 4:17 எசே 33:10 லேவி 26:39 |
| 24 | அப்படியே எசேக்கியேல் உங்களுக்கு அடையாளமாக இருப்பான்; அவன் செய்தபடி எல்லாம் நீங்களும் செய்வீர்கள்; இப்படி வரும்போது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று உரைத்தார் என்றேன். | எசே 4:3 எசே 12:6 எசே 12:11 ஏசா 8:18 ஏசா 20:3 ஓசி 1:2-9 ஓசி 3:1-4 லூக் 11:29 லூக் 11:30 |
| 25 | பின்னும் மனுபுத்திரனே, நான் எந்த நாளிலே அவர்களுடைய பலத்தையும், அவர்களுடைய அலங்காரத்தின் மகிழ்ச்சியையும், அவர்களுடைய கண்களின் விருப்பத்தையும், அவர்களுடைய ஆத்துமாவின் விசேஷித்தவாஞ்சையையும், அவர்களுடைய குமாரரையும், அவர்களுடைய குமாரத்திகளையும் அவர்களைவிட்டு எடுத்துக்கொள்ளுகிறேனோ, | எசே 24:21 சங் 48:2 சங் 50:2 சங் 122:1-9 எரே 7:4 |
| 26 | அந்த நாளிலேதானே தப்பிவந்த ஒருவன் உன்னிடத்தில் வந்து உன் காதுகள் கேட்கச் சொல்லுவான் அல்லவோ? | எசே 33:21 எசே 33:22 1சாமு 4:12-18 யோபு 1:15-19 |
| 27 | அந்த நாளிலேதானே உன் வாய் திறக்கப்பட்டு, நீ தப்பிவந்தவனோடே பேசுவாய்; இனி மவுனமாயிருக்கமாட்டாய்; இப்படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள் என்றார். | எசே 3:26 எசே 3:27 எசே 29:21 எசே 33:22 யாத் 6:11 யாத் 6:12 சங் 51:15 லூக் 21:15 எபே 6:19 |