| 1 | பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 2 | இப்போதும் மனுபுத்திரனே, இரத்தஞ்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதானால், நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியக்காட்டி, | எசே 20:4 எசே 23:36 |
| 3 | அதை நோக்கி: கர்த்தருடைய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் காலம் வரத்தக்கதாக உன் நடுவிலே இரத்தஞ்சிந்துகிறதும், உன்னைத் தீட்டுப்படுத்தத்தக்கதாக உனக்கே விரோதமாய் நரகலான விக்கிரகங்களை உண்டுபண்ணுகிறதுமான நகரமே, | எசே 22:27 எசே 24:6-9 செப் 3:3 |
| 4 | நீ சிந்தின உன் இரத்தத்தினால் நீ குற்றஞ்சுமந்ததாகி நீ உண்டுபண்ணின உன் நரகலான விக்கிரகங்களால் நீ தீட்டுப்பட்டு, உன் நாட்களைச் சமீபிக்கப்பண்ணி, உன் வருஷங்களை நிறைவேற்றினாய்; ஆகையால் நான் உன்னைப் புறஜாதிகளுக்கு நிந்தையாகவும், தேசங்களுக்கெல்லாம் பரியாசமாகவும் வைப்பேன். | எசே 22:2 2இரா 21:16 |
| 5 | உனக்குச் சமீபமும் உனக்குத் தூரமுமான தேசங்களின் மனுஷர் நீ அவகீர்த்தியுள்ளதென்றும், அமளி பெருத்ததென்றும் உன்னைப் பரியாசம்பண்ணுவார்கள். | எரே 15:2 எரே 15:3 |
| 6 | இதோ, இஸ்ரவேலின் அதிபதிகளில் அவரவர் தங்கள் புயபலத்துக்குத் தக்கதாக, உன்னில் இரத்தஞ்சிந்தினார்கள். | எசே 22:27 நெகே 9:34 ஏசா 1:23 எரே 2:26 எரே 2:27 எரே 5:5 எரே 32:32 தானி 9:8 மீகா 3:1-3 மீகா 3:9-11 சகரி 3:3 |
| 7 | உன்னிலுள்ள தாய் தகப்பனை அற்பமாய் எண்ணினார்கள்; உன் நடுவில் பரதேசிக்கு இடுக்கண் செய்தார்கள்; உனக்குள் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்கினார்கள். | யாத் 21:17 லேவி 20:9 உபா 27:16 நீதி 20:20 நீதி 30:11 நீதி 30:17 மத் 15:4-6 மாற் 7:10 |
| 8 | நீ என் பரிசுத்த வஸ்துக்களை அசட்டைப்பண்ணி, என் ஓய்வு நாட்களை பரிசுத்தக்குலைச்சலாக்கினாய். | எசே 22:26 எசே 20:13 எசே 20:21 எசே 20:24 எசே 23:38 எசே 23:39 லேவி 19:30 ஆமோ 8:4-6 மல்கி 1:6-8 மல்கி 1:12-8 |
| 9 | இரத்தஞ்சிந்தும்படிக்கு அபாண்டம் பேசுகிறவர்கள் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; மலைகளின்மேல் சாப்பிடுகிறவர்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; முறைகேடு செய்கிறவர்கள் உன் நடுவில் இருக்கிறார்கள். | யாத் 20:16 யாத் 23:1 லேவி 19:16 1இரா 21:10-13 சங் 50:20 சங் 101:5 நீதி 10:18 நீதி 18:8 நீதி 26:22 எரே 6:28 எரே 9:4 எரே 37:13-15 எரே 38:4-6 மத் 26:59 அப் 6:11-13 அப் 24:5 அப் 24:13 வெளிப் 12:9 வெளிப் 12:10 |
| 10 | தகப்பனை நிர்வாணமாக்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; தூரஸ்திரீயைப் பலவந்தப்படுத்தினவர்கள் உன்னில் இருக்கிறார்கள். | ஆதி 35:22 ஆதி 49:4 லேவி 18:7 லேவி 18:8 லேவி 20:11 உபா 27:20 உபா 27:23 2சாமு 16:21 2சாமு 16:22 1நாளா 5:1 ஆமோ 2:7 1கொரி 5:1 |
| 11 | உன்னில் ஒருவன் தன் அயலானுடைய மனைவியோடே அருவருப்பானதைச் செய்கிறான்; வேறொருவன் முறைகேடாய்த் தன் மருமகளைத் தீட்டுப்படுத்துகிறான்; வேறொருவன் தன் தகப்பனுக்குப் பிறந்த தன் சகோதரியைப் பலவந்தம்பண்ணுகிறான். | எசே 18:11 லேவி 18:20 லேவி 20:10 உபா 22:22 யோபு 31:9-11 எரே 5:7 எரே 5:8 எரே 9:2 எரே 29:23 மல்கி 3:5 மத் 5:27 மத் 5:28 1கொரி 6:9 கலா 5:19 எபிரெ 13:4 |
| 12 | இரத்தஞ்சிந்தும்படிக்குப் பரிதானம்வாங்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; நீ வட்டியையும் பொலிசையையும் வாங்கி, பொருளாசையினால் உன் அயலானுக்கு இடுக்கண் செய்து, என்னைமறந்து போனாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். | யாத் 23:7 யாத் 23:8 உபா 16:19 உபா 27:25 ஏசா 1:23 மீகா 7:2 மீகா 7:3 செப் 3:3 செப் 3:4 |
| 13 | இதோ, நீ அநியாயமாய்ச் சம்பாதித்த பொருளினிமித்தமும், உன் நடுவில் நீ சிந்தின இரத்தத்தினிமித்தமும் நான் கைகொட்டுகிறேன். | எசே 21:14 எசே 21:17 எண் 24:10 |
| 14 | நான் உன்னில் நியாயஞ்செய்யும் நாட்களில் உன் இருதயம் தாங்குமோ? அப்பொழுது உன் கைகள் திடமாயிருக்குமோ? கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றுவேன். | எசே 21:7 எசே 28:9 யோபு 40:9 ஏசா 31:3 ஏசா 45:9 எரே 13:21 1கொரி 10:22 எபிரெ 10:31 |
| 15 | நான் உன்னைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, உன்னை தேசங்களிலே தூற்றி, உன் அசுத்தத்தை உன்னில் ஒழியப்பண்ணுவேன். | எசே 5:12 எசே 12:14 எசே 12:15 எசே 34:6 எசே 36:19 லேவி 26:33 உபா 4:27 உபா 28:25 உபா 28:64 நெகே 1:8 எரே 15:4 சகரி 7:14 |
| 16 | நீ புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தக் குலைச்சலாயிருந்து, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய் என்று சொல் என்றார். | எசே 7:24 எசே 25:3 ஏசா 43:28 ஏசா 47:6 |
| 17 | கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 18 | மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் எனக்குக் களிம்பாய்ப் போனார்கள்; அவர்களெல்லாரும் குகையிலுள்ள பித்தளையும் தகரமும் இரும்பும் ஈயமுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெள்ளியின் களிம்பாய்ப் போனார்கள். | சங் 119:119 ஏசா 1:22 எரே 6:28-30 |
| 19 | ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்களெல்லாரும் களிம்பாய்ப் போனபடியினால், இதோ, நான் உங்களை எருசலேமுக்குள் சேர்ப்பேன். | எசே 11:7 எசே 24:3-6 மீகா 4:12 மத் 13:30 மத் 13:40-42 |
| 20 | வெள்ளியையும், பித்தளையையும், இரும்பையும், ஈயத்தையும், தகரத்தையும் அக்கினியில் ஊதி உருக்குவதற்காகக் குகைக்குள் சேர்க்கிறதுபோல, நான் என் கோபத்தினாலும் என் உக்கிரத்தினாலும் உங்களைச் சேர்த்துவைத்து உருக்குவேன். | எசே 22:21 எசே 21:31 எசே 21:32 ஏசா 54:16 |
| 21 | நான் உங்களைக் கூட்டி, என் கோபமாகிய அக்கினியை உங்கள்மேல் ஊதுவேன்; அதற்குள்ளே நீங்கள் உருகுவீர்கள். | எசே 15:6 எசே 15:7 எசே 20:47 எசே 20:48 எசே 22:20-22 உபா 4:24 உபா 29:20 உபா 32:22 2இரா 25:9 சங் 21:9 சங் 50:3 ஏசா 30:33 எரே 21:12 நாகூ 1:6 செப் 1:18 |
| 22 | குகைக்குள் வெள்ளி உருகுமாப்போல, நீங்கள் அதற்குள் உருகுவீர்கள்; அப்பொழுது கர்த்தராகிய நான் என் உக்கிரத்தை உங்கள்மேல் ஊற்றிவிட்டேன் என்று அறிந்து கொள்வீர்கள் என்றார். | எசே 22:16 எசே 22:31 எசே 20:8 எசே 20:33 ஓசி 5:10 வெளிப் 16:1 |
| 23 | கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 24 | மனுபுத்திரனே, நீ தேசத்தைப்பார்த்து: நீ சுத்தம் பண்ணப்படாத தேசம், கோபத்தின் காலத்தில் மழை பெய்யாத தேசம் என்று அதற்குச் சொல்லு. | 2நாளா 28:22 2நாளா 36:14-16 ஏசா 1:5 ஏசா 9:13 எரே 2:30 எரே 5:3 எரே 6:29 எரே 44:16-19 செப் 3:2 |
| 25 | அதிலுள்ள தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடுபண்ணுகிறார்கள்; கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் பட்சிக்கிறார்கள்; திரவியத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்; அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள். | எசே 13:10-16 1இரா 22:11-13 1இரா 22:23-13 எரே 5:30 எரே 5:31 எரே 6:13 புலம் 2:14 புலம் 4:13 2பேது 2:1-3 |
| 26 | அதின்ஆசாரியர்கள் என் வேதத்துக்கு அநியாயஞ்செய்து, என் பரிசுத்த வஸ்துக்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறார்கள்; பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணாமலும், அசுத்தமுள்ளதற்கும் அசுத்தமில்லாததற்கும் உண்டான வேற்றுமையைக் காண்பியாமலும் இருந்து, என் ஓய்வுநாட்களுக்குத் தங்கள் கண்களை மூடிக்கொள்ளுகிறார்கள்; அவர்கள் நடுவிலே நான் கனவீனம் பண்ணப்படுகிறேன். | 1சாமு 2:12-17 1சாமு 2:22-17 எரே 2:8 எரே 2:26 எரே 2:27 புலம் 4:13 மீகா 3:11 மீகா 3:12 செப் 3:3 செப் 3:4 மல்கி 1:6-8 மல்கி 2:1-3 மல்கி 2:8-3 |
| 27 | அதின் நடுவில் இருக்கிற அதின் பிரபுக்கள் இரை கவ்வுகிற ஓநாய்களைப்போல் இருக்கிறார்கள்; அநியாயமாய்ப் பொருள் சம்பாதிக்கிறதற்கு இரத்தஞ்சிந்துகிறார்கள், ஆத்துமாக்களைக் கொள்ளையிடுகிறார்கள். | எசே 22:6 எசே 19:3-6 எசே 22:6 எசே 45:9 ஏசா 1:23 ஓசி 7:1-7 மீகா 3:2 மீகா 3:3 மீகா 3:9-11 மீகா 7:8 செப் 3:3 யாக் 2:6 யாக் 2:7 |
| 28 | அதின் தீர்க்கதரிசிகள் அபத்தமானதைத் தரிசித்து, பொய்ச்சாஸ்திரத்தை அவர்களுக்குச் சொல்லி, கர்த்தர் உரைக்காதிருந்தும், கர்த்தராகிய ஆண்டவர் உரைத்தாரென்று சொல்லி, அவர்களுக்குச் சாரமற்ற சாந்தைப் பூசுகிறார்கள். | எசே 22:25 எசே 13:10-16 ஏசா 30:10 எரே 8:10 எரே 8:11 |
| 29 | தேசத்தின் ஜனங்கள் இடுக்கண் செய்து, கொள்ளையடித்து, சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, அந்நியனை அநியாயமாய்த் துன்பப்படுத்துகிறார்கள். | எசே 22:7 எசே 18:12 ஏசா 5:7 ஏசா 10:2 ஏசா 59:3-7 எரே 5:26-28 எரே 5:31-28 எரே 6:13 ஆமோ 3:10 மீகா 2:2 மீகா 3:3 யாக் 5:4 |
| 30 | நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன். | ஏசா 59:16 ஏசா 63:5 எரே 5:1 |
| 31 | ஆகையால், நான் அவர்கள்மேல் என் கோபத்தை ஊற்றி, என் மூர்க்கத்தின் அக்கினியால் அவர்களை நிர்மூலமாக்கி, அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்றார். | எசே 22:21 எசே 22:22 |