| 1 | கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 2 | மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாருக்கு ஒரு விடுகதையையும் உவமையையும்கூறி, சொல்லவேண்டியது என்னவென்றால்: |
| 3 | கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், பெரிய செட்டைகளையும் நீளமான இறகுகளையும் உடையதும், பலவருணமான இறகுகளால் நிறைந்ததுமாகிய ஒரு பெரிய கழுகு லீபனோனில் வந்து, ஒரு கேதுருவின் நுனிக்கிளையைப் பிடித்து, | எசே 17:7 எசே 17:12-21 உபா 28:49 எரே 4:13 எரே 48:40 எரே 49:16 புலம் 4:19 ஓசி 8:1 மத் 24:28 |
| 4 | அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளைக்கொய்து, அதை வர்த்தக தேசத்துக்குக் கொண்டுபோய், அதை வர்த்தகருடைய நகரத்திலே வைத்தது; | ஏசா 43:14 ஏசா 47:15 எரே 51:13 வெளிப் 18:3 வெளிப் 18:11-19 |
| 5 | தேசத்தின் விதையில் ஒன்றை எடுத்து, அதைப் பயிர் நிலத்திலே போட்டு, அதை எடுத்து, மிகுந்த தண்ணீர் ஓரத்திலே பத்திரமாய் நட்டது. | எசே 17:13 2இரா 24:17 எரே 37:1 |
| 6 | அது துளிர்த்து, படர்ந்து, தாழ்ந்த அடிமரமுள்ள திராட்சச்செடியாயிற்று; அதின் கொடிகள் அந்த கழுகுக்கு நேராகவும், அதின் வேர்கள் அதின் கீழாகவும் இருந்தன; இவ்விதமாய் அது திராட்சச் செடியாகி, கிளைகளை வீசி, கொப்புகளைவிட்டது. | எசே 17:14 நீதி 16:18 நீதி 16:19 |
| 7 | அன்றியும் பெரிய செட்டைகளையும் திரளான இறகுகளையும் உடைய வேறொரு பெரிய கழுகு இருந்தது; இதோ, அது தன் நடவாகிய பாத்திகளிலிருந்து அதற்குத் தண்ணீர் பாய்ச்சும்படி இந்த திராட்சச்செடி அதற்கு நேராகத் தன் வேர்களை விட்டு, அதற்கு நேராகத் தன் கொடிகளை வீசினது. | எசே 17:15 2இரா 24:20 2நாளா 26:13 எரே 37:5-7 |
| 8 | கொப்புகளை விடுகிறதற்கும், கனியைத் தருகிறதற்கும், மகிமையான திராட்சச்செடியாகிறதற்கும், இது மிகுந்த தண்ணீர்களின் ஓரமாகிய நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது. | எசே 17:5 எசே 17:6 |
| 9 | இது செழிக்குமா? இது பட்டுப்போகத்தக்கதாய் ஒருவன் இதின் வேர்களைப் பிடுங்காமலும், இதின் கனியை வெட்டாமலும் இருப்பானோ? துளிர்த்த எல்லா இலைகளோடும் இது பட்டுப்போகும்; இதை வேரோடே பிடுங்கும்படி ஒருவன் பலத்த புயத்தோடும் திரண்ட ஜனத்தோடும் வரத்தேவையில்லை. | எசே 17:10 எசே 17:15-17 எண் 14:41 2நாளா 13:12 2நாளா 20:20 ஏசா 8:9 ஏசா 8:10 ஏசா 30:1-7 ஏசா 31:1-3 எரே 32:5 |
| 10 | இதோ, நடப்பட்ட இது செழிப்பாயிருக்குமோ? கொண்டல்காற்று இதின் பேரில் படும்போது இது வாடி உலர்ந்து போகாதோ? இது நடப்பட்ட பாத்திகளிலே வாடிப்போகுமென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார். | எசே 19:12-14 ஓசி 12:1 ஓசி 13:15 மத் 21:19 மாற் 11:20 யோவா 15:6 யூதா 1:12 |
| 11 | பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: |
| 12 | இப்போதும் இவைகளின் தாற்பரியம் தெரியுமா என்று நீ கலகவீட்டாரைக் கேட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால், இதோ, பாபிலோன் ராஜா எருசலேமுக்கு வந்து, அதின் ராஜாவையும் அதின் பிரபுக்களையும் பிடித்து, அவர்களைத் தன்னிடமாகப் பாபிலோனுக்குக் கொண்டுபோகும்போது, | எசே 2:5 எசே 2:8 எசே 3:9 எசே 12:9 ஏசா 1:2 |
| 13 | அவன் ராஜவம்சத்திலே ஒருவனைத் தெரிந்தெடுத்து, அவனோடே உடன்படிக்கைபண்ணி, | எசே 17:5 2இரா 24:17 எரே 37:1 |
| 14 | ராஜ்யம் தன்னை உயர்த்தாமல் தாழ்ந்திருக்கும்படிக்கும், தன் உடன்படிக்கையை அவன் கைக்கொள்ளுகிறதினால் அது நிலைநிற்கும்படிக்கும், அவனை ஆணைப்பிரமாணத்துக்கு உட்படுத்தி, தேசத்தில் பலசாலிகளைப் பிடித்துக்கொண்டுபோனானே. | எசே 17:6 எசே 29:14 உபா 28:43 1சாமு 2:7 1சாமு 2:30 நெகே 9:36 நெகே 9:37 புலம் 5:10 மத் 22:17-21 |
| 15 | இவன் அவனுக்கு விரோதமாய்க் கலகஞ்செய்து, தனக்குக் குதிரைகளையும் அநேகம் ஆட்களையும் அனுப்பவேண்டுமென்று தன் ஸ்தானாதிபதிகளை எகிப்துக்கு அனுப்பினான்; இப்படிப்பட்டவனுக்கு வாய்க்குமோ? இப்படிச் செய்கிறவன் தப்பித்துக்கொள்வானோ? உடன்படிக்கையை முறித்தவன் தப்பித்துக்கொள்வானோ? | எசே 17:7 2இரா 24:20 2நாளா 36:13 எரே 52:3 |
| 16 | தன்னை ராஜாவாக ஏற்படுத்திய ராஜாவினுடைய ஆணையை அசட்டைபண்ணி, அவனுடைய உடன்படிக்கையை முறித்துப்போட்டவன், அந்த ராஜாவினுடைய ஸ்தானமாகிய பாபிலோன் நடுவிலே அவனண்டையில் இருந்து மரணமடைவானென்று என் ஜீவனைக்கொண்டுசொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். | எசே 17:18 எசே 17:19 எசே 16:59 யாத் 20:7 எண் 30:2 யோசு 9:20 2சாமு 21:2 சங் 15:4 யாத் 8:2 ஓசி 10:4 சகரி 5:3 சகரி 5:4 மல்கி 3:5 ரோம 1:31 1தீமோ 1:10 2தீமோ 3:3 |
| 17 | அவன் அநேகம் ஜனங்களை நாசம்பண்ணும்படி அணைபோட்டு, கொத்தளங்களைக் கட்டும்போது, பார்வோன் பெரிய சேனையோடும், திரளான கூட்டத்தோடும் வந்து இவனுக்காக யுத்தத்தில் உதவமாட்டான். | எசே 29:6 எசே 29:7 ஏசா 36:6 எரே 37:7 புலம் 4:17 |
| 18 | இதோ, இவன் கையடித்துக் கொடுத்திருந்தும் உடன்படிக்கையை முறித்துப்போட்டு, ஆணையை அசட்டைபண்ணினான்; இப்படியெல்லாம் செய்தவன் தப்புவதில்லை. | 1நாளா 29:24 2நாளா 30:8 புலம் 5:6 |
| 19 | அதினிமித்தம் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் என் ஆணையை அசட்டைபண்ணினதையும், என் உடன்படிக்கையை முறித்துப்போட்டதையும், நான் அவனுடைய தலையின்மேல் வரப்பண்ணுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். | எசே 21:23-27 உபா 5:11 எரே 5:2 எரே 5:9 எரே 7:9-15 |
| 20 | அவன் என்னுடைய கண்ணியில் அகப்படும்படிக்கு, நான் என் வலையை அவன்மேல் வீசி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் எனக்கு விரோதமாய்ப்பண்ணின துரோகத்தினிமித்தம் அங்கே அவனை நியாயம் விசாரிப்பேன். | எசே 12:13 எசே 32:3 யோசு 10:16-18 2சாமு 18:9 2நாளா 33:11 யோபு 10:16 பிரச 9:12 எரே 39:5-7 புலம் 1:13 புலம் 4:20 ஓசி 7:12 லூக் 21:35 |
| 21 | அவனோடேகூட ஓடிப்போகிற யாவரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் பட்டயத்தால் விழுவார்கள்; மீதியானவர்களோ சகல திசைகளிலும் சிதறடிக்கப்படுவார்கள்; அப்பொழுது கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்று அறிந்துகொள்வீர்கள். | எசே 5:12 எசே 12:14 2இரா 25:5 2இரா 25:11 எரே 48:44 எரே 52:8 ஆமோ 9:1 ஆமோ 9:9 ஆமோ 9:10 |
| 22 | கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உயர்ந்த கேதுருவின் நுனிக்கிளைகளில் ஒன்றை எடுத்து, அதை நடுவேன்; அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளில் இளசாயிருக்கிற ஒன்றைக்கொய்து, அதை உயரமும் உன்னதமுமான ஒரு பர்வதத்தின்மேல் நாட்டுவேன். | எசே 34:29 சங் 80:15 ஏசா 4:2 ஏசா 11:1-5 எரே 23:5 எரே 23:6 எரே 33:15 எரே 33:16 சகரி 3:8 சகரி 4:12-14 சகரி 6:12 சகரி 6:13 |
| 23 | இஸ்ரவேலின் உயரமான பர்வதத்திலே அதை நாட்டுவேன்; அது கொப்புகளைவிட்டு, கனிதந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே சகலவித பட்சிஜாதிகளும் தங்கி, அதின் கிளைகளின் நிழலிலே தாபரிக்கும். | சங் 92:12 சங் 92:13 ஏசா 27:6 யோவா 12:24 யோவா 15:5-8 |
| 24 | அப்படியே கர்த்தராகிய நான் உயர்ந்த விருட்சத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த விருட்சத்தை உயர்த்தினேன் என்றும், நான் பச்சையான விருட்சத்தைப் பட்டுப்போகப்பண்ணி, பட்டுப்போன விருட்சத்தைத் தழைக்கப்பண்ணினேன் என்றும் வெளியின் விருட்சங்களுக்கு எல்லாம் தெரியவரும்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றினேன் என்று உரைத்தார் என்று சொல் என்றார். | சங் 96:11 சங் 96:12 ஏசா 55:12 ஏசா 55:13 |