| 1 | கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: | எசே 8:9-17 |
| 2 | மனுபுத்திரனே, நீ எருசலேமின் அருவருப்புகளை அதற்கு அறிவித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: | எசே 20:4 எசே 22:2 எசே 23:36 எசே 33:7-9 ஏசா 58:1 ஓசி 8:1 |
| 3 | கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமுக்குச் சொல்லுகிறார், கானான் தேசமே உன் உற்பத்திக்கும் உன் பிறப்புக்கும் இடம், உன் தகப்பன் எமோரியன், உன் தாய் ஏத்தித்தி. | எசே 16:45 எசே 21:30 ஆதி 11:25 ஆதி 11:29 யோசு 24:14 நெகே 9:7 ஏசா 1:10 ஏசா 51:1 ஏசா 51:2 மத் 3:7 மத் 11:24 லூக் 3:7 யோவா 8:44 எபே 2:3 1யோவா 3:10 |
| 4 | உன் பிறப்பின் வர்த்தமானம் என்னவென்றால், நீ பிறந்த நாளிலே உன் தொப்புள் அறுக்கப்படவுமில்லை; நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை; உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை; துணிகளில் சுற்றப்படவுமில்லை. | எசே 20:8 எசே 20:13 ஆதி 15:13 யாத் 1:11-14 யாத் 2:23 யாத் 2:24 யாத் 5:16-21 உபா 5:6 உபா 15:15 யோசு 24:2 நெகே 9:7-9 ஓசி 2:3 அப் 7:6 அப் 7:7 |
| 5 | உனக்காகப் பரிதபித்து, இவைகளில் ஒன்றையாகிலும் உனக்குச் செய்ய ஒரு கண்ணும் உன்பேரில் இரக்கமாயிருந்ததுமில்லை; நீ பிறந்த நாளில் நீ அருவருக்கப்பட்டதினால் வெளியில் எறிந்துவிடப்பட்டாய். | எசே 2:6 ஏசா 49:15 புலம் 2:11 புலம் 2:19 புலம் 4:3 புலம் 4:10 |
| 6 | நான் உன் அருகே கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்றேன்; ஆம், உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன். | யாத் 2:24 யாத் 2:25 யாத் 3:7 யாத் 3:8 அப் 7:34 |
| 7 | உன்னை வயலின் பயிரைப்போல அநேகமாயிரமாய்ப் பெருகும்படி வைத்தேன்; நீ வளர்ந்து பெரியவளாகி, மகா செளந்தரியவதியானாய்; உன் ஸ்தனங்கள் எழும்பின, உன் மயிர் வளர்ந்தது; ஆனாலும், நீ நிர்வாணமும் அம்மணமுமாயிருந்தாய். | ஆதி 22:17 யாத் 1:7 யாத் 12:37 அப் 7:17 |
| 8 | நான் உன் அருகே கடந்துபோனபோது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து,, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கைபண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய். | எசே 16:6 உபா 7:6-8 ரூத் 3:9 1சாமு 12:22 ஏசா 41:8 ஏசா 41:9 ஏசா 43:4 ஏசா 63:7-9 எரே 2:2 எரே 2:3 எரே 31:3 ஓசி 11:1 மல்கி 1:2 ரோம 5:8 ரோம 9:10-13 |
| 9 | நான் உன்னை ஜலத்தினால் முழுக்காட்டி, உன்னை இரத்தமற ஸ்நானம்பண்ணுவித்து, உனக்கு எண்ணெய் பூசி, | எசே 16:4 எசே 36:25 சங் 51:7 ஏசா 4:4 யோவா 13:8-10 1கொரி 6:11 1கொரி 10:2 எபிரெ 9:10-14 1யோவா 5:8 வெளிப் 1:5 வெளிப் 1:6 |
| 10 | சித்திரத்தையலாடையை உனக்கு உடுத்தி, சாயந்தீர்ந்த பாதரட்சைகளை உனக்குத் தரித்து, கட்ட மெல்லிய புடவையையும், மூடிக்கொள்ளப் பட்டுச்சால்வையையும் உனக்குக் கொடுத்து, | எசே 16:7 சங் 45:13 சங் 45:14 ஏசா 61:3 ஏசா 61:10 லூக் 15:22 வெளிப் 21:2 |
| 11 | உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன் கைகளிலே கடகங்களையும், உன் கழுத்திலே சரப்பணியையும் போட்டு, | ஆதி 24:22 ஆதி 24:47 ஆதி 24:53 |
| 12 | உன் நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன் காதுகளில் காதணியையும், உன் தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் தரித்தேன். |
| 13 | இவ்விதமாய்ப் பொன்னினாலும் வெள்ளியினாலும் நீ அலங்கரிக்கப்பட்டாய்; உன் உடுப்பு மெல்லிய புடவையும் பட்டும் சித்திரத்தையலாடையுமாயிருந்தது; மெல்லிய மாவையும் தேனையும் நெய்யையும் சாப்பிட்டாய்; நீ மிகவும் அழகுள்ளவளாகி, ராஜ்யத்தைச் சுதந்தரிக்கும் சிலாக்கியத்தையும் பெற்றாய். | எசே 16:19 உபா 8:8 உபா 32:13 உபா 32:14 சங் 45:13 சங் 45:14 சங் 81:16 சங் 147:14 ஓசி 2:5 |
| 14 | உன் அழகினாலே உன் கீர்த்தி புறஜாதிகளுக்குள்ளே பிரசித்தமாயிற்று; நான் உன்மேல் வைத்த என் மகிமையினாலே அது குறைவற்றதாய் இருந்ததென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். | உபா 4:6-8 உபா 4:32-38 யோசு 2:9-11 யோசு 9:6-9 1இரா 10:1-13 1இரா 10:24-13 2நாளா 2:11 2நாளா 2:12 2நாளா 9:23 புலம் 2:15 |
| 15 | நீயோவென்றால் உன் அழகை நம்பி, உன் கீர்த்தியினால் சோரமார்க்கமாய் நடந்து, வழிப்போக்கரில் உனக்கு நேரபட்ட யாவரோடும் வேசித்தனம்பண்ணி, | எசே 33:13 உபா 32:15 ஏசா 48:1 எரே 7:4 மீகா 3:11 செப் 3:11 மத் 3:9 |
| 16 | உன் வஸ்திரங்களில் சிலவற்றை எடுத்து, பலவருணச்சோடிப்பான மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்பண்ணினாய்; அப்படிக்கொத்த காரியங்கள் ஒருக்காலும் சம்பவித்ததுமில்லை, சம்விப்பதுமில்லை. | எசே 7:20 2இரா 23:7 2நாளா 28:24 ஓசி 2:8 |
| 17 | நான் உனக்குக் கொடுத்த என் பொன்னும் என் வெள்ளியுமான உன் சிங்கார ஆபரணங்களை நீ எடுத்து, உனக்கு ஆண்சுரூபங்களை உண்டாக்கி, அவைகளோடே வேசித்தனம்பண்ணி, | எசே 7:19 எசே 23:14-21 யாத் 32:1-4 ஓசி 2:13 ஓசி 10:1 |
| 18 | உன் சித்திரத்தையலாடைகளை எடுத்து, அவைகளை மூடி, என் எண்ணெயையும் என் தூபவர்க்கத்தையும் அவைகளின்முன் படைத்து, |
| 19 | நான் உனக்குக் கொடுத்த என் அப்பத்தையும், நீ சாப்பிடும்படி உனக்குக் கொடுத்த மெல்லிய மாவையும் நெய்யையும் தேனையும் நீ அவைகளின்முன் சுகந்தவாசனையாகப் படைத்தாய்; காரியம் இப்படி ஆயிற்றென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். | எசே 16:13 உபா 32:14-17 ஓசி 2:8-13 |
| 20 | நீ எனக்குப் பெற்ற உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் எடுத்து, அவர்களை அவைகளுக்கு இரையாகப் பலியிட்டாய். | எசே 16:21 எசே 23:4 ஆதி 17:7 யாத் 13:2 யாத் 13:12 உபா 29:11 உபா 29:12 |
| 21 | நீ செய்த வேசித்தனங்கள் போதாதென்று, நீ என் பிள்ளைகளை அவைகளுக்குத் தீக்கடக்கப்பண்ண ஒப்புக்கொடுத்து, அவர்களைக் கொலைசெய்தாய். | சங் 106:37 |
| 22 | நீ உன் எல்லா அருவருப்புகளிலும் வேசித்தனங்களிலும் நடக்கும்போது, நிர்வாணமும் அம்மணமுமாயிருந்ததும், உன் இரத்தத்திலே மிதிக்கப்பட ஏதுவாய்க் கிடந்ததுமான உன் சிறுவயதின் நாட்களை நினையாமற்போனாய். | எசே 16:3-7 எசே 16:43-7 எசே 16:60-63 எரே 2:2 ஓசி 2:3 ஓசி 11:1 |
| 23 | ஐயோ! உனக்கு ஐயோ! என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ செய்த பொல்லாப்புகளெல்லாம் தவிர, | எசே 2:10 எசே 13:3 எசே 13:18 எசே 24:6 எரே 13:27 செப் 3:1 மத் 11:21 மத் 23:13-29 வெளிப் 8:13 வெளிப் 12:12 |
| 24 | நீ உனக்கு மண்டபங்களைக் கட்டி, உனக்குச் சகல வீதிகளிலும் உயர்ந்த மேடைகளை உண்டுபண்ணினாய். | எசே 16:31 எசே 16:39 எசே 20:28 எசே 20:29 2இரா 21:3-7 2இரா 23:5-7 2இரா 23:11-7 2இரா 23:12-7 2நாளா 33:3-7 |
| 25 | நீ சகல வழிமுகனையிலும் உன் உயர்ந்த மேடைகளைக் கட்டி, உன் அழகை அருவருப்பாக்கி, வழிப்போக்கர் யாவருக்கும் உன் கால்களை விரித்து, உன் வேசித்தனங்களைத் திரளாய்ப் பெருகப்பண்ணி, | எசே 16:31 ஆதி 38:14 ஆதி 38:21 நீதி 9:14 நீதி 9:15 ஏசா 3:9 எரே 2:23 எரே 2:24 எரே 3:2 எரே 6:15 |
| 26 | சதை பெருத்த உன் அயல் தேசத்தாராகிய எகிப்திய புத்திரரோடே வேசித்தனம்பண்ணி, எனக்குக் கோபம் உண்டாக்கும்படி உன் வேசித்தனங்களைப் பெருகப்பண்ணினாய். | எசே 8:10 எசே 8:14 எசே 20:7 எசே 20:8 எசே 23:3 எசே 23:8 எசே 23:19-21 யாத் 32:4 உபா 29:16 உபா 29:17 யோசு 24:14 ஏசா 30:21 |
| 27 | ஆதலால், இதோ, நான் என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உனக்கு நியமித்த போஜனத்தைக் குறுக்கி, உன் முறைகேடான மார்க்கத்தைக்குறித்து வெட்கப்பட்ட உன் பகையாளிகளாகிய பெலிஸ்தருடைய குமாரத்திகளின் இச்சைக்கு உன்னை ஒப்புக்கொடுத்தேன். | எசே 14:9 ஏசா 5:25 ஏசா 9:12 ஏசா 9:17 |
| 28 | நீ திருப்தியடையாததினால் அசீரியபுத்திரரோடும் வேசித்தனம்பண்ணினாய்; அவர்களோடே வேசித்தனம்பண்ணியும் நீ திருப்தியடையவில்லை. | எசே 23:5-9 எசே 23:12-21 நியா 10:6 2இரா 16:7 2இரா 16:10-18 2இரா 21:11 2நாளா 28:23 எரே 2:18 எரே 2:36 ஓசி 10:6 |
| 29 | நீ கானான் தேசத்திலே செய்த வேசித்தனத்தை கல்தேயர்மட்டும் எட்டச் செய்தாய்; அதினாலும் நீ திருப்தியடையாமற்போனாய். | எசே 13:14-23 நியா 2:12-19 2இரா 21:9 |
| 30 | வெட்கங்கெட்ட வேசியின் கிரியைகளாகிய இவைகளையெல்லாம் நீ செய்து, | நீதி 9:13 ஏசா 1:3 எரே 2:12 எரே 2:13 எரே 4:22 |
| 31 | சகல வழிமுகனையிலும் உன் மண்டபங்களைக் கட்டி, சகல வீதிகளிலும் உன் மேடைகளை உண்டாக்கினபடியால், உன் இருதயம் எவ்வளவாய்க் களைத்துப்போயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ பணையத்தை அலட்சியம்பண்ணுகிறதினால், நீ வேசியைப்போல இராமல், | எசே 16:24 எசே 16:39 |
| 32 | தன் புருஷனுக்குப்பதிலாக அந்நியரைச் சேர்த்துக்கொள்ளுகிற விபசார ஸ்திரீயைப்போல இருக்கிறாய். | எசே 16:8 எசே 23:37 எசே 23:45 எரே 2:25 எரே 2:28 எரே 3:1 எரே 3:8 எரே 3:9 எரே 3:20 ஓசி 2:2 ஓசி 3:1 2கொரி 11:2 2கொரி 11:3 |
| 33 | எல்லா வேசிகளுக்கும் பணையங்கொடுக்கிறார்கள்; நீயோ உன் நேசர்கள் சுற்றுப்புறங்களிலிருந்து உன்னிடத்தில் வேசித்தனஞ்செய்ய வரும்படி அவர்களுக்கெல்லாம் நீயே பணையங்கொடுத்து, அவர்களுக்கு வெகுமதிகளைத் தருகிறாய். | ஆதி 38:16-18 உபா 23:17 உபா 23:18 ஓசி 2:12 யோவே 3:3 மீகா 1:7 லூக் 15:30 |
| 34 | இவ்விதமாய் உன் வேசித்தனங்களுக்கும் வேறே ஸ்திரீகளின் வேசித்தனங்களுக்கும் வித்தியாசமுண்டு; வேசித்தனம்பண்ண அவர்கள் உன்னைப் பின்செல்லமாட்டார்கள்; பணையம் உனக்குக் கொடுக்கப்படாமல் நீயே பணையம் கொடுக்கிறபடியால் நீ செய்வது விபரீதம். |
| 35 | ஆகையால், வேசியே, கர்த்தருடைய வார்த்தையைக் கேள். | ஏசா 1:21 ஏசா 23:15 ஏசா 23:16 எரே 3:1 எரே 3:6-8 ஓசி 2:5 நாகூ 3:4 யோவா 4:10 யோவா 4:18 வெளிப் 17:5 |
| 36 | கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் வேசித்தனத்தின் அசுத்தம் பாய்ந்தபடியினாலும், நீ உன் காமவிகாரிகளோடும் அருவருப்பாகிய உன் நரகலான விக்கிரகங்களோடும் வேசித்தனம்பண்ணி, இவைகளுக்கு உன் பிள்ளைகளின் இரத்தத்தைப் படைத்ததினால் உன் நிர்வாணம் திறக்கப்பட்டபடியினாலும், | எசே 16:15-22 எசே 22:15 எசே 23:8 எசே 24:13 எசே 36:25 புலம் 1:9 செப் 3:1 |
| 37 | இதோ, நீ சம்போகம்பண்ணின உன் எல்லாக் காமவிகாரிகளையும், நீ நேசித்த யாவரையும், நீ பகைத்திருக்கிற அனைவரோடும் நான் கூடிவரச்செய்து, சுற்றிலுமிருந்து அவர்களை உனக்கு விரோதமாகச் சேர்த்து, அவர்கள் உன் நிர்வாணத்தையெல்லாம் காணும்படி உன் நிர்வாணத்தை அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்து, | எசே 23:9 எசே 23:10 எசே 23:22-30 எரே 4:30 எரே 13:22 எரே 13:26 எரே 22:20 புலம் 1:8 புலம் 1:19 ஓசி 2:3 ஓசி 2:10 ஓசி 8:10 நாகூ 3:5 நாகூ 3:6 வெளிப் 17:16 |
| 38 | விபசாரிகளையும் இரத்தஞ்சிந்தினவர்களையும் நியாயந்தீர்க்கிறபடியே உன்னை நியாயந்தீர்த்து, உக்கிரத்தோடும் எரிச்சலோடும் இரத்தப்பழியை உன்பேரில் சுமத்தி, | எசே 16:40 எசே 23:45-47 ஆதி 38:11 ஆதி 38:24 லேவி 20:10 உபா 22:22-24 மத் 1:18 மத் 1:19 யோவா 8:3-5 |
| 39 | உன்னை அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் உன் மண்டபங்களை இடித்து, உன் மேடைகளைத் தரையாக்கிப்போட்டு, உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்கார ஆபரணங்களை எடுத்துக்கொண்டு, உன்னை அம்மணமும் நிர்வாணமுமாக விட்டுப்போய், | எசே 16:24 எசே 16:25 எசே 16:31 எசே 7:22-24 ஏசா 27:9 |
| 40 | உனக்கு விரோதமாக ஒரு கூட்டத்தைக் கொண்டுவந்து, உன்னைக் கல்லெறிந்து, உன்னைத் தங்கள் பட்டயங்களால் குத்திபோட்டு, | ஆபகூ 1:6-10 யோவா 8:5-7 |
| 41 | உன் வீடுகளை அக்கினியால் சுட்டெரித்து, அநேக ஸ்திரீகளின் கண்களுக்கு முன்பாக உன்னில் நியாயத்தீர்ப்புகளைச் செய்வார்கள்; உன் வேசித்தனத்தை ஒழியப்பண்ணுவேன்; நீ இனிப் பணையங்கொடுப்பதில்லை. | உபா 13:16 2இரா 25:9 எரே 39:8 எரே 52:13 மீகா 3:12 |
| 42 | இவ்விதமாய் என் எரிச்சல் உன்னை விட்டு நீங்கும்படி, நான் என் உக்கிரத்தை உன்னில் ஆறப்பண்ணி, இனி கோபமாயிராமல் அமருவேன். | எசே 5:13 எசே 21:17 2சாமு 21:14 ஏசா 1:24 சகரி 6:8 |
| 43 | நீ உன் இளவயதின் நாட்களை நினையாமல், இவைகளெல்லாவற்றினாலும் எனக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், இதோ, நான் உன் வழியின் பலனை உன் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அதினாலே இனி உன் எல்லா அருவருப்புகளினாலும் இப்படிப்பட்ட முறைகேடான காரியத்தைச் செய்யமாட்டாய். | எசே 16:22 சங் 78:42 சங் 106:13 எரே 2:32 |
| 44 | இதோ, பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லாரும்: தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்துப் பழமொழி சொல்லுவார்கள். | எசே 18:2 எசே 18:3 1சாமு 24:13 |
| 45 | நீ, தன் புருஷனையும் தன் பிள்ளைகளையும் அருவருத்த உன் தாயின் மகள்; நீ, தங்கள் புருஷரையும் தங்கள் பிள்ளைகளையும் அருவருத்த உன் சகோதரிகளின் சகோதரி; உங்கள் தாய் ஏத்தித்தி; உங்கள் தகப்பன் எமோரியன். | எசே 16:8 எசே 16:15 எசே 16:20 எசே 16:21 எசே 23:37-39 உபா 5:9 உபா 12:31 ஏசா 1:4 சகரி 11:8 ரோம 1:30 ரோம 1:31 |
| 46 | உன் இடதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சமாரியா உன் தமக்கை; உன் வலதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சோதோம் உன் தங்கை. | எசே 16:51 எசே 23:4 எசே 23:11 எசே 23:31-33 எரே 3:8-11 மீகா 1:5 |
| 47 | ஆகிலும் நீ அவர்களுடைய மார்க்கங்களிலே நடவாமலும், அவர்களுடைய அருவருப்புகளின்படி செய்யாமலும், அது மகா அற்பகாரியம் என்கிறதுபோல நீ உன் எல்லா வழிகளிலேயும் அவர்களைப் பார்க்கிலும் கேடாய் நடந்தாய். | எசே 8:17 1இரா 16:31 |
| 48 | நீயும் உன் குமாரத்திகளும் செய்ததுபோல, உன் சகோதரியாகிய சோதோமும் அவளுடைய குமாரத்திகளும் செய்யவில்லை என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். | மத் 10:15 மத் 11:24 மாற் 6:11 லூக் 10:12 அப் 7:52 |
| 49 | இதோ, கர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை. | எசே 28:2 எசே 28:9 எசே 28:17 எசே 29:3 ஆதி 19:9 சங் 138:6 நீதி 16:5 நீதி 16:18 நீதி 18:12 நீதி 21:4 ஏசா 3:9 ஏசா 16:6 தானி 4:30 தானி 4:37 தானி 5:23 ஒபதி 1:3 1பேது 5:5 |
| 50 | அவர்கள் தங்களை உயர்த்தி, என் முகத்துக்கு முன்பாக அருவருப்பானதைச் செய்தார்கள்; அதை நான் கண்டபோது, அவர்களை ஒழித்துவிட்டேன். | ஆதி 13:13 ஆதி 18:20 ஆதி 19:5 லேவி 18:22 உபா 23:17 2இரா 23:7 நீதி 16:18 நீதி 18:12 ரோம 1:26 ரோம 1:27 யூதா 1:7 |
| 51 | நீ செய்த பாவங்களில் அரைவாசியும் சமாரியா செய்யவில்லை; நீ உன் சகோதரிகளைப்பார்க்கிலும் உன் பாவங்களைப் பெருகப்பண்ணி, நீ செய்த உன் எல்லா அருவருப்புகளினாலும் அவர்களை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணினாய். | லூக் 12:47 லூக் 12:48 ரோம 3:9-20 |
| 52 | இப்போதும் உன் சகோதரிகளைக் குற்றவாளிகள் என்று தீர்த்த நீ அவர்களைப்பார்க்கிலும் அருவருப்பாகச் செய்த உன் பாவங்களினிமித்தம் உன் இலச்சையைச் சுமந்துகொள்; உன்னைப் பார்க்கிலும் அவர்கள் நீதியுள்ளவர்கள்; உன் சகோதரிகளை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணின நீ வெட்கமடைந்து, உன் இலச்சையைச் சுமந்துகொள். | எசே 16:56 மத் 7:1-5 லூக் 6:37 ரோம 2:1 ரோம 2:10 ரோம 2:26 ரோம 2:27 |
| 53 | நான் சோதோமும் அவள் குமாரத்திகளும் சிறையிருக்கிற அவர்களுடைய சிறையிருப்பையும், சமாரியாவும் அவள் குமாரத்திகளும் சிறையிருக்கிற சிறையிருப்பையும் திருப்பும்போது, அவர்கள் நடுவிலே நீ சிறையிருக்கிற உன்னுடைய சிறையிருப்பையும் திருப்புவேன். | எசே 16:60 எசே 16:61 எசே 29:14 எசே 39:25 யோபு 42:10 சங் 14:7 சங் 85:1 சங் 126:1 ஏசா 1:9 எரே 20:16 எரே 31:23 எரே 48:47 எரே 49:6 எரே 49:39 யோவே 3:1 |
| 54 | அதினால் நீ அவர்களுக்கு ஆறுதலாக இருந்து, உன் இலச்சையைச் சுமந்து, நீ செய்த எல்லாவற்றினாலும் வெட்கமடைவாய். | எசே 16:52 எசே 16:63 எசே 36:31 எசே 36:32 எரே 2:26 |
| 55 | உன் சகோதரிகளாகிய சோதோமும் அவள் குமாரத்திகளும் தங்கள் முந்தின சீருக்குத் திரும்புவார்கள்; சமாரியாவும் அவள் குமாரத்திகளும் தங்கள் முந்தின சீருக்குத் திரும்புவார்கள்; நீயும் உன் குமாரத்திகளும் உங்கள் முந்தின சீருக்குத் திரும்புவீர்கள். | எசே 16:53 எசே 36:11 மல்கி 3:4 |
| 56 | உன்னை வெறுக்கும் சீரியாவின் குமாரத்திகளும், அவளைச் சுற்றிலும் இருக்கிற பெலிஸ்தரின் குமாரத்திகளும் அவமானம்பண்ணினபோது உன் பொல்லாப்பு வெளியாயிற்றே. | ஏசா 65:5 செப் 3:11 லூக் 15:28-30 லூக் 18:11 |
| 57 | அதற்குமுன் உன் கர்வத்தின் நாளிலே உன் சகோதரியாகிய சோதோமின் பெயரை உன் வாயினாலே உச்சரிக்கவுமாட்டாய். | எசே 16:36 எசே 16:37 எசே 21:24 எசே 23:18 எசே 23:19 சங் 50:21 புலம் 4:22 ஓசி 2:10 ஓசி 7:1 1கொரி 4:5 |
| 58 | உன் முறைகேட்டையும் உன் அருவருப்புகளையும் நீ சுமப்பாய் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எசே 23:49 ஆதி 4:13 புலம் 5:7 |
| 59 | கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உடன்படிக்கையை முறித்துப்போடுகிறதினால் ஆணையை அசட்டைபண்ணின நீ செய்ததுபோல நான் உனக்கும் செய்வேன். | எசே 7:4 எசே 7:8 எசே 7:9 எசே 14:4 ஏசா 3:11 எரே 2:19 மத் 7:1 மத் 7:2 ரோம 2:8 ரோம 2:9 |
| 60 | ஆகிலும் உன் இளவயதில் உன்னோடேபண்ணின என் உடன்படிக்கையை நான் நினைத்து, நித்திய உடன்படிக்கையை உனக்கு ஏற்படுத்துவேன். | எசே 16:8 லேவி 26:42 லேவி 26:45 நெகே 1:5-11 சங் 105:8 சங் 106:45 எரே 2:2 எரே 33:20-26 ஓசி 2:15 லூக் 1:72 |
| 61 | அப்பொழுது உன் தமக்கைகளையும் உன் தங்கைகளையும் நீ சேர்த்துக்கொள்ளுகையில், உன் வழிகளை நினைத்து நாணுவாய்; அவர்களை நான் உனக்குக் குமாரத்திகளாகக் கொடுப்பேன்; உன்னுடைய உடன்படிக்கையைப் பார்த்துக் கொடுப்பதில்லை. | எசே 16:63 எசே 20:43 எசே 36:31 எசே 36:32 யோபு 42:5 யோபு 42:6 சங் 119:59 எரே 31:18-20 எரே 50:4 எரே 50:5 |
| 62 | உன்னோடே என் உடன்படிக்கையைப்பண்ணி ஏற்படுத்துவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிவாய். | எசே 16:60 தானி 9:27 ஓசி 2:18-23 |
| 63 | நீ செய்த எல்லாவற்றையும் நான் மன்னித்தருளும்போது, நீ நினைத்து வெட்கி, உன் நாணத்தினால் உன் வாயை இனித் திறக்கமாட்டாதிருப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார். | எசே 16:61 எசே 36:31 எசே 36:32 எஸ்றா 9:6 தானி 9:7 தானி 9:8 |