| 1 | கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 2 | மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைப்பார்க்கிலும் திராட்சச்செடிக்கு மேன்மை என்ன? | உபா 32:32 உபா 32:33 சங் 80:8-16 உன்ன 2:13 உன்ன 2:15 உன்ன 6:11 உன்ன 7:12 உன்ன 8:11 உன்ன 8:12 ஏசா 5:1-7 எரே 2:21 ஓசி 10:1 மத் 21:33-41 மாற் 12:1-9 லூக் 20:9-16 யோவா 15:1-6 |
| 3 | யாதொரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? யாதொரு தட்டுமுட்டைத் தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ? | எரே 24:8 மத் 5:13 மாற் 9:50 லூக் 14:34 லூக் 14:35 |
| 4 | இதோ, அது அக்கினிக்கு இரையாக எறியப்படும்; அதின் இரண்டுமுனைகளையும் அக்கினி எரித்துப்போடும்; அதின் நடுத்துண்டும் வெந்துபோகும்; அது எந்த வேலைக்காவது உதவுமோ? | சங் 80:16 ஏசா 27:11 யோவா 15:6 எபிரெ 6:8 |
| 5 | இதோ, அது வேகாதிருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாதிருக்க, அக்கினி அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவதெப்படி? | எரே 3:16 |
| 6 | ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காட்டுச்செடிகளுக்குள்ளிருக்கிற திராட்சச்செடியை நான் அக்கினிக்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து, | எசே 15:2 எசே 17:3-10 எசே 20:47 எசே 20:48 ஏசா 5:1-6 ஏசா 5:24-6 ஏசா 5:25-6 எரே 4:7 எரே 7:20 எரே 21:7 எரே 24:8-10 எரே 25:9-11 எரே 25:18-11 எரே 44:21-27 சகரி 1:6 |
| 7 | என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு அக்கினியிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே அக்கினி அவர்களைப் பட்சிக்கும்; அப்படியே நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். | எசே 14:8 லேவி 17:10 லேவி 20:3-6 லேவி 26:17 சங் 34:16 எரே 21:10 |
| 8 | அவர்கள் துரோகம்பண்ணினபடியினால், நான் தேசத்தைப் பாழாய்ப் போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். | எசே 6:14 எசே 14:13-21 எசே 33:29 ஏசா 6:11 ஏசா 24:3-12 எரே 25:10 எரே 25:11 செப் 1:18 |