| 1 | கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 2 | மனுபுத்திரனே, நீ கலகவீட்டாரின் நடுவிலே தங்கியிருக்கிறாய்; காணும்படிக்கு அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படிக்கு அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேளாமற்போகிறார்கள்; அவர்கள் கலகவீட்டார். | எசே 2:3 எசே 2:6-8 எசே 3:9 எசே 3:26 எசே 3:27 எசே 17:12 எசே 24:3 எசே 44:6 உபா 9:7 உபா 9:24 உபா 31:27 சங் 78:40 ஏசா 1:23 ஏசா 30:1 ஏசா 30:9 ஏசா 65:2 எரே 4:17 எரே 5:23 எரே 9:1-6 தானி 9:5-9 அப் 7:51 அப் 7:52 |
| 3 | இப்போதும் மனுபுத்திரனே, நீ பரதேசம் போகும்படி பிரயாண சமான்களை ஆயத்தப்படுத்தி, பகற்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாகப் பிரயாணப்படு; உன் ஸ்தலத்தைவிட்டு வேறே ஸ்தலத்துக்கு அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் புறப்பட்டுப்போ; அவர்கள் கலகவீட்டாரானபோதிலும் ஒருவேளை சிந்தித்து உணருவார்கள். | எசே 12:10-12 எசே 4:1-17 எரே 13:1-11 எரே 18:2-12 எரே 19:1-15 எரே 27:2 |
| 4 | சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் உன் சாமான்களை நீ பகற்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாக வெளியே வைத்து, நீ சாயங்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் புறப்படுவாயாக. | எசே 12:12 2இரா 25:4 எரே 39:4 எரே 52:7 |
| 5 | அவர்களுடைய கண்களுக்கு முன்பாக நீ சுவரிலே துவாரமிட்டு, அதின் வழியாய் அவைகளை வெளியே கொண்டுபோவாயாக. | 2இரா 25:4 எரே 39:2-4 |
| 6 | அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன் தோளின்மேல் எடுத்து, மாலைமயங்கும் வேளையிலே வெளியே கொண்டுபோவாயாக; நீ தேசத்தைப் பாராதபடி உன் முகத்தை மூடிக்கொள்; இஸ்ரவேல் வம்சத்தாருக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார். | 1சாமு 28:8 2சாமு 15:30 யோபு 24:17 |
| 7 | எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன்; சிறைப்பட்டுப்போகும்போது சாமான்களைக் கொண்டுபோவதுபோல என் சாமான்களைப் பகற்காலத்தில் வெளியே வைத்தேன்; சாயங்காலத்திலோ கையினால் சுவரிலே துவாரமிட்டு, மாலைமயங்கும் வேளையிலே அவைகளை வெளியே கொண்டுபோய், அவர்கள் கண்களுக்கு முன்பாக அவைகளைத் தோளின்மேல் எடுத்துக்கொண்டுபோனேன். | எசே 2:8 எசே 24:18 எசே 37:7 எசே 37:10 எரே 32:8-12 மத் 21:6 மத் 21:7 மாற் 14:16 யோவா 2:5-8 யோவா 15:14 அப் 26:19 |
| 8 | விடியற்காலத்திலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 9 | மனுபுத்திரனே, கலகவீட்டாராகிய இஸ்ரவேல் வம்சத்தார் உன்னைப் பார்த்து: நீ செய்கிறது என்னவென்று உன்னைக் கேட்டார்கள் அல்லவா? | எசே 12:1-3 எசே 2:5-8 |
| 10 | இது எருசலேமில் இருக்கிற அதிபதியின்மேலும் அதின் நடுவில் இருக்கிற இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரின்மேலும் சுமரும் பாரம் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களிடத்தில் சொல்லு. | 2இரா 9:25 ஏசா 13:1 ஏசா 14:28 மல்கி 1:1 |
| 11 | நீ அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு அடையாளமாயிருக்கிறேன்; நான் செய்வது எப்படியோ, அப்படியே அவர்களுக்கும் செய்யப்படும்; சிறைப்பட்டுப் பரதேசம் போவார்கள். | எரே 15:2 எரே 52:15 எரே 52:28-30 |
| 12 | அவர்கள் நடுவில் இருக்கிற அதிபதி மாலைமயங்கும்போது தோளின்மேல் சுமைசுமந்து புறப்படுவான்; வெளியே சுமைகொண்டுபோகச் சுவரிலே துவாரமிடுவார்கள்; கண்ணினாலே அவன் தன் தேசத்தைக் காணாதபடி தன் முகத்தை மூடிக்கொள்வான். | எசே 12:6 2இரா 25:4 எரே 39:4 எரே 42:7 |
| 13 | நான் என் வலையை அவன்மேல் வீசுவேன், அவன் என் கண்ணியிலே பிடிபடுவான்; அவனைக் கல்தேயர் தேசமாகிய பாபிலோனுக்குக் கொண்டுபோவேன்; அங்கே அவன் சாவான்; ஆகிலும் அதைக் காணமாட்டான். | எசே 17:16 எசே 17:20 எசே 19:8 எசே 19:9 எசே 32:3 யோபு 19:6 சங் 11:6 ஏசா 24:17 ஏசா 24:18 எரே 50:24 புலம் 1:13 புலம் 3:47 புலம் 4:19 புலம் 4:20 ஓசி 7:12 லூக் 21:35 |
| 14 | அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கிற யாவரையும் அவனுடைய எல்லா இராணுவங்களையும் நான் சகல திசைகளிலும் தூற்றி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன். | எசே 5:10-12 எசே 17:21 2இரா 25:4 2இரா 25:5 |
| 15 | அப்படி நான் அவர்களை ஜாதிகளுக்குள்ளே தூற்றி, அவர்களை தேசங்களிலே சிதறடிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். | எசே 12:16 எசே 12:20 எசே 5:13 எசே 6:7 எசே 6:14 எசே 7:4 எசே 11:10 எசே 24:27 எசே 25:11 எசே 26:6 எசே 28:26 எசே 33:33 எசே 39:28 எசே 14:18 சங் 9:16 |
| 16 | ஆனாலும் தாங்கள் போய்ச்சேரும் ஜாதிகளுக்குள்ளே தங்கள் அருவருப்புகளையெல்லாம் விவரிக்கும்படி, நான் அவர்களில் கொஞ்சம்பேரைப் பஞ்சத்துக்கும் பட்டயத்துக்கும் கொள்ளைநோய்க்கும் தப்பி மீந்திருக்கப்பண்ணுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார். | எசே 6:8-10 எசே 14:22 எசே 14:23 ஏசா 1:9 ஏசா 6:13 ஏசா 10:22 ஏசா 24:13 எரே 4:27 எரே 30:11 ஆமோ 9:8 ஆமோ 9:9 மத் 7:14 மத் 24:22 ரோம 11:4 ரோம 11:5 |
| 17 | பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 18 | மனுபுத்திரனே, நீ உன் அப்பத்தை நடுக்கத்தோடே புசித்து, உன் தண்ணீரைத் தத்தளிப்போடும் விசாரத்தோடும் குடித்து, | எசே 4:16 எசே 4:17 எசே 23:33 லேவி 26:26 லேவி 26:36 உபா 28:48 உபா 28:65 யோபு 3:24 சங் 60:2 சங் 60:3 சங் 80:5 சங் 102:4-9 |
| 19 | தேசத்திலுள்ள ஜனங்களை நோக்கி: இஸ்ரவேல் தேசத்திலுள்ள எருசலேமின் குடிகளைக் குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், தங்கள் அப்பத்தை விசாரத்தோடே புசித்து, தங்கள் தண்ணீரைத் திகிலோடே குடிப்பார்கள்; அவர்களுடைய தேசத்துக் குடிகளுடைய கொடுமைகளினிமித்தம் அதிலுள்ளதெல்லாம் அழிய, அது பாழாகும். | 1இரா 17:10-12 |
| 20 | குடியேறியிருக்கிற பட்டணங்கள் வனாந்தரங்களாகி, தேசம் பாழாய்ப்போகும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார். | எசே 15:6 எசே 15:8 ஏசா 3:26 ஏசா 7:23 ஏசா 7:24 ஏசா 24:3 ஏசா 24:12 ஏசா 64:10 ஏசா 64:11 எரே 4:7 எரே 4:23-29 எரே 12:10-12 எரே 16:9 எரே 19:11 எரே 24:8-10 எரே 25:9 எரே 34:22 புலம் 5:18 தானி 9:17 |
| 21 | பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 22 | மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன? | எசே 18:2 எசே 18:3 எரே 23:33-40 |
| 23 | ஆகையால் நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், அவர்கள் இனி இஸ்ரவேலிலே இந்தப் பழமொழியைச் சொல்லி வராதபடிக்கு நான் அதை ஒழியப்பண்ணுவேன்; நாட்களும் எல்லாத் தரிசனத்தின் பொருளும் சமீபித்து வந்தன என்று அவர்களோடே சொல்லு. | எசே 18:3 ஏசா 28:22 |
| 24 | இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவில் இனிச்சகல கள்ளத்தரிசனமும் முகஸ்துதியான குறிசொல்லுதலும் இராமற்போகும். | எசே 13:23 1இரா 22:11-13 1இரா 22:17-13 நீதி 26:28 எரே 14:13-16 எரே 23:14-29 புலம் 2:14 சகரி 13:2-4 ரோம 16:18 1தெச 2:5 2பேது 2:2 2பேது 2:3 |
| 25 | நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார். | எசே 12:28 எசே 6:10 எண் 14:28-34 ஏசா 14:24 ஏசா 55:11 புலம் 2:17 தானி 9:12 சகரி 1:6 மத் 24:35 லூக் 21:13 லூக் 21:33 |
| 26 | பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 27 | மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள். | எசே 12:22 ஏசா 28:14 ஏசா 28:15 தானி 10:14 2பேது 3:4 |
| 28 | ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார். | எசே 12:23-25 எரே 4:7 எரே 44:28 மத் 24:48-51 மாற் 13:32-37 லூக் 21:34-36 1தெச 5:2 1தெச 5:3 வெளிப் 3:3 |