| 1 | பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு முகமாயிருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து புருஷர் இருந்தார்கள்; அவர்களின் நடுவே ஜனத்தின் பிரபுக்களாகிய ஆசூரின் குமாரனாகிய யசனியாவையும், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியாவையும் கண்டேன். | எசே 11:24 எசே 3:12 எசே 3:14 எசே 8:3 எசே 37:1 எசே 40:1 எசே 40:2 எசே 41:1 1இரா 18:12 2இரா 2:16 அப் 8:39 2கொரி 12:1-4 வெளிப் 1:10 |
| 2 | அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இவர்கள் இந்த நகரத்திலே அக்கிரமமான நினைவுகளை நினைத்து, துராலோசனை சொல்லுகிற மனுஷர். | எஸ்தர் 8:3 சங் 2:1 சங் 2:2 சங் 36:4 சங் 52:2 ஏசா 30:1 ஏசா 59:4 எரே 5:5 எரே 18:18 மீகா 2:1 மீகா 2:2 |
| 3 | இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள். | எசே 7:7 எசே 12:22 எசே 12:27 ஏசா 5:19 எரே 1:11 எரே 1:12 ஆமோ 6:5 2பேது 3:4 |
| 4 | ஆகையால் அவர்களுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனஞ்சொல்லு, மனுபுத்திரனே, தீர்க்கதரிசனஞ்சொல்லு என்றார். | எசே 3:2-15 எசே 3:17-21 எசே 20:46 எசே 20:47 எசே 21:2 எசே 25:2 ஏசா 58:1 ஓசி 6:5 ஓசி 8:1 |
| 5 | அப்பொழுது கர்த்தருடைய ஆவி என்மேல் இறங்கினார்; அவர் என்னை நோக்கி: நீ சொல்லவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் இப்படிப் பேசுகிறது உண்டு; உங்கள் மனதில் எழும்புகிறதை நான் அறிவேன். | எசே 2:2 எசே 3:24 எசே 3:27 எசே 8:1 எண் 11:25 எண் 11:26 1சாமு 10:6 1சாமு 10:10 அப் 10:44 அப் 11:15 |
| 6 | இந்த நகரத்தில் நீங்கள் அநேகரைக் கொலைசெய்தீர்கள்; அதின் வீதிகளைக் கொலையுண்டவர்களால் நிரப்பினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எசே 7:23 எசே 9:9 எசே 22:2-6 எசே 22:9-6 எசே 22:12-6 எசே 22:27-6 எசே 24:6-9 2இரா 21:16 ஏசா 1:15 எரே 2:30 எரே 2:34 எரே 7:6 எரே 7:9 புலம் 4:13 ஓசி 4:2 ஓசி 4:3 மீகா 3:2 மீகா 3:3 மீகா 3:10 மீகா 7:2 செப் 3:3 மத் 23:35 |
| 7 | ஆகையால் நீங்கள் கொலைசெய்து, அதின் நடுவிலே போட்டுவிட்டவர்களே இறைச்சியும், இந்த நகரம் பானையுமாமே; உங்களையோ அதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். | எசே 24:3-13 மீகா 3:2 மீகா 3:3 |
| 8 | பட்டயத்துக்குப் பயப்பட்டீர்கள், பட்டயத்தையே உங்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். | யோபு 3:25 யோபு 20:24 நீதி 10:24 ஏசா 24:17 ஏசா 24:18 ஏசா 30:16 ஏசா 30:17 ஏசா 66:4 எரே 38:19-23 எரே 42:14-16 எரே 44:12 எரே 44:13 ஆமோ 9:1-4 யோவா 11:48 1தெச 2:15 1தெச 2:16 |
| 9 | நான் உங்களை அதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்கி, உங்களை அந்நியரின் கையில் ஒப்புக்கொடுத்து, உங்களில் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவேன். | எசே 21:31 உபா 28:36 உபா 28:49 உபா 28:50 2இரா 24:4 நெகே 9:36 நெகே 9:37 சங் 106:41 எரே 5:15-17 எரே 39:6 |
| 10 | பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். | 2இரா 25:19-21 எரே 39:6 எரே 52:9 எரே 52:10 எரே 52:24-27 |
| 11 | இந்த நகரம் உங்களுக்குப் பானையாயிருப்பதுமில்லை நீங்கள் அதிலுள்ள இறைச்சியாயிருப்பதுமில்லை; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன். | எசே 11:3 எசே 11:7-10 |
| 12 | என் கட்டளையின்படி நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார். | எசே 11:21 எசே 20:16 எசே 20:21 எசே 20:24 லேவி 26:40 1இரா 11:33 2இரா 21:22 எஸ்றா 9:7 நெகே 9:34 சங் 78:10 எரே 6:16 தானி 9:10 |
| 13 | நான் இப்படித் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியா செத்தான்; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து, மகா சத்தமாய்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களைச் சர்வசங்காரஞ்செய்வீரோ என்று முறையிட்டேன். | எசே 11:1 எசே 37:7 எண் 14:35-37 உபா 7:4 1இரா 13:4 நீதி 6:15 எரே 28:15-17 ஓசி 6:5 அப் 5:5 அப் 5:10 அப் 13:11 |
| 14 | அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 15 | மனுபுத்திரனே, நீங்கள் கர்த்தரைவிட்டுத் தூரமாய்ப்போங்கள், எங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டதென்று, உன் சகோதரருக்கும், உன் குடும்பத்தாருக்கும், உன் பந்து ஜனங்களுக்கும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும், எருசலேமின் குடிகள் சொல்லுகிறார்கள். | எரே 24:1-5 |
| 16 | ஆகையால் நான் அவர்களைத் தூரமாகப் புறஜாதிகளுக்குள்ளே துரத்தியிருந்தாலும், நான் அவர்களை தேசங்களிலே சிதறடித்திருந்தாலும், நான் அவர்கள் போன தேசங்களில் அவர்களுக்குக் கொஞ்சகாலத்துக்குப் பரிசுத்த ஸ்தலமாக இருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல். | லேவி 26:44 உபா 30:3 உபா 30:4 2இரா 24:12-16 சங் 44:11 எரே 24:5 எரே 24:6 எரே 30:11 எரே 31:10 |
| 17 | ஆதலால் நான் உங்களை ஜனங்களிடத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு. | எசே 28:25 எசே 34:13 எசே 36:24 எசே 37:21-28 எசே 39:27-29 ஏசா 11:11-16 எரே 3:12 எரே 3:18 எரே 24:5 எரே 30:10 எரே 30:11 எரே 30:18 எரே 31:8-10 எரே 32:37-41 ஓசி 1:10 ஓசி 1:11 ஆமோ 9:14 ஆமோ 9:15 |
| 18 | அவர்கள் அங்கே வந்து, அதில் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாயிருக்கிறதையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள். | எசே 11:21 எசே 5:11 எசே 7:20 எசே 37:23 எசே 42:7 எசே 42:8 ஏசா 1:25-27 ஏசா 30:22 எரே 16:18 ஓசி 14:8 மீகா 5:10-14 கொலோ 3:5-8 தீத் 2:12 |
| 19 | அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன். | எசே 36:26 எசே 36:27 உபா 30:6 2நாளா 30:12 எரே 24:7 எரே 32:39 எரே 32:40 செப் 3:9 யோவா 17:21-23 அப் 4:32 1கொரி 1:10 எபே 4:3-6 பிலிப் 2:1-5 |
| 20 | அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன். | எசே 11:12 சங் 105:45 சங் 119:4 சங் 119:5 சங் 119:32 லூக் 1:6 லூக் 1:74 லூக் 1:75 ரோம 16:26 1கொரி 11:2 தீத் 2:11 தீத் 2:12 |
| 21 | ஆனாலும் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்கள் இருதயத்தின் இச்சையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். | பிரச 11:9 எரே 17:9 மாற் 7:21-23 எபிரெ 3:12 எபிரெ 3:13 எபிரெ 10:38 யாக் 1:14 யாக் 1:15 யூதா 1:19 |
| 22 | அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது. | எசே 1:19 எசே 1:20 எசே 10:19 |
| 23 | கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது. | எசே 8:4 எசே 9:3 எசே 10:4 எசே 10:18 எசே 43:4 சகரி 14:4 மத் 23:37-39 மத் 24:1 மத் 24:2 |
| 24 | பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டுபோய்விட்டார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுபட்டுப்போயிற்று. | எசே 11:1 எசே 8:3 2இரா 2:16 2கொரி 12:3 |
| 25 | கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன். | எசே 2:7 எசே 3:4 எசே 3:17 எசே 3:27 |