| 1 | பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க் கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சங்காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது. | யோசு 15:63 யோசு 18:21-28 நியா 1:21 |
| 2 | செல்வமாய் வளர்ந்த ரூபவதியான சீயோன் குமாரத்தியைப் பாழாக்குவேன். | எரே 4:31 ஏசா 1:8 ஏசா 3:16 ஏசா 3:17 புலம் 2:1 புலம் 2:13 |
| 3 | மேய்ப்பர் தங்கள் மந்தைகளோடே அவளிடத்துக்கு வருவார்கள்; அவர்கள் அவளுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் கூடாரம்போட்டு, அவனவன் தன் தன் ஸ்தலத்தில் மேய்த்து, | நாகூ 3:18 |
| 4 | அவளுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்ய ஆயத்தம்பண்ணுங்கள் என்றும், மத்தியானத்தில்தானே நாம் போயேறும்படிக்கு எழுந்திருங்கள்; ஐயோ! பொழுது சாய்ந்து, அந்தி நிழல்கள் நீண்டுபோகிறதே; | எரே 5:10 எரே 51:27 எரே 51:28 ஏசா 5:26-30 ஏசா 13:2-5 யோவே 3:9 |
| 5 | எழுந்திருங்கள், நாம் இராக்காலத்திலாகிலும் போயேறி, அவளுடைய அரமனைகளை அழிப்போம் என்றும் சொல்லுவார்கள். | எரே 9:21 எரே 17:27 எரே 52:13 2நாளா 36:19 சங் 48:3 ஏசா 32:14 ஓசி 8:14 ஆமோ 2:5 ஆமோ 3:10 ஆமோ 3:11 சகரி 11:1 |
| 6 | சேனைகளுடைய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், மரங்களை வெட்டி, எருசலேமுக்கு விரோதமாய்க் கொத்தளம் போடுங்கள்; அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை. |
| 7 | ஊற்றானது, தன் தண்ணீரைச் சுரக்கப்பண்ணுமாப்போல, அது தன் தீங்கைச் சுரக்கப்பண்ணுகிறது; அதிலே கொடுமையும் அழிம்பும் கேட்கப்படுகிறது; துக்கமும் காயங்களும் நித்தமும் எனக்கு முன்பாகக் காணப்படுகிறது. | நீதி 4:23 ஏசா 57:20 யாக் 3:10-12 |
| 8 | எருசலேமே, என் ஆத்துமா உன்னை விட்டுப் பிரியாதபடிக்கும், நான் உன்னைப் பாழும் குடியற்ற தேசமும் ஆக்காதபடிக்கும் புத்திகேள். | எரே 4:14 எரே 7:3-7 எரே 17:23 எரே 31:19 எரே 32:33 எரே 35:13-15 உபா 32:29 சங் 2:10 சங் 50:17 சங் 94:12 நீதி 4:13 செப் 3:7 |
| 9 | திராட்சக்குலைகளை அறுக்கிறவனைப்போல உன் கையைத் திரும்பக் கூடைகளின்மேல் போடென்று சொல்லி, அவர்கள் இஸ்ரவேலின் மீதியாயிருந்த கனியைத் திராட்சச்செடியின் கனியைப்போல் நன்றாய்ப் பொறுக்கிக்கொண்டுபோவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | எரே 16:16 எரே 49:9 எரே 52:28-30 ஒபதி 1:5 ஒபதி 1:6 வெளிப் 14:18 |
| 10 | அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை. | எரே 5:4 எரே 5:5 ஏசா 28:9-13 ஏசா 53:1 |
| 11 | ஆகையால் நான் கர்த்தருடைய உக்கிரத்தால் நிறைந்திருக்கிறேன்; அதை அடக்கி இளைத்துப்போனேன்; வீதிகளிலுள்ள பிள்ளைகளின்மேலும், வாலிபருடைய கூட்டத்தின்மேலும் ஏகமாய் அதை ஊற்றிவிடுவேன்; புருஷரும், ஸ்திரீகளும், கிழவரும், பூரணவயதுள்ளவர்களுங்கூடப் பிடிக்கப்படுவார்கள். | எரே 20:9 யோபு 32:18 யோபு 32:19 எசே 3:14 மீகா 3:8 அப் 4:20 அப் 17:16 அப் 18:5 |
| 12 | அவர்களுடைய வீடுகளும், அவர்களுடைய காணிபூமிகளும், அவர்களுடைய மனைவிகளோடே ஏகமாய் அந்நியர்வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிகளுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 8:10 உபா 28:30-33 உபா 28:39-43 ஏசா 65:21 ஏசா 65:22 புலம் 5:3 புலம் 5:11 செப் 1:13 |
| 13 | அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்மட்டும், ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்மட்டும் ஒவ்வொருவரும் பொய்யர். | எரே 8:10 எரே 14:18 எரே 22:17 எரே 23:11 ஏசா 56:9-12 ஏசா 57:17 எசே 22:12 எசே 33:31 மீகா 2:1 மீகா 2:2 மீகா 3:2 மீகா 3:3 மீகா 3:5 மீகா 3:11 செப் 3:3 செப் 3:4 லூக் 16:14 1தீமோ 3:3 2பேது 2:3 2பேது 2:14 2பேது 2:15 |
| 14 | சமாதானமில்லாதிருந்தும்: சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள். | எரே 8:11 எரே 8:12 எசே 13:10 |
| 15 | அவர்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களோ? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆதலால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 3:3 எரே 8:12 ஏசா 3:9 |
| 16 | வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள். | எரே 18:15 உபா 32:7 உன்ன 1:7 உன்ன 1:8 ஏசா 8:20 மல்கி 4:4 லூக் 16:29 யோவா 5:39 யோவா 5:46 யோவா 5:47 அப் 17:11 ரோம 4:1-6 ரோம 4:12-6 எபிரெ 6:12 எபிரெ 11:2-40 எபிரெ 12:1 |
| 17 | நான் உங்கள்மேல் காவலாளரையும் வைத்து, எக்காள சத்தத்துக்குச் செவிகொடுங்கள் என்றும் சொன்னேன்; அவர்களோ: நாங்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள். | எரே 25:4 ஏசா 21:11 ஏசா 56:10 எசே 3:17-21 எசே 33:2-9 ஆபகூ 2:1 அப் 20:27-31 எபிரெ 13:17 |
| 18 | ஆகையால் ஜாதிகளே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள். | எரே 4:10 எரே 31:10 உபா 29:24-28 சங் 50:4-6 ஏசா 5:3 மீகா 6:5 |
| 19 | பூமியே, கேள்; இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து, என் நியாயப்பிரமாணத்துக்குச் செவிகொடாமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரப்பண்ணுவேன். | எரே 22:29 உபா 4:26 உபா 30:19 உபா 32:1 ஏசா 1:2 மீகா 6:2 |
| 20 | சேபாவிலிருந்து வருகிற தூபவர்க்கமும், தூரதேசத்தினுடைய சுகந்தப்பட்டையும் எனக்கு என்னத்துக்கு? உங்கள் சர்வாங்கதகனங்கள் எனக்கு விருப்பமல்ல; உங்கள் பலிகள் எனக்கு இன்பமாயிராது. | சங் 40:6 சங் 50:7-13 சங் 50:16-13 சங் 50:17-13 சங் 66:3 ஏசா 1:11 ஏசா 66:3 எசே 20:39 ஆமோ 5:21 ஆமோ 5:22 மீகா 6:6-8 |
| 21 | ஆகையால் இதோ, நான் இந்த ஜனத்துக்கு இடறல்களை வைப்பேன்; அவைகள்மேல் பிதாக்களும், பிள்ளைகளும், குடியானவனும், அவனுக்கடுத்தவனும், ஏகமாய் இடறுண்டு அழிவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 13:16 ஏசா 8:14 எசே 3:20 ரோம 9:33 ரோம 11:9 1பேது 2:8 |
| 22 | இதோ, வடதேசத்திலிருந்து ஒரு ஜனம் வந்து, பூமியின் கடையெல்லைகளிலிருந்து ஒரு பெரிய ஜாதி எழும்பும். | எரே 6:1 எரே 1:14 எரே 1:15 எரே 5:15 எரே 10:22 எரே 25:9 எரே 50:41-43 |
| 23 | அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் கொடியர், இரக்கம் அறியாதவர்கள்; அவர்கள் சத்தம் சமுத்திர இரைச்சலுக்குச் சமானமாயிருக்கும்; சீயோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தசந்நத்தராய்க் குதிரைகளின்மேலேறி அணியணியாக வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 5:16 எரே 50:42 ஏசா 13:18 எசே 23:22-25 ஆபகூ 1:6-10 |
| 24 | அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம்; நம்முடைய கைகள் தளர்ந்தது; இடுக்கணும், கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனைக்கொப்பான வேதனையும் நம்மைப் பிடித்தது. | எரே 4:6-9 எரே 4:19-21 ஏசா 28:19 எசே 21:6 எசே 21:7 ஆபகூ 3:16 |
| 25 | வயல்வெளியிலே புறப்படாதிருங்கள்; வழியிலும் நடவாதிருங்கள்; சுற்றிலும் சத்துருவின் பட்டயமும் பயங்கரமுமுண்டு. | எரே 4:5 எரே 8:14 எரே 14:18 நியா 5:6 நியா 5:7 |
| 26 | என் ஜனமாகிய குமாரத்தியே, நீ இரட்டைக் கட்டிக்கொண்டு, சாம்பலிலே புரண்டு, ஒரே புத்திரனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு; பாழாக்குகிறவன் சடிதியாய் நம்மேல் வருவான். | எரே 6:14 எரே 4:11 எரே 8:19 எரே 8:21 எரே 8:22 எரே 9:1 எரே 14:17 ஏசா 22:4 புலம் 2:11 புலம் 3:48 புலம் 4:3 புலம் 4:6 புலம் 4:10 |
| 27 | நீ என் ஜனத்தின் வழியை அறிந்துகொள்ளவும் சோதித்துப்பார்க்கவும் நான் உன்னை அவர்களுக்குள்ளே துருகமாகவும், அரணாகவும் வைத்தேன். | எரே 1:18 எரே 15:20 எசே 3:8-10 எசே 20:4 எசே 22:2 |
| 28 | அவர்களெல்லாரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லாரும் கெட்டவர்கள். | எரே 5:23 ஏசா 1:5 ஏசா 31:6 |
| 29 | துருத்தி வெந்தது; ஈயம் நெருப்பினால் அழிந்தது; புடமிடுகிறவனுடைய பிரயாசம் விருதாவாய்ப்போயிற்று; பொல்லாப்புகள் அற்றுப்போகவில்லை. | எரே 9:7 நீதி 17:3 சகரி 13:9 மல்கி 3:2 மல்கி 3:3 1பேது 1:7 1பேது 4:12 |
| 30 | அவர்கள் தள்ளுபடியான வெள்ளி என்னப்படுவார்கள்; கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார். | சங் 119:119 நீதி 25:4 ஏசா 1:22 ஏசா 1:25 எசே 22:18 எசே 22:19 மத் 5:13 |