| 1 | நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன். | 2நாளா 16:9 தானி 12:4 யோவே 2:9 ஆமோ 8:12 சகரி 2:4 |
| 2 | அவர்கள்: கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறோம் என்றாலும், பொய்யாணையிடுகிறார்களே. | எரே 4:2 எரே 7:9 லேவி 19:12 ஏசா 48:1 ஓசி 4:1 ஓசி 4:2 ஓசி 4:15 ஓசி 10:4 சகரி 5:3 சகரி 5:4 மல்கி 3:5 1தீமோ 1:10 2தீமோ 3:5 தீத் 1:16 |
| 3 | கர்த்தாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது; அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு நோகாது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்; தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி, திரும்பமாட்டோம் என்கிறார்கள். | எரே 32:19 2நாளா 16:9 சங் 11:4-7 சங் 51:6 நீதி 22:12 ரோம 2:2 |
| 4 | அப்பொழுது நான்: இவர்கள் நீசராமே, இவர்கள் மதியற்றவர்கள்; கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்; | எரே 4:22 எரே 7:8 எரே 8:7 ஏசா 27:11 ஏசா 28:9-13 ஓசி 4:6 மத் 11:5 யோவா 7:48 யோவா 7:49 |
| 5 | நான் பெரியோர்களிடத்திலே போய், அவர்களோடே பேசுவேன்; அவர்கள் கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்கள் என்று சொன்னேன்; அவர்களோ ஏகமாய் நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள். | ஆமோ 4:1 மீகா 3:1 மல்கி 2:7 |
| 6 | ஆகையால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களைக் கொல்லும், வனாந்தரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும், சிவிங்கி அவர்கள் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருக்கும்; அவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான்; அவர்கள் மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது. | எரே 2:15 எரே 4:7 எரே 25:38 எரே 49:19 எசே 14:16-21 தானி 7:4 ஓசி 5:14 ஓசி 13:7 ஓசி 13:8 ஆமோ 5:18 ஆமோ 5:19 நாகூ 2:11 நாகூ 2:12 |
| 7 | இவைகளை நான் உனக்கு மன்னிப்பது எப்படி? உன் பிள்ளைகள் என்னை விட்டுவிட்டு, தெய்வம் அல்லாதவைகள் பேரில் ஆணையிடுகிறார்கள்; நான் திருப்தியாக்கின அவர்கள் விபசாரம்பண்ணி, வேசிவீட்டிலே கூட்டங்கூடுகிறார்கள். | எரே 3:19 ஓசி 11:8 மத் 23:37 மத் 23:38 |
| 8 | அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல் காலமே எழும்பி, அவனவன் தன்தன் அயலானுடைய பெண்ஜாதியின் பின்னாலே கனைக்கிறான். | எரே 13:27 ஆதி 39:9 யாத் 20:14 யாத் 20:17 உபா 5:18 உபா 5:21 2சாமு 11:2-4 யோபு 31:9 மத் 5:27 மத் 5:28 |
| 9 | இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 5:29 எரே 9:9 எரே 23:2 புலம் 4:22 ஓசி 2:13 ஓசி 8:13 |
| 10 | அதின் மதில்கள்மேலேறி அழித்துப்போடுங்கள்; ஆனாலும் சர்வசங்காரம் செய்யாதிருங்கள்; அதின் கொத்தளங்களை இடித்துப்போடுங்கள்; அவைகள் கர்த்தருடையவைகள் அல்ல. | எரே 6:4-6 எரே 25:9 எரே 39:8 எரே 51:20-23 2இரா 24:2-4 2நாளா 36:17 ஏசா 10:5-7 ஏசா 13:1-5 எசே 9:5-7 எசே 14:17 மத் 22:7 |
| 11 | இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம் பண்ணினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 3:6-11 எரே 3:20-11 ஏசா 48:8 ஓசி 5:7 ஓசி 6:7 |
| 12 | அவர் அப்படிப்பட்டவர் அல்லவென்றும், பொல்லாப்பு நம்மேல் வராது, நாம் பட்டயத்தையாகிலும், பஞ்சத்தையாகிலும் காண்பதில்லையென்றும், | எரே 5:31 எரே 4:10 எரே 14:13 எரே 14:14 எரே 23:14-17 எரே 28:15-17 எரே 43:2 எரே 43:3 உபா 29:19 1சாமு 6:9 2நாளா 36:16 ஏசா 28:14 ஏசா 28:15 எசே 12:22-28 எசே 13:6 மீகா 2:11 மீகா 3:11 ஆபகூ 1:5 ஆபகூ 1:6 1யோவா 5:10 |
| 13 | தீர்க்கதரிசிகள் காற்றாய்ப்போவார்கள்; திருவாக்கு அவர்களில் இல்லை; அவர்களுக்கே அப்படி ஆகக்கடவதென்றும், அவர்கள் சொல்லிக் கர்த்தரை மறுதலித்தார்கள். | எரே 14:13 எரே 14:15 எரே 18:18 எரே 20:8-11 எரே 28:3 யோபு 6:26 யோபு 8:2 ஓசி 9:7 |
| 14 | ஆகையால் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும். | எரே 1:9 எரே 23:29 எரே 28:15-17 2இரா 1:10-14 ஓசி 6:5 சகரி 1:6 வெளிப் 11:5 வெளிப் 11:6 |
| 15 | இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது பூர்வகாலத்து ஜாதி, அவர்கள் நீ அறியாத பாஷையைப் பேசும் ஜாதி, அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது. | எரே 1:15 எரே 4:16 எரே 6:22 எரே 25:9 உபா 28:49 ஏசா 5:26 ஏசா 29:3 ஏசா 29:6 |
| 16 | திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்பறாத்தூணிகள் இருக்கும்; அவர்கள் அனைவரும் பராக்கிரமசாலிகள். | சங் 5:9 ஏசா 5:28 ரோம 3:13 |
| 17 | அவர்கள் உன் குமாரரும் உன் குமாரத்திகளும் சாப்பிடவேண்டிய உன் விளைச்சலையும், உன் அப்பத்தையும் சாப்பிட்டு, உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் பட்சித்து, உன் திராட்சப்பழங்களையும் உன் அத்திப்பழங்களையும் சாப்பிட்டு, நீ நம்பின உன்னுடைய அரணான பட்டணங்களைப் பட்டயத்தாலே வெறுமையாக்குவார்கள். | லேவி 26:16 உபா 28:30 உபா 28:31 உபா 28:33 நியா 6:3 நியா 6:4 ஏசா 62:9 ஏசா 65:22 ஆபகூ 3:17 ஆபகூ 3:18 |
| 18 | ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களைச் சர்வசங்காரம் செய்யாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 5:10 எரே 4:27 எசே 9:8 எசே 11:13 ரோம 11:1-5 |
| 19 | எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இவைகளையெல்லாம் எதினிமித்தம் செய்தார் என்று நீங்கள் கேட்டால், அப்பொழுது நீ அவர்களைப் பார்த்து: நீங்கள் என்னைவிட்டு, உங்களுடைய தேசத்திலே அந்நிய தேவர்களைச் சேவித்ததுபோல, உங்களுடையதல்லாத தேசத்திலே அந்நியர்களைச் சேவிப்பீர்களென்று சொல்வாயாக. | எரே 2:35 எரே 13:22 எரே 16:10 எரே 22:8 எரே 22:9 உபா 29:24-28 1இரா 9:8 1இரா 9:9 2நாளா 7:21 2நாளா 7:22 |
| 20 | நீங்கள் யாக்கோபின் வீட்டிலே அறிவித்து, யூதாவிலே சொல்லிக் கூறவேண்டியது என்னவென்றால், |
| 21 | கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கேளாமலுமிருக்கிற அறிவில்லாத ஜனங்களே, கேளுங்கள். | எரே 5:4 எரே 4:22 எரே 8:7 எரே 10:8 உபா 29:4 உபா 32:6 சங் 94:8 ஏசா 6:9 ஏசா 6:10 ஏசா 27:11 ஏசா 44:18 எசே 12:2 மத் 13:13-15 யோவா 12:40 அப் 28:26 ரோம 11:8 |
| 22 | எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ? | எரே 10:7 உபா 28:58 சங் 119:120 மத் 10:28 லூக் 12:5 வெளிப் 15:4 |
| 23 | இந்த ஜனங்களோ முரட்டாட்டமும் கலகமுமான இருதயமுள்ளவர்கள்; முரட்டாட்டம்பண்ணிப் போய்விடுகிறார்கள். | எரே 5:5 எரே 6:28 எரே 17:9 சங் 95:10 ஏசா 1:5 ஏசா 31:6 ஓசி 4:8 ஓசி 11:7 எபிரெ 3:12 |
| 24 | அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை. | எரே 5:22 எரே 50:5 ஏசா 64:7 ஓசி 3:5 ஓசி 6:1 |
| 25 | உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது. | எரே 2:17-19 எரே 3:3 உபா 28:23 உபா 28:24 சங் 107:17 சங் 107:34 ஏசா 59:2 புலம் 3:39 புலம் 4:22 |
| 26 | குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறதுபோல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள். | எரே 4:22 ஏசா 58:1 எசே 22:2-12 |
| 27 | குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி ஐசுவரியவான்களாகிறார்கள். | வெளிப் 18:2 |
| 28 | கொழுத்து, சளுக்குப்பண்ணுகிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீரார்கள். | உபா 32:15 யோபு 15:27 யோபு 15:28 யோபு 21:23 யோபு 21:24 சங் 73:6 சங் 73:7 சங் 73:12 சங் 119:70 ஆமோ 4:1 யாக் 5:4 யாக் 5:5 |
| 29 | இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 5:9 எரே 9:9 மல்கி 3:5 யாக் 5:4 |
| 30 | திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்திலே நடந்துவருகிறது. | எரே 2:12 எரே 23:14 ஏசா 1:2 ஓசி 6:10 |
| 31 | தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்ன செய்வீர்கள்? | எரே 14:14 எரே 23:25 எரே 23:26 புலம் 2:14 எசே 13:6 மீகா 3:11 மத் 7:15-17 2கொரி 11:13-15 2பேது 2:1 2பேது 2:2 |